எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி: மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவுக்கு தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமை 4 ஆண்டுகள் தடைவிதித்துள்ளது.
வெண்கலப் பதக்கம்...
இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா. 30 வயதான இவர் கடந்த 2020-ம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்று சாதித்தார். கடந்த மார்ச் மாதம் அரியானா மாநிலம் சோனிபேட்டில் நடந்த ஒலிம்பிக் மல்யுத்த தகுதி சுற்றுக்கான இந்திய அணி தேர்வு போட்டியில் பஜ்ரங் புனியா கலந்து கொண்டார். இதில் தோல்வி அடைந்த அவர் ஊக்கமருந்து சோதனைக்காக சிறுநீர் மாதிரியை கொடுக்க மறுத்து விட்டார்.
மீண்டும் இடைநீக்கம்...
இதை தொடர்ந்து தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமை அவரை இடைநீக்கம் செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பஜ்ரங் புனியா ஊக்கமருந்து தடுப்பு முகமையின் ஒழுங்கு நடவடிக்கை கமிட்டியிடம் முறையிட்டார். தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமை குற்றச்சாட்டுக்கான அறிவிப்பை வெளியிடும் வரை பஜ்ரங் புனியாவின் இடைநீக்கத்தை ரத்து செய்வதாக ஒழுங்கு நடவடிக்கை கமிட்டி அதிரடியாக அறிவித்தது. இதையடுத்து ஊக்கமருந்து தடுப்பு விதியை மீறியதாக பஜ்ரங் புனியாவை மீண்டும் இடைநீக்கம் செய்து, தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமை அவருக்கு நோட்டீஸ் அனுப்பியது.
சமர்ப்பிக்க மறுப்பு...
இந்த நிலையில் தேசிய அணி தேர்வு சோதனையில் ஊக்கமருந்து சோதனை மாதிரியை சமர்ப்பிக்க மறுத்ததற்காக பஜ்ரங் புனியாவுக்கு தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமை 4 ஆண்டுகள் தடைவிதித்துள்ளது. இந்த காலகட்டத்தில் அவர் மல்யுத்தப் போட்டிகளில் பங்கேற்கவோ அல்லது வெளிநாட்டில் பயிற்சியாளர் வேலைக்கு விண்ணப்பிக்கவோ அனுமதிக்கப்படமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்2 months 6 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்2 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.3 months 1 day ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 30-11-2024.
30 Nov 2024 -
சென்னையில் தொடரும் கனமழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து துணை முதல்வர் உதயநிதி நேரில் ஆய்வு
30 Nov 2024சென்னை, தொடரும் கனமழையை அடுத்து எடுக்கப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் துணை முதல்வர் உதயநிதி நேரில் ஆய்வு செய்தார்.
-
காவல் நிலையம், அதிகாரிகள் மீது தாக்குதல்: மணிப்பூரில் 7 பேர் கைது
30 Nov 2024காக்சிங், மணிப்பூரில் எம்.எல்.ஏ.வின் வீடு உள்ளிட்ட சொத்துகள் மீது தாக்குதல் நடத்தியதற்காக கைது செய்யப்பட்ட 4 பேரை விடுவிக்கக்கோரி இந்த தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் இத
-
பழங்குடியின தலைவரின் கொள்ளுப்பேரன் உயிரிழப்பு
30 Nov 2024 -
அசாமில் நிலநடுக்கம்
30 Nov 2024திஸ்பூர், அசாமில் ரிக்டர் 2.9 அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
புயல் காரணமாக சென்னையில் கொட்டி தீர்க்கும் கனமழை: மக்கள் இயல்பு வாழக்கை, ரயில், விமான சேவைகள் பாதிப்பு
30 Nov 2024சென்னை, பெஞ்சல் புயல் காரணமாக சென்னையில் கொட்டி தீர்ககும் கனமழையால் மக்களின் இயல்பு வாழக்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.