முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடலூரில் அண்ணா ஸ்டேடியத்தில் 15.08 கோடி ரூபாயில் செயற்கை இழை தடகள ஓடுதளப் பாதை: துணை முதல்வர் உதயநிதி அறிவிப்பு

திங்கட்கிழமை, 25 நவம்பர் 2024      விளையாட்டு
Udhayanidhi-2-2024-11-25

கடலூர், கடலூர் அறிஞர் அண்ணா விளையாட்டு அரங்கத்தில்  ரூ.15.08 கோடி மதிப்பில் செயற்கை இழையிலான தடகள ஓடுதளப் பாதை அமைக்கப்படும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

துணை முதல்வர் உதயநிதி நேற்று (25.11.2024) கடலூர் மாவட்டத்தில் முத்தமிழறிஞர்  கலைஞர் அவர்களின் நூற்றாண்டு பொன்விழாவினை சிறப்பிக்கும் வகையில் நடைபெற்ற கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் தொகுப்பு வழங்கும் விழாவில்,  கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த  683 ஊராட்சிகளுக்கு, 33 விளையாட்டு    உபகரணங்கள்    அடங்கிய    835   தொகுப்புகளை வழங்கினார்.  

இந்நிகழ்ச்சியில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்  பேசியதாவது., கடலூர் மாவட்டத்தில் விடியல் பயணம் திட்டம் - கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டத்தின் கீழ் இதுவரைக்கும் 17 கோடி பயணங்களை மகளிர் மேற்கொண்டிருக்கிறீர்கள்.  ஒரு, ஒரு மகளிரும் இந்த விடியல் பயணத் திட்டத்தின் மூலம் மாதம் ரூபாய் 900-லிருந்து  1,000  ரூபாய்  வரைக்கும்  சேமிக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல், பெண்கள் படிப்பதற்கு புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன்    திட்டங்கள்    மூலம்   21  ஆயிரம் மாணவ,  மாணவியர் கடலூர் மாவட்டத்தில்   மட்டும்   மாதம்  1,000 ரூபாய் கல்வி உதவித்தொகை பெற்று வருகின்றார்கள்.

இங்கே இருக்கிற பேரறிஞர் அண்ணா ஸ்டேடியத்தை மேம்படுத்த ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய் அளவில் பணிகள் செய்து முடிக்கப்பட்டுள்ளன. விருத்தாச்சலத்தில் உள்ள மினி ஸ்டேடியத்தில் கேலரியை மேம்படுத்துவது  பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளை 18 லட்சம் ரூபாய் அளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ரூ. 18 லட்சம் செலவில் SDAT விளையாட்டு விடுதி மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் உங்களுடைய வேண்டுகோளை ஏற்று  ஒரு முக்கியமான அறிவிப்பை    இங்கே   வெளியிட இருக்கின்றேன். பேரறிஞர் அண்ணா அவர்களால் 1968-ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் 1975-ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்ட பேரறிஞர் அண்ணா ஸ்டேடியம் விரைவில் பொன்விழா காண உள்ளது.

பல சர்வதேச – தேசிய அளவிலான வீரர்களை உருவாக்கிய அண்ணா ஸ்டேடியத்தில் ரூ.15 கோடி மதிப்பீட்டில்  செயற்கை இழை ஓடுதளம் – Artificial Fibre Synthetic Track அமைக்கப்படும் என்ற அறிவிப்பை முதல்வர் ஸ்டாலினின் உத்தரவின் பேரில், அவருடைய அனுமதியோடு, அவருடைய வழிகாட்டுதலின்படி உங்களுடைய கோரிக்கையை ஏற்று இங்கே அறிவிக்கின்றேன். அதில் மகிழ்ச்சி அடைகின்றேன். நீங்களும் மகிழ்ச்சி அடைவீர்கள் என்று நம்புகிறேன் என்று பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 4 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 4 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 4 days ago
View all comments

வாசகர் கருத்து