முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லி சட்டப்பேரவைக்குள் நுழைய ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களுக்கு தடை

வியாழக்கிழமை, 27 பெப்ரவரி 2025      இந்தியா      அரசியல்
Aam-Aadmi-MLA-2025-02-27

புதுடில்லி, டில்லி சட்டப்பேரவை வளாகத்திற்குள் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் நுழைவதைத் தடுத்து நிறுத்துவதாக எதிர்க்கட்சித் தலைவர் அதிஷி வியாழக்கிழமை தெரிவித்தார்.

டில்லி முதல்வர் அலுவலகத்தில் இருந்து அம்பேத்கர் மற்றும் பகத் சிங்கின் புகைப்படங்கள் அகற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் சட்டப்பேரவையில் போராட்டம் நடத்தினார்கள். இதையடுத்து, டில்லி பேரவையில் துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா உயைற்றும்போது, இடையூறு செய்ததாக எதிர்க்கட்சித் தலைவர் அதிஷி உள்பட 21 எம்.எல்.ஏ.க்களை 3 நாள்களுக்கு அவை நடவடிக்கைகளில் பங்கேற்பதில் இருந்து இடைநீக்கம் செய்து பேரவைத் தலைவர் விஜேந்தர் குப்தா உத்தரவிட்டார்.

இந்த நிலையில், இடைநீக்கம் முடிந்து ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் நேற்று காலை சட்டப்பேரவைக்குள் நுழைய முயன்றபோது, பேரவையின் வளாகத்திலேயே அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதையடுத்து அதிஷி வளாகத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதுதொடர்பாக அதிஷியின் எக்ஸ் பதிவில், ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் 'ஜெய் பீம்' என்ற கோஷங்களை எழுப்பியதற்காக அவையிலிருந்து மூன்று நாள்களுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டனர். நேற்று பேரவைக்குள் நுழையக்கூட அனுமதிக்கப்படவில்லை. டில்லி சட்டப்பேரவை வரலாற்றில் இதுபோன்று ஒருபோதும் நிகழ்ந்ததில்லை. பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பிறகு "சர்வாதிகாரத்தின் அனைத்து வரம்புகளையும் மீறுகிறது" என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து