முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகராஷ்டிராவின் அடுத்த முதல்வர் யார் ? - மகாயுதி தலைவர்கள் முடிவு செய்வர்: பட்னாவிஸ் பேட்டி

சனிக்கிழமை, 23 நவம்பர் 2024      இந்தியா
Devendra-Padnavis 2023-07-2

Source: provided

மும்பை : மகராஷ்டிராவின் அடுத்த முதல்வர் யார் என்பது குறித்து மகாயுதி கூட்டணியில் உள்ள தலைவர்கள் முடிவு செய்வார்கள் என்றும், அதில் எவ்வித சர்ச்சையும் இல்லை என்றும் அம்மாநில துணை முதல்வரும், பா.ஜ.க. மூத்த தலைவருமான தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.

பா.ஜ.க. தலைமையிலான மகாயுதி கூட்டணி மீண்டும் ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பை பெற்றுள்ள நிலையில், மும்பையில் செய்தியாளர்களிடம் தேவேந்திர பட்னாவிஸ் கூறியதாவது, 

மகராஷ்டிரா மக்கள் எங்களுக்கு வரலாறு காணாத வெற்றியை அளித்துள்ளனர். மக்கள் பிரதமர் நரேந்திர மோடியுடன் இருப்பதையே இது காட்டுகிறது. ஒன்றாக இருந்தால் பாதுகாப்பாக இருப்போம் என்ற முழக்கத்துக்கு ஏற்ப, அனைத்து தரப்பு மக்களும் ஒற்றுமையாக எங்களுக்கு வாக்களித்தனர். இது ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி. அனைத்து வாக்காளர்களுக்கும் குறிப்பாக பெண் வாக்காளர்களுக்கு நன்றி.

முதல்வர் யார் என்பதில் எந்த சர்ச்சையும் இருக்காது. தேர்தலுக்குப் பிறகு மூன்று கட்சிகளின் தலைவர்களும் ஒன்றாக அமர்ந்து இது குறித்து முடிவெடுப்பது என்று முதல் நாளே முடிவு செய்யப்பட்டது. இந்த முடிவு அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படும். இதில் எந்த சர்ச்சையும் இல்லை. 

நான் ஒரு நவீன அபிமன்யு. சக்ரவியூகத்தை எவ்வாறு உடைப்பது என்பது எனக்குத் தெரியும் என்று முன்பே கூறியிருந்தேன். இந்த வெற்றியில் எனது பங்களிப்பு சிறியது. இது எங்கள் அணியின் வெற்றி என்று நினைக்கிறேன். மக்கள் தங்கள் ஆணையை வழங்கியுள்ளனர். 

மக்கள் ஏக்நாத் ஷிண்டேவை உண்மையான சிவசேனாவாக ஏற்றுக் கொண்டனர். அதே போல், அஜித் பவாருக்கு என்சிபியின் அங்கீகாரம் கிடைத்துள்ளது என தெரிவித்தார்.

தேர்தல் முடிவுகள் மக்களின் ஆணையை பிரதிபலிப்பதாக இல்லை என சிவ சேனா (யுபிடி) சஞ்சய் ராவத் கூறியிருப்பது குறித்த கேள்விக்கு பதில் அளித்த பட்னாவிஸ், 

நான் சஞ்சய் ராவத்துக்கு எதிர்வினையாற்றவில்லை. ஆனால், அது அவசியம் என்பதால் இதற்கு பதில் அளிக்கிறேன். ஜார்க்கண்டில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா வெற்றி பெற்றுள்ளது. அது மிகவும் நியாயமான முறையில் பெற்ற வெற்றி.

அங்கு தேர்தல் நேர்மையாக நடந்தது. அங்கு தேர்தல் ஆணையம் சிறப்பாக செயல்பட்டுள்ளது. அங்குள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ஹேக் செய்ய முடியாத அளவுக்கு வலுவாக இருந்தன. அங்கு ஜனநாயகம் வெற்றி பெற்றுள்ளது என்று கூறுபவர்கள், மகராஷ்டிராவில் நாங்கள் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளதால், இங்கு தேர்தல் ஆணையம் ஒரு பாரபட்சமாக மாறி விட்டது. 

இங்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ஹேக் செய்யப்பட்டுள்ளன.  இங்கு ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டுள்ளது என்று கூறுவது ஏற்க முடியாதது. ஒருவர் தன்னை சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து