முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் மருத்துவமனைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதி செய்ய முத்தரசன் கோரிக்கை

வெள்ளிக்கிழமை, 13 டிசம்பர் 2024      தமிழகம்
Mutharasan 2024-12-13

Source: provided

சென்னை: தமிழகத்தில் மருத்துவமனைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதி செய்ய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார். 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

திண்டுக்கல் மாநகரின் திருச்சி சாலையில் இருந்த தனியார் மருத்துவமனையில் நேற்று முன்தினம் (12.12.2024) ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி, ஒரு குழந்தை உட்பட ஏழு பேர் மரணமடைந்தனர் என்ற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. மின் சாதனம் வெடித்து சிதறியதால் ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்த 30க்கும் மேற்பட்ட நோயாளர்கள் அரசு மருத்துவமனையில் சேர்த்து, சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் சிலர் உயிருக்கு போராடும் நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நான்கு மாடி கொண்ட மருத்துவமனை கட்டிடம் விபத்து கால நெருக்கடிகளை எதிர் கொள்ளும் வசதியும், விபத்து கால தடுப்பு சாதனங்கள் எளிதில் கையாளும் வசதியும் இருந்ததா என்பதை விசாரிக்க வேண்டும். விபத்தில் மரணமடைந்த குடும்பங்களுக்கு இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன், அவர்களது குடும்பங்களுக்கு, மருத்துவமனை நிர்வாகமும், அரசும் உரிய இழப்பீடு வழங்கி உதவ வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து