முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொட்டிவாக்கத்தில் இன்று பிறந்தநாள் பொதுக்கூட்டம்: கூட்டணிக்கட்சி தலைவர்களோடு பங்கேற்கிறார் முதல்வர் ஸ்டாலின்

வியாழக்கிழமை, 27 பெப்ரவரி 2025      தமிழகம்      அரசியல்
Stalin 2022 12 29

சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் பொதுக்கூட்டம் சென்னை கொட்டி வாக்கத்தில் இன்று மாலை நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் முதலமைச்சரோடு தி.மு.க. தோழமைக்கட்சித்தலைவர்களும் பங்கேற்கின்றனர்.

தி.மு.க. தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினின் 72 வது பிறந்தநாள் விழா , மார்ச் 1 ம்தேதி சென்னையில் கொண்டாடப்படுகிறது, அதையொட்டி முதல்வர்  மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் பொதுக்கூட்டம் சென்னையில் இன்று மாலை 5 மணிக்கு சென்னை கொட்டிவாக்கம் ஒய்எம்சிஏ மைதானத்தில் கொண்டாடப்படுகிறது. இந்த நிகழ்ச்சிக்கு நீர்ப்பாசனத்துறை அமைச்சரும் தி.மு.க. பொதுசெயலாளருமான துரைமுருகன் தலைமை தாங்குகிறார். மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரும் தென்சென்னை மாவட்ட  தி.மு.க. செயலாளருமான மா.சுப்ரமணியன் அனைவரையும் வரவேற்றுப்பேசுகிறார்.

இந்த நிகழ்ச்சியில்  திராவிடர் கழகத்தலைவர் கீ.வீரமணி, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை, மதி.மு.க. பொதுசெயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் பெ.சண்முகம், விடுதலைச்சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், மனிதநேய மக்கள் கட்சித்தலைவர் எம்.எச்.,ஜவாஹிருல்லா, கொங்கு நாடு மக்கள் கட்சியின் பொதுசெயலாளர் ஈஆர் ஈஸ்வரன் தமிழக வாழ்வுரிமைக்கட்சியின் நிறுவனத்தலைவர் வேல்முருகன், திராவிட இயக்க தமிழர் பேரவை தலைவர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன், முவேந்தர் முன்னேற்றக்கழகத்தலைவர் ஜி.எம்.சிறிதர் வாண்டையார், தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சித்தலைவர் பொன்.குமார் கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத்தின் நிறுவனத்தலைவர் இனிகோ, இருதயராஜ் சமத்துவ மக்கள் கழகத்தின் தலைவர் எர்ணாவூர் நாராயணன்  மக்கள் விடுதலைக்கட்சியின் நிறுவனத்தலைவர் முருகவேல்ராஜ், மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் தமீமுன் அன்சாரி,முக்குலத்தோர் புலிப்படை தலைவர் நடிகர் கருணாஸ், ஆதித்தமிழர் பேரவை தலைவர் அதியமான்ஸ ஆம் ஆத்மி கட்சி மாநிலத்தலைவர் வசீகரன் தமிழ்மாநில தேசிய லீக் பொதுசெயலாளர் திருப்பூர் அல்தாப் , அகில இந்திய வல்லரசு பார்வர்டு பிளாக் தலைவர் பி.என்.அம்மாசி  உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். கூட்டத்திற்கான ஏற்பாடுகளை சென்னை தெற்கு மாவட்ட தி.மு.க.வினர் செய்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து