முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கூடுவோம் கூட்டுவோம் நிகழ்ச்சி தமிழகம் முழுவதும் நாளை நடக்கிறது

வெள்ளிக்கிழமை, 29 நவம்பர் 2024      தமிழகம்
Rss 2024-11-29

Source: provided

 

சென்னை: ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கூடுவோம், கூட்டுவோம் என்ற நிகழ்ச்சி தமிழகம் முழுவதும்  நாளை  நடக்கிறது.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் துணை அமைப்புகளாக சேவாபாரதி, ஏ.பி.வி.பி, தர்மரக்ஷண சமிதி, விசுவ இந்துபரிசத் என 200 அமைப்புகள் உள்ளன. இந்த அமைப்புகளில் இருப்பவர்கள் அனைவரும் ஒன்று கூடுவது மற்றும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்களை கூட்டி வரும் நிகழ்ச்சி கூடுவோம், கூட்டுவோம் என்ற தலைப்பில் நாடு முழுவதும் ஆண்டுதோறும் கடைபிடிக்கப்படுகிறது.

இந்த ஆண்டின் நிகழ்ச்சி நாளை  (1-ம் தேதி) நாடு முழுவதும் ஒரே நேரத்தில் நடக்கிறது. தமிழகத்திலும் வார்டுகள் அளவில் நடத்துகிறார்கள். அந்த வார்டுகளில் இருக்கும் எந்தெந்த அமைப்புகளை சேர்ந்தவர்கள் இருக்கிறார்களோ அவர்கள் அனைவரும் குடும்பத்துடன் கலந்து கொள்ள வேண்டும்.

அவ்வாறு கலந்து கொள்ளும் இந்த கூட்டத்தில் 5 செயல்கள் பற்றி பேசுகிறார்கள். போதை ஒழிப்பு- ஒரு தனி மனிதனாக என்ன செய்ய முடியும் என்ற எண்ணத்தை கைவிட்டு தானும் தன் குடும்பத்தை சேர்ந்தவர்களும் போதை பழக்கத்துக்கு ஆளாகாமல் பார்த்து கொள்ள வேண்டும்.

குடும்பங்களில் ஒற்றுமையை உருவாக்குதல்-குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒரு நாளைக்கு ஒரு முறையாவது வீட்டில் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவது, பேசுவது போன்ற பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.சமூக நல்லிணக்கம், நமது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சாதி, மொழி, அந்தஸ்து என்ற பேதமில்லாமல் அனைவருடனும் பழகும் சூழ்நிலையை உருவாக்க வேண்டும்.

சுற்றுசூழல் பாதுகாப்பு- வீடுகளில் தண்ணீரின் சிக்கனம், வீட்டையும் சுற்றுப்புறத்தையும் தூய்மையாக பராமரித்தல், பிளாஸ்டிக் கை தவிர்த்து துணி பை களை பயன்படுத்த பழகி கொள்தல். சுதேசி வாழ்வியல், வீட்டிலும், முடிந்த இடங்களிலும் தாய்மொழியில் பேசும் பழக்கத்தை வளர்த்தல், பாரம்பரிய உடைகள் அணிவது, உள்ளூர் தயாரிப்பு பொருட்கள் வாங்குதல் ஆகியவற்றை கடைபிடிக்க வேண்டும்.

குடிமகனின் கடமைகளாக சட்டத்தை மதித்து நடப்பது. உதாரணமாக ஹெல்மெட் அணிய வேண்டும் என்பது அரசின் சட்டம். அதை கடைபிடிக்க வேண்டும். இப்படி எல்லாவிதமான மாற்றங்களையும் ஒவ்வொருவரும் தங்கள் குடும்பங்களில் கடைபிடிக்க வேண்டும் என்று முடிவு எடுக்கிறார்கள்.

காலை 10 மணி முதல் 12.30 மணி வரை நடை பெறும் இந்த நிகழ்ச்சிகளில் தலைவர்கள் முதல் முக்கிய நிர்வாகிகள் வரை அனைவரும் தங்கள் பகுதியில் நடக்கும் கூட்டங்களில் பங்கேற்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.   

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து