முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரையில் பெய்த கனமழையால் மீனாட்சியம்மன் கோவில் முன்பு குளம் போல் தேங்கிய மழை நீர்

வெள்ளிக்கிழமை, 13 டிசம்பர் 2024      ஆன்மிகம்
Meenakshiyamman 2024-03-19

மதுரை, மதுரை மீனாட்சியம்மன் கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது.

வங்க கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி டெல்டா மற்றும் தென்தமிழக மாவட்டங்களில் நேற்று முன்தினம் அதிகாலை முதல் பல்வேறு இடங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

அந்த வகையில் மதுரையில் நேற்று தொடங்கி தற்போது வரை தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் மதுரை மாநகர் பகுதிகளான கோரிப்பாளையம், தல்லாகுளம், மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது. கனமழை காரணமாக நேற்று பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மதுரை மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

கனமழையால் மதுரையில் உள்ள பிரசித்தி பெற்ற மீனாட்சியம்மன் கோவிலை சுற்றியுள்ள சித்திரை வீதிகள், கிழக்கு ஆவணி மூல வீதி உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. இதில் சித்திரை வீதி பகுதியில் தேங்கி நிற்கும் தண்ணீரில் கழிவுநீரும் கலந்துள்ளது. கோவிலுக்கு முன்பு தேங்கி நிற்கும் மழைநீரை கடந்துதான் பக்தர்கள் கோவிலுக்கு உள்ளே சென்று சாமி தரிசனம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, கோவிலுக்குள் நுழையும்போது தங்கள் கால்களை சுத்தம் செய்துவிட்டு உள்ளே செல்வதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்ய வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் மதுரை மீனாட்சியம்மன் கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் தேங்கி நிற்கும் மழைநீரை விரைவாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து