முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மின்வாரியத்தில் காலி பணியிடங்களை உடனே நிரப்ப அரசுக்கு ஓ.பி.எஸ். வேண்டுகோள்

வியாழக்கிழமை, 27 பெப்ரவரி 2025      தமிழகம்
OPS-1 2023 04 24

சென்னை, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் உள்ள காலிப் பணியிடங்கள் உடனுக்குடன் நிரப்பப்பட வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் உள்ள காலிப் பணியிடங்கள் உடனுக்குடன் நிரப்பப்பட வேண்டும். தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் மின் கம்பியாளர், கணக்கீட்டாளர், கேங்மேன் உள்ளிட்ட ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. இதில், கிட்டத்தட்ட முப்பதாயிரம் கேங்மேன் பணியிடங்கள் அடக்கம். இதன் காரணமாக, பணிபுரிகின்ற ஊழியர்களுக்கு கூடுதல் பணிச்சுமை அதிகரித்துள்ளதாகவும், பல இடங்களில் மின் மாற்றிகள் மற்றும் மின் கம்பங்களில் ஏற்பட்டுள்ள பழுதை நீக்க பயிற்சி இல்லாத தனியர்கள் அனுப்பப்படுவதாகவும், அவர்களுடைய உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலை நிலவுவதாகவும், அவர்கள் மின் பழுதை நீக்கிவிட்டு அதற்கான பணத்தை மின் நுகர்வோர்களிடம் கேட்பதாகவும் தகவல்கள் வருகின்றன.

இந்தச் சூழ்நிலையில், முப்பதாயிரம் கேங்மேன் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டிய இடத்தில், வெறும் ஐந்தாயிரம் கேங்மேன்களை நிரப்ப தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் தமிழ்நாடு அரசிடம் அனுமதி கோரியுள்ளதாகவும், அந்த அனுமதியைக்கூட தர அரசு தயக்கம் காட்டுவதாகவும் தெரிய வருகிறது. அனுமதிக்கப்பட்ட காலிப் பணியிடங்களை நிரப்பாமல் காலந்தாழ்த்துவது என்பது கடும் கண்டனத்திற்குரியது. மின் கட்டணத்தையும் பன்மடங்கு உயர்த்திவிட்டு, அதற்குரிய சேவையையும் செய்யாமல் இருப்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல.  மின்சாரத் தேவைக்கும், மின்சார விநியோகத்திற்குமான இடைவெளி என்பது எதிர்பார்ப்பினைவிட அதிகரித்துக் கொண்டே செல்கின்ற இந்தத் தருணத்தில், செலவை மிச்சப்படுத்துவதற்காக காலிப் பணியிடங்களை நிரப்புவதில் கஞ்சத்தனம் காட்டுவது நிர்வாக சீரழிவுக்கு வழிவகுக்கும்.

எனவே, முதல்வர் இதில் தனிக்கவனம் செலுத்தி, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகத்தில் உள்ள முப்பதாயிரம் கேங்மேன் காலிப் பணியிடங்களையும், இதரப் பணியிடங்களையும் உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து