முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கூட்ட நெரிசலில் சிக்கி பெண் ரசிகை உயிரிழந்த விவகாரம்: கைது செய்யப்பட்ட நடிகர் அல்லு அர்ஜூனுக்கு இடைக்கால ஜாமீன் தெலங்கானா உயர் நீதிமன்றம் உத்தரவு

வெள்ளிக்கிழமை, 13 டிசம்பர் 2024      இந்தியா
Allu-Arjun 2024-12-13

Source: provided

ஐதராபாத்: கூட்ட நெரிசலில் சிக்கி ரசிகை உயிரிழந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட நடிகர் அல்லு அர்ஜூனுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நம்பள்ளி கோர்ட்டு உத்தரவிட்ட நிலையில், நடிகர் அல்லு அர்ஜூனுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி தெலங்கானா ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

புஷ்பா 2 பட நடிகர் அல்லு அர்ஜூன். இவர் கடந்த 4ம் தேதி இரவு ஐதராபாத்தில் உள்ள சந்தியா தியேட்டருக்கு இரவு 10.30 மணிக்கு திரையிடப்பட்ட புஷ்பா 2 படத்தை பார்க்க சென்றார். அவருடம் நடிகை ராஷ்மிகா மந்தனா உள்பட பலரும் சந்தியா தியேட்டருக்கு வந்தனர். இதனால், தியேட்டரில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. அப்போது, குடும்பத்துடன் புஷ்பா 2 படம் பார்க்க வந்த ரேவதி (வயது 35) என்ற பெண், அவரது மகன் ஸ்ரீதேஜா (வயது 9) ஆகிய இருவரும் கூட்ட நெரிசலில் சிக்கி நிலை தடுமாறி கிழே விழுந்தனர்.

அப்போது, ரசிகர்கள் பலர் இருவர் மீதும் ஏறி மிதித்தனர். இதனால், இருவரும் மூச்சுப்பேச்சின்றி சுயநினைவு இழந்தனர். இதையடுத்து, இருவரும் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். சிறுவன் ஸ்ரீதேஜாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவரது தாயாரான ரேவதி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தைய நிலையில் ரேவதி உயிரிழந்த சம்பவத்தில் நடிகர் அல்லு அர்ஜூன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

அதேவேளை, தன் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி நடிகர் அல்லு அர்ஜூன் தெலுங்கானா ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இதனிடையே, ரேவதி உயிரிழப்பு சம்பவத்தில் நடிகர் அல்லு அர்ஜூனை போலீசார் நேற்று கைது செய்தனர். தெரிந்தே மரணத்தை விளைவிக்கும் குற்றத்தில் ஈடுபடுவதல், திட்டமிட்டு கொடும் காயத்தை ஏற்படுத்துதல் ஆகிய பிரிவுகளில் அல்லு அர்ஜூன் கைது செய்யப்பட்டார்.

சிக்கட்பள்ளி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து செய்யப்பட்ட அல்லு அர்ஜூன் பின்னர் நம்பள்ளி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். அதேவேளை, தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி அல்லு அர்ஜூனா தெலுங்கானா ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனு நேற்று விசாரணைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அந்த வழக்கு இதுவரை விசாரணைக்கு வரவில்லை. இந்நிலையில், கைது செய்யப்பட்டுள்ள அல்லு அர்ஜூனை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க நம்பள்ளி கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் கைது செய்யப்பட்ட அல்லு அர்ஜூனுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி தெலுங்கானா கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து