முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காசாவின் எதிர்காலம் குறித்து டிரம்ப் வெளியிட்ட விடியோவால் சர்ச்சை

வியாழக்கிழமை, 27 பெப்ரவரி 2025      உலகம்
Trump 2023-04-13

காசா, காசாவின் எதிர்காலம் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்ட விடியோ  சர்ச்சையாகியுள்ளது. 

கடந்த சில வாரங்களுக்கு முன் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை அமெரிக்காவில் சந்தித்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், 'காசாவை அமெரிக்கா வாங்கிக்கொள்ளும். அங்கு பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தி, ஏராளமான வேலைவாய்ப்புகளை வழங்குவோம். வீடு கட்டித்தருவோம். காசா புனரமைக்கப்பட்ட பின் பாலஸ்தீனர்கள் உட்பட உலக மக்கள் பலரும் அங்கு வசிப்பார்கள்' என்றார்.

இந்நிலையில், காசாவை நவீன நகரமாக மாற்றியதுபோல் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் (ஏ.ஐ.) உருவாக்கப்பட்ட வீடியோவை டிரம்ப் தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தார். இந்த வீடியோ புது சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.

அந்த வீடியோவில் எலான் மஸ்க் மற்றும் டிரம்ப் இருவரும் காசாவை பணக்கார நகரமாக மாற்றியிருக்கிறார்கள். வீடியோவில் காசாவின் ஆடம்பர தோற்றங்கள் காட்டப்பட்டு உள்ளன. வானளாவ உயர்ந்து நிற்கும் கட்டிடங்கள், பரபரப்பாக செயல்படும் சந்தைகள், கடற்கரைகள் என ஆடம்பர வாழ்க்கையை பிரதிபலிக்கும் அம்சங்கள் இடம் பெற்று உள்ளன. இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, டிரம்ப்புடன் கடற்கரையில் அமர்ந்து ஓய்வெடுப்பது போன்றும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த வீடியோவை டிரம்ப் மற்றும் இஸ்ரேல் ஆதரவாளர்கள் வரவேற்றுள்ளனர். ஹமாஸ் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி ஹமாஸ் அமைப்பின் அரசியல் குழு உறுப்பினர் பாசெம் நயீம் கூறியதாவது:- துரதிர்ஷ்டவசமாக, மக்களின் கலாச்சாரங்கள் மற்றும் நலன்களைக் கருத்தில் கொள்ளாமல் டிரம்ப் மீண்டும் தனது கருத்துக்களை முன்மொழிகிறார். காசாவை மறுகட்டமைப்பு செய்து, பொருளாதார மீட்பு, குழந்தைகளின் எதிர்காலத்தை உருவாக்கும் நாளை காசா மக்கள் ஆவலுடன் எதிர்நோக்குகிறார்கள். ஆனால், பெரிய சிறைச்சாலைக்குள் இருந்துகொண்டு அத்தகைய வெற்றியை பெற முடியாது. இந்த சிறைச்சாலை சூழ்நிலைகளை மேம்படுத்தவேண்டும் என நாங்கள் போராடவில்லை, சிறைச்சாலையையும் சிறை அதிகாரியையும் அகற்றுவதற்காகவே போராடுகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து