எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கோவை: மேட்டுப்பாளையம் - ஊட்டி இடையே சிறப்பு மலை ரெயில் டிசம்பர் 25-ம் தேதி முதல் ஜனவரி 2-ம் தேதி வரை இயக்கப்பட உள்ளதாக சேலம் கோட்ட ரெயில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்திலிருந்து தினசரி ஊட்டிக்கு மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயிலில் உள்ளூர் மட்டுமல்லாமல், வெளிமாவட்டம், வெளிமாநில, மாவட்ட மக்களும் பயணம் செய்ய ஆர்வம் காட்டுவார்கள்.
இந்த நிலையில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகை விடுமுறையையொட்டி மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கும், குன்னூரில் இருந்து ஊட்டிக்கும், ஊட்டியில் இருந்து கேத்திக்கும் தினசரி 3 முறையும் மலை ரெயில் இயக்க சேலம் கோட்ட ரெயில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதன்படி மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்திலிருந்து வரும் டிசம்பர் மாதம் 25, 27, 29, 31 ஆகிய தேதிகளில் காலை 9.10 மணிக்கு சிறப்பு மலை ரெயில் புறப்பட்டு ஊட்டிக்கு மதியம் 2.25 மணிக்கு செல்லும்.
இதே போல் ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு வரும் டிசம்பர் மாதம் 26, 28, 30 மற்றும் வரும் ஜனவரி மாதம் 1-ம் தேதி வரை சிறப்பு மலை ரெயில் இயக்கப்படும். ஊட்டியில் இருந்து காலை 11.25 மணிக்கு ரெயில் புறப்பட்டு மேட்டுப்பாளையத்திற்கு மாலை 4.20 மணிக்கு வந்தடையும்.
இதனிடையே மேட்டுப்பாளையம் - குன்னூர் வரை முதல் வகுப்பில் 40 இருக்கைகள், இரண்டாம் வகுப்பில் 140 இருக்கைகள், குன்னூரில் இருந்து ஊட்டிக்கு முதல் வகுப்பில் 80 இருக்கைகள், இரண்டாம் வகுப்பில் 140 இருக்கைகள் இருக்கும்.
இதே போல் குன்னூரில் இருந்து ஊட்டிக்கு வரும் டிசம்பர் 28-ம் தேதி முதல் ஜனவரி மாதம் 2-ம் தேதி வரை சிறப்பு மலை ரெயில் 6 நாட்கள் இயக்கப்படும். குன்னூரில் இருந்து காலை 8.20 மணிக்கு புறப்பட்டு ஊட்டிக்கு 9.40 மணிக்கு சென்றடையும்.
இதே போல் ஊட்டியில் இருந்து மாலை 4.45 மணிக்கு புறப்பட்டு குன்னூருக்கு மாலை 5.55 மணிக்கு வந்தடையும். இதில் முதல் வகுப்பில் 80 இருக்கைகள், இரண்டாம் வகுப்பில் 130 இருக்கைகள் இருக்கும்.
மேலும் ஊட்டியில் இருந்து கேத்திக்கு வரும் டிசம்பர் 28-ம் தேதியில் இருந்து ஜனவரி 2-ம் தேதி வரை 6 நாட்களுக்கு தினசரி 3 முறை மலை ரெயில் இந்த வழித்தடத்தில் இயக்கப்படுகிறது. இதில் முதல் வகுப்பில் 80 இருக்கைகள், இரண்டாம் வகுப்பில் 130 இருக்கைகள் இருக்கும். இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்2 months 5 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்2 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.3 months 7 hours ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 29-11-2024.
29 Nov 2024 -
வங்கக்கடலில் புயல் உருவானது
29 Nov 2024சென்னை, வங்கக்கடலில் புயல் உருவானதாக தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், இன்று 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுத்துள்ளது.
-
அரபிக்கடலில் 500 கிலோ போதை பொருள் சிக்கியது
29 Nov 2024 -
கல்வித்துறை சார்ந்த வழக்குகளில் அரசுக்கு ரூ. 1,100 கோடி இழப்பு: சென்னை ஐகோர்ட் கண்டனம்
29 Nov 2024சென்னை, அரசு வழக்கறிஞர்களின் தவறான செயல்பாடுகளால் கல்வித்துறை சார்ந்த வழக்குகளில் ரூ.1,100 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஐகோர்ட்டு கண்டனம் தெரிவித்துள்ளது.
-
சவரன் ரூ.57 ஆயிரத்தை தாண்டியது தங்கம் விலை நகை பிரியர்கள் அதிர்ச்சி
29 Nov 2024சென்னை:
-
மோசமான வெள்ளம்: மலேசியாவில் 3 பேர் பலி
29 Nov 2024கோலாலம்பூர், மலேசியாவில் ஏற்பட்டுள்ள மோசமான வெள்ளத்தால் 3 பேர் உயிரிழந்துள்ளனர். 80 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ளனர்.
-
வலைப்பயிற்சியில் தீவிரம்: ஆஸி.க்கு எதிரான 2-வது டெஸ்ட்டில் ஷுப்மன் கில் விளையாடுவாரா?
29 Nov 2024மும்பை : காயத்திலிருந்து குணமடைந்து வரும் ஷுப்மன் கில் வலைப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.
-
இந்தோனேசியாவில் நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 27 ஆக உயர்வு
29 Nov 2024ஜகார்த்தா, இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 27 பேர் உயிரிழந்துள்ளனர்.