முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

38 வருடங்களுக்கு பிறகு ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய ஜோடி சாதனை

சனிக்கிழமை, 23 நவம்பர் 2024      விளையாட்டு
KL-Rahul 2023-08-29

Source: provided

பெர்த் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 2-வது இன்னிங்சில் கேஎல் ராகுல் - ஜெய்ஸ்வால் இருவரும் அரைசதம் அடித்தனர். இதன் மூலம் ஆஸ்திரேலிய மண்ணில் 38 வருடங்களுக்கு பிறகு இந்திய ஜோடி சாதனை படைத்துள்ளது.

இருவரும் அரைசதம்... 

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி பெர்த் மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. வேகத்துக்கு சாதகமான இந்த மைதானத்தில் முதல் இன்னிங்சில் முறையே இந்தியா 150 ரன்களும், ஆஸ்திரேலியா 104 ரன்களும் அடித்தன. இதனையடுத்து 46 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களாக கேஎல் ராகுல் - ஜெய்ஸ்வால் களமிறங்கினர். ஆஸ்திரேலிய பந்துவீச்சை மிகுந்த கவனத்துடன் எதிர்கொண்ட இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர்.

4-வது இந்திய ஜோடி... 

ஆஸ்திரேலிய மண்ணில் 38 ஆண்டுகளுக்குப்பின் ஒரு டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் இரு தொடக்க ஆட்டக்காரர்களும் அரைசதம் அடிப்பது இதுவே முதல் முறையாகும். இதற்கு முன்னர் 1986-ம் ஆண்டு சுனில் கவாஸ்கர் மற்றும் ஸ்ரீகாந்த் இந்த சாதனையை படைத்துள்ளனர். தற்போது கேஎல் ராகுல் மற்றும் ஜெய்ஸ்வால் படைத்துள்ளனர். ஒட்டு மொத்தத்தில் இந்த சாதனையை படைத்த 4-வது இந்திய ஜோடி என்ற சாதனையையும் படைத்துள்ளனர். தற்போது வரை இந்திய அணி 2-வது இன்னிங்சில் விக்கெட் இழப்பின்றி 169 ரன்கள் அடித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து