முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வக்ப் மசோதா: பார்லி. கூட்டுக்குழு பரிந்துரைத்த திருத்தங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

வியாழக்கிழமை, 27 பெப்ரவரி 2025      இந்தியா
Parliament-1

புதுடெல்லி, வக்ப் சட்டத் திருத்த மசோதா தொடா்பான பாராளுமன்ற கூட்டுக் குழு பரிந்துரைத்த 14 திருத்தங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நாடு முழுவதும் ‘வக்ப்’ வாரிய சொத்துகளை ஒழுங்குபடுத்தும் நோக்கில் கொண்டுவரப்பட்ட வக்ப் சட்டத் திருத்த மசோதாவை பா.ஜ.க. எம்.பி. ஜகதாம்பிகா பால் தலைமையிலான பாராளுமன்ற நிலைக் குழு ஆய்வு செய்து அறிக்கை தயாரித்தது. இந்த அறிக்கையில், மசோதா மீது பாஜக உறுப்பினா்கள் முன்மொழிந்த திருத்தங்கள் இடம்பெற்றன. அதேநேரம், எதிா்க்கட்சி உறுப்பினா்களின் திருத்தங்கள் நிராகரிக்கப்பட்டன.

இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், பிப். 13ஆம் தேதி பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் கூட்டுக்குழுவின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், கடந்த வாரம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் வக்ப் மசோதா கூட்டுக் குழு அறிக்கை ஆராயப்பட்டு, 14 திருத்தங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், மார்ச் 10ஆம் தேதி தொடங்கவுள்ள பட்ஜெட் தொடரின் இரண்டாவது அமர்வில், வக்ப் திருத்த மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வக்ப் மசோதா கூட்டுக்குழுவில் பாஜக கூட்டணிக் கட்சிகளின் உறுப்பினர்கள் 16 பேர், எதிர்க்கட்சிகளை சேர்ந்த 10 பேர் இடம்பெற்றிருந்தனர். மொத்தம் 66 திருத்தங்கள் முன்மொழியப்பட்டன, இதில், எதிர்க்கட்சிகளின் 44 திருத்தங்கள் நிராகரிக்கப்பட்டன. ஆளும் பாஜக கூட்டணிக் கட்சிகள் பரிந்துரைத்த 23 திருத்தங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து