முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் கடைசி ஒரு மணி நேரத்தில் 76 லட்சம் வாக்குகள் பதிவு : தேர்தல் ஆணையத்திற்கு காங்கிரஸ் கேள்வி

வெள்ளிக்கிழமை, 29 நவம்பர் 2024      இந்தியா
Vote 2024-01-05

Source: provided

மும்பை : மகாராஷ்டிர தேர்தலில் முரண்பாடுகள் இருப்பதாக தேர்தல் ஆணையத்திற்கு காங்கிரஸ் கட்சி கடிதம் எழுதியுள்ளது. அதில் கடைசி ஒரு மணி நேரத்தில் 76 லட்சம் வாக்குகள் பதிவானது எப்படி? என்று கேள்வி எழுப்பியுள்ளது.

மகாராஷ்டிரத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான மஹாயுதி கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியான மகா விகாஸ் அகாடி கூட்டணி தோல்வியைச் சந்தித்துள்ளது. மகாராஷ்டிர பேரவைத் தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட அக்கட்சியைச் சேர்ந்தவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில் மகாராஷ்டிர பேரவைத் தேர்தல் முடிவுகளில் முரண்பாடுகள் இருப்பதாகவும் அதுகுறித்து விசாரித்து பதில் அளிக்க வேண்டும் எனவும் தேர்தல் ஆணையத்திற்கு காங்கிரஸ் கட்சி கடிதம் எழுதியுள்ளது. சுமார் 12 பக்க ஆவணத்தில் முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரைஷி எழுப்பிய வாக்காளர் தரவுகள் குறித்த சந்தேகங்களைக் குறிப்பிட்டுள்ள காங்கிரஸ், தேர்தல் ஆணையத்திற்கு இரண்டு கேள்விகளை எழுப்பியுள்ளது.

முதலாவதாக, மகாராஷ்டிரத்தில் தேர்தலின்போது வாக்காளர்களை தன்னிச்சையாக நீக்கியது மற்றும் ஒவ்வொரு தொகுதியிலும் ஒரேநேரத்தில் சுமார் 10,000 வாக்காளர்களைச் சேர்த்தது, இரண்டாவதாக, வாக்குபதிவின் கடைசி நேரத்தில் வாக்கு விகிதம் எதிர்பாராத அளவு அதிகரிப்பு ஆகியவற்றைக் குறிப்பிட்டுள்ளது.அதாவது 'மகாராஷ்டிரத்தில் கடந்த ஜூலை முதல் நவம்பர் வரை இதுவரை இல்லாத அளவுக்கு 47,000 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது. வாக்காளர்கள் அதிகரித்துள்ள 50 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 47 தொகுதிகளில் ஆளும் பாஜக மற்றும் கூட்டணிக் கட்சிகள் வெற்றி பெற்றுள்ளன.

துல்ஜாபூர் தொகுதியில் வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடைபெற்றுள்ளது. வெவ்வேறு புகைப்படங்கள், பெயர்களைக் கொண்டு போலி ஆதார் அட்டைகள் உருவாக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளன' என்று கூறியுள்ளது. 1999 முதல் 2014 வரை காங்கிரஸ் வசம் இருந்த துல்ஜாபூர் தொகுதியில் பாஜக முதல்முறையாக வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. அடுத்து வாக்குப்பதிவு தரவுகளில் முரண்பாடுகள் உள்ளதாக அறிக்கையில் கூறியுள்ளது.

மகாராஷ்டிரத்தில் வாக்குப்பதிவு நாளில் மாலை 5 மணிக்கு தேர்தல் ஆணையத்தின் வாக்கு விகிதம் 58.22 சதவீதமாக இருந்தது, இரவு 11.30 மணியளவில் 65.02 சதவீதமாகவும் இறுதியாக 66.05% ஆகவும் உயர்ந்தது எப்படி என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது. வாக்குப்பதிவின் இறுதிநேரத்தில் (நவ. 20 மாலை 5 மணி முதல் 6 மணி வரை) 76 லட்சம் வாக்குகள் பதிவானது நம்பமுடியாதது, இதுவரையிலான தேர்தல்களில் கேள்விப்படாதது என்றும் குறிப்பிட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து