முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசியலமைப்பை கபளீகரம் செய்ய முயற்சி: காங். மீது ராஜ்நாத் சிங் மறைமுக தாக்கு

வெள்ளிக்கிழமை, 13 டிசம்பர் 2024      இந்தியா
Rajnath-Singh 2024-12-13

Source: provided

டெல்லி: குறிப்பிட்ட கட்சி' அரசியலமைப்பை கபளீகரம் செய்ய முயல்கிறது என்று பார்லி. மக்களவையில் காங்கிரஸ் கட்சி மீது ராஜ்நாத் சிங் மறைமுகமாக தாக்கி பேசினார்.

இந்திய பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 25-ந்தேதி தொடங்கியது. வருகிற 20-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்நிலையில் இன்றைய மக்களவை கூட்டத்தில் அரசியலைப்பு மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அதன் மீது மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது:- 

அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கும் பணியை ஒரு குறிப்பிட்ட கட்சி அபகரித்து கபளீகரம் செய்யும் முயற்சியில் எப்போதும் இருந்து வருகிறது. இன்று நான் ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகிறேன், நமது அரசியலமைப்பு ஒரு தனிக் கட்சியின் பரிசு அல்ல என்று காங்கிரசை மறைமுகமாக விமர்சித்தார்

இந்திய அரசியல் சாசனம் இந்திய மக்களால் உருவாக்கப்பட்டது, இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான எங்கள் அரசாங்கம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் எழுதப்பட்டுள்ள தர்மத்தின்படி செயல்படுகிறது. அரசியலமைப்பு முற்போக்கானது, அனைவரையும் உள்ளடக்கியது, மாற்றத்திற்கு உட்பட்டது. நமது நாட்டில் , ஏழைக் குடும்பத்தில் பிறந்த ஒருவர் நாட்டின் பிரதமராகவும், நாட்டின் ஜனாதிபதியாகவும் ஆக முடியும். இவ்வாறு அவர்  பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து