முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியல்: மீண்டும் நம்பர் 1 இடத்திற்கு முன்னேறியது இந்திய அணி

திங்கட்கிழமை, 25 நவம்பர் 2024      விளையாட்டு
INDIA-1 2024-10-23

Source: provided

பெர்த் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றதை அடுத்து, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் மீண்டும் நம்பர் 1 இடத்திற்கு இந்திய அணி முன்னேறியுள்ளது. ஆஸ்திரேலியா 2-வது இடத்திற்கு சரிந்துள்ளது. 

இந்தியா வெற்றி...

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரின் முதல் டெஸ்ட் போட்டி பெர்த் மைதானத்தில் நடைபெற்றது. கடந்த 22-ம் தேதி தொடங்கிய இந்த போட்டியில் இந்தியா 295 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) வெளியிட்டுள்ளது. இதில் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஒயிட் வாஷ் ஆனதன் மூலம் முதலிடத்தை இழந்த இந்தியா, இந்த வெற்றியின் மூலம் மீண்டும் நம்பர் 1 இடத்திற்கு முன்னேறியுள்ளது. இந்த போட்டிக்கு முன்னர் முதலிடத்தில் இருந்த ஆஸ்திரேலியா 2-வது இடத்திற்கு சரிந்துள்ளது.

புதிய புள்ளி பட்டியல்:

1. இந்தியா - 61.11 சதவீதம்.

2. ஆஸ்திரேலியா -57.69 சதவீதம்.

3. இலங்கை - 55.56 சதவீதம்.

4. நியூசிலாந்து - 54.55 சதவீதம்.

5. தென் ஆப்பிரிக்கா - 54.17 சதவீதம்.

6. இங்கிலாந்து - 40.79 சதவீதம்.

7. பாகிஸ்தான் - 33.33 சதவீதம்.

8. வங்காளதேசம் - 27.50 சதவீதம்.

9. வெஸ்ட் இண்டீஸ் - 18.52 சதவீதம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 4 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 4 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 4 days ago
View all comments

வாசகர் கருத்து