முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டிச. 15-ல் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

புதன்கிழமை, 27 நவம்பர் 2024      தமிழகம்
EPS 2024-11-02

சென்னை, இது குறித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அ.தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம், கழக சட்ட திட்ட விதிகளின் படி, வருகின்ற 15.12.2024  (ஞாயிற்றுக் கிழமை) காலை 10 மணிக்கு, சென்னை, வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில்,   அவைத் தலைவர் டாக்டர் அ. தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெற உள்ளது.

கட்சியின்  செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் அனைவருக்கும் தனித் தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கு அனுப்பப்படும் அழைப்பிதழுடன் தவறாமல் வருகை தந்திட  செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில்  டிசம்பர் 15-ம் தேதி நடைபெற உள்ள அ.தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. 

இந்த கூட்டத்தில் சட்டசபை தேர்தலை எதிர்கொள்வது பற்றியும், கூட்டணி குறித்தும் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.கட்சியின் வளர்ச்சிப் பணிகள் பற்றியும் தீர்மானங்கள் இயற்றப்பட உள்ளது.

அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி தலைமையேற்ற பிறகு அவரது புகைப்படத்துடன் கூடிய உறுப்பினர் அட்டைகள் வழங்கப்பட்டு உள்ளன. இந்த அட்டைகள் முறையாக கட்சியினருக்கு சென்று சேரவில்லை என்று எழுந்த புகாரின் பேரில் அதுபற்றி விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய அமைக்கப்பட்ட கள ஆய்வு குழுவினரும் மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர். பொதுக்குழு கூடுவதற்கு முன்னதாக அவர்கள் தங்களது அறிக்கையை கட்சி தலைமையிடம் அளிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 6 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 6 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 6 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து