முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழ்நாட்டின் கூட்டுறவு வங்கிக்கு மத்திய அரசின் விருதுகள்: முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் காண்பித்து அமைச்சர் வாழ்த்து

வெள்ளிக்கிழமை, 13 டிசம்பர் 2024      தமிழகம்
Stalin 2024-12-13

Source: provided

சென்னை: தமிழ்நாட்டின் கூட்டுறவு வங்கிகளுக்கு 5 விருதுகள் வழங்கப்பட்டது. அதனை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் காண்ப்பித்து அமைச்சர் பெரியகருப்பன் உள்ளிட்டோர் வாழ்த்து பெற்றனர்.

மாநில கூட்டுறவு வங்கிகளின் தேசிய இணையத்தின் விருதுகள் வழங்கும் விழாவில், தமிழ்நாட்டின் கூட்டுறவு வங்கிகளுக்கு வழங்கப்பட்ட ஐந்து விருதுகளை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினிடம்  காண்பித்து வாழ்த்து பெற்றனர். முதல்வர் மு.க.ஸ்டாலின்  நேற்று தலைமைச் செயலகத்தில், கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் , புதுதில்லியில் நடைபெற்ற மாநில கூட்டுறவு வங்கிகளின் தேசிய இணையத்தின் விருதுகள் வழங்கும் விழாவில், தமிழ்நாட்டின் கூட்டுறவு வங்கிகளுக்கு வழங்கப்பட்ட 5விருதுகளை காண்பித்து வாழ்த்து பெற்றார். மாநில கூட்டுறவு வங்கிகளின் தேசிய இணையம் , மாநில மற்றும் மத்திய கூட்டுறவு வங்கிகளின் செயல்பாடுகளை எளிதாக்குவதற்கும், குறிப்பாக கூட்டுறவு கடன்களை மேம்படுத்துவதற்கும் கடந்த 19.5.1964 அன்று நிறுவப்பட்டது. இந்த இணையத்தில் இந்தியாவில் உள்ள அனைத்து மாநில கூட்டுறவு வங்கிகளும் உறுப்பினர்களாக உள்ளன.

இந்த தேசிய இணையம் ஒவ்வொரு ஆண்டும் கூட்டுறவு அமைப்புகளின் கீழ் சிறப்பாக செயல்படும், தலைமை வங்கி, மாவட்ட மத்திய வங்கி, கூட்டுறவு கடன் சங்கங்கள் என செயல்படும் மூன்றடுக்கு கூட்டுறவு வங்கிகள் மற்றும் தலைமை வங்கியின் கீழ் செயல்படும் தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்கள் என இரண்டடுக்கு முறையில் செயல்படும் கூட்டுறவு வங்கிகளுக்கு விருதுகளை வழங்கி வருகிறது.

இந்த அமைப்பு 1964 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 60 ஆண்டுகளைக் கடந்து வைரவிழா கொண்டாடும் தருணத்தில் விருது வழங்கும் விழாவினை 26.11.2023 அன்று புதுதில்லியில் நடத்தியது. 2022-23 மற்றும் 2023-24 ஆண்டுகளில் சிறப்பாக செயல்பட்ட வங்கிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. இந்த வைர விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நடைபெற்ற விருது வழங்கும் விழாவில், விருதினை மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் அமித் ஷா  வழங்கிட, தமிழ்நாடு கூட்டுறவு வங்கிகளுக்கு வழங்கப்பட்ட 5 விருதுகளை கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் பெற்றுக்கொண்டார். இந்நிலையில் நேற்று தமிழ்நாட்டின் கூட்டுறவு வங்கிகளுக்கு வழங்கப்பட்ட 5 விருதுகளை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினிடம்  காண்பித்து வாழ்த்து பெற்றனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து