முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சபரிமலைக்கு தமிழக திருக்கோவில்கள் சார்பில் பிஸ்கெட் பாக்கெட், பிளாஸ்க்குகள் : அமைச்சர் சேகர்பாபு அனுப்பி வைத்தார்

சனிக்கிழமை, 23 நவம்பர் 2024      தமிழகம்
Shekar-Babu 2024-11-23

Source: provided

சென்னை : தமிழக  திருக்கோவில்கள் சார்பில் சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கு வழங்குவதற்காக முதல்கட்டமாக பிஸ்கெட் பாக்கெட்டுகள் மற்றும் பிளாஸ்க்குகளை அனுப்பி வைக்கும் பணியினை அமைச்சர் சேகர்பாபு நேற்று தொடங்கி வைத்தார்.

சென்னையில் உள்ள பாடி, படவேட்டம்மன் திருக்கோயில் வளாகத்தில் தமிழக திருக்கோவில்கள் மற்றும் உபயதாரர்கள் சார்பில் சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கு வழங்குவதற்காக முதற்கட்டமாக, 5 லட்சம் பிஸ்கெட் பாக்கெட்டுகள் மற்றும் 2,000 பிளாஸ்க்குகளை அனுப்பி வைக்கும் பணிகளை கொடியசைத்து இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது: திருச்செந்தூர் கோவிலில் அன்றைய தினம் யானையோடு செல்பி எடுக்க முயன்ற போது அந்த யானை அதற்கு அனுமதிக்கவில்லை. தொடர்ந்து அவர் முயற்சி செய்த போது இந்த விரும்பத்தகாத சம்பவம் நடைபெற்றுள்ளது.

அந்த சம்பவம் நடந்த பத்து நிமிடங்களுக்குள்ளாகவே அந்த யானை மீண்டும் பாகன் மீது வைத்திருந்த பாசத்துக்காக அவனை தட்டி தட்டி எழுப்புகின்றது. எதிர்பாராதவிதமாக, கோபத்தால் ஏற்பட்ட விளைவாக தான் இதை பார்க்கின்றோம். 

அதன் பிறகு மீண்டும் குளியலுக்கு கொண்டு சென்ற போது அந்த யானை மீண்டும் ஆனந்தமாக குளிக்கின்றது. ஆகவே வருங்காலங்களில் இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலை நடைபெறாமல் இருக்க அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் நிச்சயமாக எடுப்போம்.

27 கோயில்களில் 28 யானைகள் இருக்கின்றன. அவற்றுக்கு குளியல் தொட்டிகள், 15 நாட்களுக்கு ஒருமுறை மருத்துவ பரிசோதனை, தேவையான உணவுகள், நடைபயிற்சி போன்றவை அளிக்கப்பட்டு வருகின்றன. யானைகளை தெய்வத்துக்கு நிகராக தான் தினமும் பாதுகாத்து வருகின்றோம். 

இப்படிப்பட்ட ஒரு துயரமான சம்பவம் நடந்திருக்கக் கூடாது. இந்நிகழ்வுக்கு தமிழக அரசும், இந்து சமய அறநிலையத்துறையும் ஆழ்ந்த இரங்கலை வருத்தத்தை பதிவு செய்கிறது.  அந்த நிகழ்வில் உயிரிழந்த பாகனின் குடும்பத்துக்கு ரூபாய் 5 லட்சமும், மற்றொரு நபரின் குடும்பத்துக்கு ரூபாய் இரண்டரை லட்சமும் நிதி உதவியாக திருக்கோயில் சார்பில் வழங்கிட முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.   திருச்செந்தூர் கோயில் யானை தொடர்பாக வனத்துறை அமைச்சர் தெரிவித்துள்ள கருத்தினை குறையாக எடுத்துக் கொள்ளக் கூடாது.

கோவில்களில் செல்போன் கொண்டு செல்ல தடையினை படிப்படியாக செயல்படுத்திட முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். நீதிபதி மகாதேவன் உத்தரவின்படி திருச்செந்தூர், மதுரை, பழனி போன்ற கோயில்களில் இன்றைக்கு செயல்பாட்டில் உள்ளது. 

செல்போன்களை பாதுகாப்பதற்கான கட்டமைப்புகளை உருவாக்கி அனைத்து கோவில்களிலும் படிப்படியாக செயல்படுத்துவதற்கு இந்து சமய அறநிலையத்துறை முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து