முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவின் அறிக்கை அடிப்படை ஆதாரமற்றது : அதானி குழும தலைமை நிதி அதிகாரி கண்டனம்

சனிக்கிழமை, 23 நவம்பர் 2024      இந்தியா
Adani 2024-01-05

Source: provided

புதுடெல்லி : அதானி குழுமத்தின் 11 பொது நிறுவனங்களில் எந்த நிறுவனமும் எந்த தவறும் செய்யவில்லை அல்லது குற்றம் சாட்டப்படவில்லை என அதானி குழுமத்தின் தலைமை நிதி அதிகாரி ஜுகேஷிந்தர் சிங் தெரிவித்துள்ளார்.  

இது குறித்து அதானி குழுமத்தின் தலைமை நிதி அதிகாரி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, 

அமெரிக்காவில் சட்டப்பூர்வமாக தாக்கல் செய்ததில் அதானி நிறுவனமும் எந்த தவறும் செய்யவில்லை. கடந்த இரண்டு நாட்களில் அதானி குழும விவகாரங்கள் தொடர்பாக பல செய்திகளைப் பார்த்திருப்பீர்கள். இது குறிப்பாக அதானி கிரீனின் ஒட்டுமொத்த வணிகத்தில் சுமார் 10 சதவீதமான ஒப்பந்தத்துடன் தொடர்புடையது

அதானி குழுமம் 11 பொது நிறுவனங்களின் தொகுப்பை கொண்டுள்ளது, அவை எதுவும் குற்றப்பத்திரிகைக்கு உட்பட்டவை அல்ல. சட்டப்பூர்வ ஆவணத்தில் வழங்கப்பட்டுள்ள விஷயத்தை விரிவாக மதிப்பாய்வு செய்தவுடன் நாங்கள் முழுமையாக பதிலளிப்போம். 

இரண்டு நாட்களுக்கு முன்புதான் குற்றச்சாட்டுகளின் குறிப்பிட்ட தன்மையை குழுமம் அறிந்தது. இந்த அறிக்கை வெளிவந்த பிறகு, அதானி குழுமம், இவை வெறும் குற்றச்சாட்டுகள் என்றும், அதை அப்படியே பார்க்க வேண்டும் என்றும் கூறியது. சட்டப்பூர்வ நடவடிக்கை குறித்து ஆராயவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்று அதானி குழுமத்தின் தலைமை நிதி  அதிகாரி ஜுகேஷிந்தர் சிங் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து