முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராகுலின் குடியுரிமையை ரத்து செய்யக் கோரி மனு : மத்திய அரசுக்கு அலகாபாத் ஐகோர்ட் நோட்டீஸ்

புதன்கிழமை, 27 நவம்பர் 2024      இந்தியா
Rahul-Gandhi-2023-04-13

லக்னோ, ராகுல் காந்தியின் இந்திய குடியுரிமையை ரத்து செய்யக் கோரிய மனுவை விசாரித்த அலகாபாத் ஐகோர்ட், மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்கட்சி தலைவருமான ராகுல் காந்தியின் இந்திய குடியுரிமையை ரத்து செய்யக் கோரி கர்நாடகாவைச் சேர்ந்த வழக்கறிஞர் எஸ்.விக்னேஷ் ஷிஷிர் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், 

ராகுல் காந்திக்கு இங்கிலாந்து மற்றும் இந்தியாவில் இரட்டை குடியுரிமை உள்ளது. இந்திய சட்டத்தின்படி, ஒரு நபர் இரண்டு நாடுகளின் குடிமகனாக இருக்க முடியாது. இந்த வழக்கில், ஏதாவது ஒரு நாட்டின் குடியுரிமை ரத்து செய்யப்பட வேண்டும். 

ராகுல் காந்தியின் இந்திய குடியுரிமையை மத்திய  அரசு ரத்து செய்ய உத்தரவிட வேண்டும். மேலும் இவ்வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். 

இவ்வழக்கை  டிசம்பர் 20-ம் தேதிக்கு ஒத்திவைத்த அலகாபாத் ஐகோர்ட், மத்திய அரசு மற்றும் ராகுல் காந்தியிடம் மூன்று வாரங்களுக்குள் விளக்கம் கோரியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 6 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 6 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 6 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து