முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ருவாண்டாவில் இருந்து இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்ட லஷ்கர் பயங்கரவாதி: என்.ஐ.ஏ. அதிகாரிகள் காவலில் எடுத்தனர்.

வியாழக்கிழமை, 28 நவம்பர் 2024      இந்தியா
Lashkar-terrorist-2024-11-2

பெங்களூரு, பெங்களூரு சிறையில் இருந்தபடி பயங்கரவாத செயல்களுக்கு ஆட்களை திரட்டிய வழக்கில், லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதியை ருவாண்டா அரசு, இந்தியாவுக்கு நாடு கடத்தியுள்ளது. இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்ட அவனை நேற்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் காவலில் எடுத்தனர்.

 சல்மான் ரெஹ்மான் கானி என்பவன், போக்சோ வழக்கில் கைதாகி 2018 முதல் 2022-ம் ஆண்டு வரை பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டு இருந்தான். அப்போது, சிறையில் இருந்த மற்றொரு பயங்கரவாதி நசீர் என்பவன் தொடர்பு கிடைத்தது. 

அப்போது சல்மானை பயங்கரவாதியாக மாற்றிய நசீர், சிறையில் இருந்தே, பயங்கரவாத திட்டங்களுக்கு இருவரும் சதி திட்டம் தீட்டினர். இதனுடன் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்ட சல்மான், ஆயுதங்கள், வெடிபொருட்கள் திரட்டியதுடன், ஆட்களை திரட்டினான். நீதிமன்றத்தில் ஆஜராக வந்த நசீர் அங்கிருந்து தப்பிச் சென்றான். இதற்கு சல்மான் உதவி செய்தான். 

இதனைத் தொடர்ந்து பயங்கரவாத சதி அம்பலமானது. என்.ஐ.ஏ., அதிகாரிகள் விசாரணை நடத்த துவங்கினர். அதற்குள் சல்மான் இந்தியாவில் இருந்து தப்பிச் சென்றான். இதனையடுத்து 2023, அக்டோபர் 25-ம் தேதி பெங்களூருவில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்தனர். 

சல்மானை தப்பிச்சென்றவனாக அறிவித்த அதிகாரிகள் அவன் மீது யு.ஏ.பி.ஏ, ஆயுதங்கள் சட்டம், வெடிமருந்துகள் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.  மேலும் கடந்த ஆகஸ்ட் 2-ம் தேதி அவனுக்கு எதிராக இண்டர்போல் போலீசார் மூலம் ரெட்கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. 

இதனையடுத்து என்.ஐ.ஏ., அதிகாரிகள், ஆப்பிரிக்க நாடான ருவாண்டா தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சேர்ந்து கிகாலி நகரில் இருந்த சல்மானை கைது செய்தனர். இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்ட அவனை நேற்று என்.ஐ.ஏ., அதிகாரிகள் காவலில் எடுத்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து