முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெண்களுக்கு மிகவும் ஆபத்தான இடம் வீடு: உறவினர்களால் தினமும் 140 பேர் கொல்லப்படுகிறார்கள் : ஐ.நா. தகவல்

புதன்கிழமை, 27 நவம்பர் 2024      உலகம்
UNO-2023 04 06

நியூயார்க், பெண்களுக்கு மிகவும் ஆபத்தான இடம் வீடு. நாளொன்றுக்கு 140 பெண்கள், சிறுமிகள் வாழ்க்கை துணை அல்லது உறவினர்களால் கொலை செய்யப்பட்டுள்ளதாக ஐ.நா. அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. 

பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்பதற்கான தினம்  கடந்த 25-ம் தேதி கடைப்பிடிக்கப்பட்து. இதையொட்டி ஐ.நா. பெண்கள் மற்றும் ஐநா போதைப் பொருள், குற்றச்செயல்கள் தடுப்பு அமைப்பான யு.என்.டி.ஓ.சி. அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 

அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

 உலகளவில் கடந்த 2023-ம் ஆண்டில் சராசரியாக 51,000 பெண்கள் மற்றும் சிறுமிகளின் மரணத்துக்கு அவர்களின் நெருங்கிய உறவினர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்கள் காரணமாக அமைந்துள்ளனர். நாளொன்றுக்கு 140 பெண்கள், சிறுமிகள் கொல்லப்பட்டுள்ளனர். 

மேலும் கடந்த 2022ம் ஆண்டில் 48,000 பெண்கள் அல்லது குழந்தைகள் தங்கள் இணையர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்களால் கொல்லப்பட்டுள்ளனர். இந்த தகவல்கள் பெரும்பாலான நாடுகளில் இருந்து கிடைக்கும் தரவுகளின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளது. 

 உலகின் அனைத்து பகுதிகளிலும் உள்ள பெண்கள், குழந்தைகள் இந்த தீவிரமான பாலின வன்முறையால் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு எந்த இடமும் விதிவிலக்கல்ல. குறிப்பாக பெண்கள், சிறுமிகளுக்கு மிகவும் ஆபத்தான இடம் அவர்களின் வீடுகள்தான். கடந்தாண்டு நடந்த இந்த படுகொலைகளில் ஆப்பிரிக்கா முதலிடத்தில் உள்ளது.

அங்கு ஒரு லட்சம் பெண்களில் 2.9 பெண்கள் பாதிக்கப்பட்டனர் . அதற்கு அடுத்தபடியாக அமெரிக்காவில் ஒரு லட்சம் பெண்களில் 1.6 பெண்கள், ஓசியானியாவில் ஒரு லட்சம் பெண்களில் 1.5 பெண்கள், ஆசியாவில் ஒரு லட்சம் பெண்களில் 0.8 பெண்கள் மற்றும் ஐரோப்பாவில் ஒரு லட்சம் பெண்களில் 0.6 பெண்கள் என கணிசமாக குறைவாக உள்ளது என அதிர்ச்சி தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 6 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 6 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 6 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து