முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோயில்களின் செலவிற்கான அரசு மானியம் உயர்வு: ரூ. 27 கோடிக்கான காசோலைகளை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

வியாழக்கிழமை, 27 பெப்ரவரி 2025      தமிழகம்
CM-1-2025-02-27

சென்னை, கன்னியாகுமரி, புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் ஆகிய தேவஸ்தான திருக்கோயில்களின் நிர்வாகம் மற்றும் பராமரிப்பு செலவிற்காக உயர்த்தப்பட்ட அரசு மானியத்திற்கான ரூ. 27 கோடிக்கான காசோலைகளை திருக்கோயில்களின் அறங்காவலர்கள் மற்றும் நிர்வாகிகளிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

இந்து சமய அறநிலையத்துறை தனது நிர்வாகக் கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயில்களில் திருப்பணிகளை மேற்கொண்டு குடமுழுக்கு நடத்துதல், திருத்தேர் மற்றும் திருக்குளங்களை சீரமைத்தல், பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தி வழங்குதல், திருக்கோயிலுக்குச் சொந்தமான நிலங்களை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டெடுத்தல், அன்னதானத் திட்டம் விரிவாக்கம், மலைத் திருக்கோயில்கள் மற்றும் முக்கிய திருக்கோயில்களில் மருத்துவ மையங்கள் அமைத்தல், புதிய கல்வி நிறுவனங்களை தொடங்குதல், ஒருகால பூஜை திட்டம் விரிவாக்கம். துறையின் செயல்பாடுகளை கணினிமயமாக்குதல் போன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்திவருவதோடு, சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்ட புதிய அறிவிப்புகளையும் தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது.

இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், 2024 – 2025 ஆம் ஆண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறையின் மானியக் கோரிக்கையில் அறிவித்தபடி, தற்போது தேவஸ்தான திருக்கோயில்கள் நிர்வாகம் மற்றும் பராமரிப்புகளுக்காக ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும் அரசு மானியத் தொகை கன்னியாகுமரி தேவஸ்தானத்திற்கு ரூ.8 கோடியில் இருந்து ரூ.13 கோடியாகவும், புதுக்கோட்டை தேவஸ்தானத்திற்கு ரூ.5 கோடியில் இருந்து ரூ. 8 கோடியாகவும் மற்றும் தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு ரூ.3 கோடியில் இருந்து ரூ. 6 கோடியாகவும் உயர்த்தி, அதற்கான காசோலைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் கன்னியாகுமரி, புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான திருக்கோயில்களின் அறங்காவலர்கள் மற்றும் நிர்வாகிகளிடம் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பி.என்.ஸ்ரீதர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து