முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கழிப்பறைகளை பராமரிக்க தனியாரிடம் ஒப்பந்தம்: சென்னை மாநகராட்சி கூட்டத்தில் உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு

வியாழக்கிழமை, 27 பெப்ரவரி 2025      தமிழகம்
Chennai-Corportaion-2025-02

சென்னை, சென்னையில் உள்ள அனைத்து கழிப்பறைகளையும் பராமரிக்க தனியாருடன் ஒப்பந்தம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாமன்றக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னை பெருநகர மாநகராட்சியின் மாமன்றக் கூட்டம் மேயர் பிரியா தலைமையில் நடைபெற்றது. ஏற்கெனவே சென்னையில் 372 இடங்களில் உள்ள 3,270 கழிப்பறை இருக்கைகளை பராமரிக்க தனியாரிடம் ரூ. 430 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. ராயபுரத்தில் 2,159 கழிப்பறைகள், திருவிக நகரில் 958 கழிப்பறைகள் தனியாருக்கு கொடுக்கப்பட்டுள்ளதாகவும் ஒரு கழிப்பறை இருக்கைக்கு ரூ. 364 செலவு என்ற வகையில் தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து ரூ. 1,200 கோடி செலவில் சென்னையில் அனைத்து கழிப்பறைகளையும் பராமரிக்கும் பொறுப்பை தனியாருக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. சென்னை மாநகராட்சி பராமரித்தால் இவ்வளவு செலவு இருக்காது, இதற்காக ஒதுக்கும் நிதி அதிகமாக இருக்கிறது என்று கூட்டத்தில் உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து