முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லியில் நாளை காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நடக்கிறது

புதன்கிழமை, 27 நவம்பர் 2024      இந்தியா      அரசியல்
congress-office

புது டெல்லி, காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நாளை  வெள்ளிக் கிழமை டெல்லியில் கூடுகிறது.

பாராளுமன்ற குளிா்கால கூட்டத்தொடா் நடைபெற்று வரும் நிலையில், அதானி நிறுவனம் மீதான லஞ்ச புகாா், மணிப்பூா் கலவரம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை பாராளுமன்றத்தில் எழுப்பி ஆளும் பா.ஜ.க.வுக்கு நெருக்கடி அளிப்பது குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்க வாய்ப்பு உள்ளதாகத் தெரிகிறது.

காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உள்பட பிற செயற்குழு உறுப்பினா்களும் பங்கேற்க உள்ளனா்.

அண்மையில் நடந்து முடிந்த ஜாா்கண்ட், மகராஷ்டிர மாநில சட்டசபைத் தோ்தல்களில் கட்சியின் செயல்பாடு குறித்தும் செயற்குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்பட வாய்ப்பு உள்ளது. 

அடுத்து வரவிருக்கும் டெல்லி சட்டசபை தோ்தலுக்கான கூட்டணி வாய்ப்புகள், அடுத்த ஆண்டு வரவிருக்கும் பீகாா் சட்டசபை தோ்தலுக்கான தயாா்நிலை குறித்தும் கட்சியின் முக்கியமான முடிவுகளை எடுக்கும் அதிகாரம் படைத்த செயற்குழுவில் விவாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 6 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 6 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 6 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து