முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகாராஷ்டிராவின் அடுத்த முதல்வர்? - ஏக்நாத் ஷிண்டே பதில்

சனிக்கிழமை, 23 நவம்பர் 2024      இந்தியா
Eknath-Shinde 2023 04 30

Source: provided

தானே : பா.ஜ.க. தலைமையிலான ஆளும் மகாயுதி கூட்டணி பெரும்பான்மைக்கு அதிகமான இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்றுள்ள நிலையில், மகாராஷ்டிராவின் அடுத்த முதல்வர் யார் என்ற கேள்விக்கு தற்போதைய முதல்வர் ஏக்நாத் ஷிண்டே பதிலளித்துள்ளார்.

மகாராஷ்டிராவில் மொத்தமுள்ள 288 தொகுதிகளுக்கும் கடந்த 20-ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் ஆளும் பாஜக, சிவசேனா ( முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தரப்பு), தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார் தரப்பு) இணைந்து மகாயுதி கூட்டணியும், காங்கிரஸ், சிவசேனா (உத்தவ் தாக்கரே தரப்பு) தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார் தரப்பு) இணைந்து மகாவிகாஸ் அகாடி கூட்டணியும் களமிறங்கின.

ஓரேகட்டமாக நடந்த தேர்தலில் 4 ஆயிரத்து 131 வேட்பாளர்கள் களமிறங்கினர். இதில், 66.05 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்த சூழலில் மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகின.

இந்நிலையில் பா.ஜ.க. தலைமையிலான ஆளும் மகாயுதி கூட்டணி பெரும்பான்மைக்கு அதிகமான இடங்களில் வெற்றிப்பெற்று அங்கு மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது. இதன்படி மொத்தம் 288 தொகுதிகளில் 222-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெற்றது. மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆட்சி அமைக்க தேவைப்படும் பெரும்பான்மைக்கான இடங்கள் 145 ஆகும்.

இந்நிலையில் மகாயுதி கூட்டணி மாநிலத்தில் ஆட்சி அமைக்க உள்ள நிலையில், செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய மகாராஷ்டிரா முதல்வரும், சிவசேனா தலைவருமான ஏக்நாத் ஷிண்டே, "மகாராஷ்டிரா வாக்காளர்களுக்கு எனது நன்றிகள். இது மாபெரும் வெற்றி. மகாயுதி அமோக வெற்றி பெறும் என்று முன்பே கூறியிருந்தேன். அனைவருக்கும் நன்றி. சமுதாயத்தின் அனைத்து பிரிவினருக்கும் நான் மகாயுதி கட்சியின் சார்பில் நன்றி கூறுகிறேன். மகாராஷ்டிராத்தின் அடுத்த முதல்வர் யார் என்பது இதுவரை முடிவாகவில்லை. கூட்டணி கட்சியில் உள்ள மூத்த தலைவர்கள் பேசி அடுத்த முதல்வரை முடிவு செய்வார்கள்" என்று அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து