முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேட்டூர் அணை நீர்மட்டம் 110 அடியாக உயர்ந்தது

வியாழக்கிழமை, 28 நவம்பர் 2024      தமிழகம்
Mettur-Dam 2024-09-04

சேலம், நீர்வரத்து அதிகரிப்பால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 110.07 அடியாக உயர்ந்துள்ளது. 

தமிழக, கர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக கடந்த 2 வாரத்துக்கும் மேலாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்தும், குறைந்தும் வந்து கொண்டு இருக்கிறது. இதே போல் நீர்வரத்தை விட குறைந்த அளவிலேயே பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.

இந்த நிலையில் அணைக்கு நேற்று முன்தினம் வினாடிக்கு 4,427 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் நேற்று அது 5110 கனஅடியாக அதிகரித்து காணப்பட்டது. இதன் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டமும் 110.07 அடியாக உயர்ந்தது. 

அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 1000 கனஅடியும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 600 கனஅடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. தற்போது அணையில் 78.50 டி.எம்.சி.தண்ணீர் இருப்பு உள்ளது. அணையில் 110 அடிக்கு தண்ணீர் உயர்ந்து காணப்படுவதால் அணை கடல் போல் காட்சியளிக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 6 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 6 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 6 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து