முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உ.பி. கும்பமேளா ஏற்பாடுகள் குறித்து ஆய்வு: டிச. 13-ல் பிரதமர் மோடி பிரயாக்ராஜ் செல்கிறார் : 3,000 சிறப்பு ரயில்கள் இயக்கம்

சனிக்கிழமை, 23 நவம்பர் 2024      இந்தியா
Modi 2024-01-17

Source: provided

புதுடெல்லி : உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் வரும் ஜனவரியில் தொடங்கும் மகா கும்பமேளா ஏற்பாடுகளை ஆய்வு செய்ய பிரதமர்  மோடி டிசம்பர் 13-ம் தேதி பிரயாக்ராஜ் செல்கிறார். இந்த  கும்பமேளாவுக்கு நாடு முழுவதிலும் இருந்து சுமார் 3,000 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

உ.பி.யின் பிரயாக்ராஜில் ஒவ்வொரு வருடமும் கும்பமேளாவும் 12 வருடங்களுக்கு ஒருமுறை மகா கும்பமேளாவும் நடைபெறுகிறது. இந்நிலையில் வரும் 2025-ம் ஆண்டு ஜனவரியில் மகா கும்பமேளா தொடங்க உள்ளது.

இதையொட்டி முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க. அரசு ரூ.4 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்து, விரிவான ஏற்பாடுகளை செய்து வருகிறது.  மகா கும்பமேளாவுக்கு நாடு முழுவதிலும் இருந்து சுமார் 45 கோடி பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களது வசதிக்காக வழக்கமான 10,100 ரயில்களுடன் 2,917 சிறப்பு ரயில்களை ரயில்வே துறை இயக்க உள்ளது.

மொத்தம் 13,017 ரயில்கள் பிரயாக்ராஜுக்கு வந்து செல்லவிருக்கின்றன. உ.பி. முதல்வர் யோகிக்கு ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் எழுதிய கடிதத்தில் இத்தகவலை கூறியுள்ளார்.

மகா கும்பமேளா சிறப்பு ரயில்கள் தமிழகத்தில்  சென்னை மற்றும் கன்னியாகுமரியில் இருந்தும் புறப்பட உள்ளன. இந்த சிறப்பு ரயில்கள் அனைத்தும் மகா கும்பமேளாவின் மவுனி அமாவாசை உள்ளிட்ட முக்கிய தினங்களில் இயங்க உள்ளன.

இதற்கிடையில் மகா கும்பமேளா ஏற்பாடுகளை ஆய்வு செய்ய பிரதமர்  மோடி டிசம்பர் 13-ம் தேதி பிரயாக்ராஜ் செல்கிறார். அப்போது சில முக்கிய திட்டங்களையும் அவர் தொடங்கி வைக்கிறார்.

முன்னதாக பிரயாக்ராஜ் அருகிலுள்ள ஷிருங்வேர்பூர் மடத்திற்கு பிரதமர் மோடி செல்கிறார். இந்த மடமானது, ராமாயணத்தில் ராமரை படகில் அழைத்துச் சென்ற நிஷாத்ராஜ் எனும் குகன் பெயரில் செயல்படுகிறது. 

இங்கு குகனுடன் இணைந்த ராமரின் பிரம்மாண்ட சிலையை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். ஷிருங்வேர்பூரில் இருந்து பிரதமர் மோடி, கங்கை நதி வழியாக க்ரூஸர் வகை சிறிய கப்பலில் பிரயாக்ராஜுக்கு பயணிக்கிறார். பிரயாக்ராஜின் கங்கை ஆரத்தி நிகழ்ச்சியிலும் பிரதமர் கலந்து கொள்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து