முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தோற்பது எனக்கு பிடிக்கவில்லை: இங்கி. கேப்டன் ஜாஸ் பட்லர் பேட்டி

வியாழக்கிழமை, 27 பெப்ரவரி 2025      விளையாட்டு
Jazz-Butler-2025-02-27

கராச்சி, தோற்பது எனக்கு  பிடிக்கவில்லை என இங்கிலாந்து கேப்டன் ஜாஸ் பட்லர்  கூறியுள்ளார்.

ஆப்கானிஸ்தான் வெற்றி...

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டின் 8-ஆவது ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் 8 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை ‘த்ரில்’ வெற்றி கண்டது. முதலில் ஆப்கானிஸ்தான் 50 ஓவா்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 325 ரன்கள் சோ்க்க, இங்கிலாந்து 49.5 ஓவா்களில் 317 ரன்களுக்கே 10 விக்கெட்டுகளையும் இழந்தது. இந்தத் தோல்வியினால் இங்கிலாந்து அணி சாம்பியன்ஸ் டிராபியிலிருந்து வெளியேறியது.

கடுமையான முடிவுகள்...

இது குறித்து ஜாஸ் பட்லர் கூறியதாவது: முன்னதாகவே தொடரிலிருந்து வெளியேறுவது வருத்தமாக இருக்கிறது. வெற்றிபெற வாய்ப்பிருந்தும் அதை விட்டுவிட்டோம். ஜோ ரூட் நம்பமுடியாத அளவுக்கு நன்றாக விளையாடினார். அழுத்தத்தை நன்றாக சமாளித்து ஆடினார். அவருக்கு துணையாக டாப் 6 பேட்டர்களில் யாரவது ஒருவர் உதவியிருக்க வேண்டும். உணர்ச்சிகரமாக இருப்பதால் இப்போது எதுவும் நான் சொல்ல விரும்பவில்லை. நான் என்னைப் பற்றியும் தொடக்க வீரர்கள் சிலர் குறித்தும் சிந்திக்க வேண்டும். கேப்டனாக இல்லாத போதும் நான் தலைமைப் பொறுப்பை ரசித்தேன். ஆனால் முடிவுகள் கடுமையாக இருக்கின்றன.

தோற்பது பிடிக்கவில்லை...

நான் கேப்டன்சியை (தலைமைப் பொறுப்பை) ரசித்தேன். பலருக்கும் எனக்கு ஒத்துவராது என்றார்கள். ஆனால், நான் மகிழ்ச்சியாக செய்தேன். தோற்பது எனக்கும் பிடிக்கவில்லை. கண்ணாடியைப் பார்த்து 'நான் பிரச்னையின் ஒரு பகுதியா அல்லது தீர்வின் ஒரு பகுதியா?’ எனக் கேட்டுக் கொள்கிறேன். நான் அதைத்தான் தீர்க்க விரும்புகிறேன் எனக் கூறியுள்ளார். நிச்சயமாக அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்லவே நினைக்கிறோம். ஆனால், தோல்விகள் நீண்ட காலமாக ஏற்படும்போது கூடுதல் கனமாகிறது. நம்பிக்கையுடன் இருக்கும் அணியே வெல்கிறது. அப்படிதான் விளையாட்டில் சில நேரங்களில் நடக்கின்றன.

வெறுப்பாக இருக்கிறது... 

நான் எனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தும்போது நான் தான் உலகத்திலேயே சிறந்த வீரர். ஆனால், தற்போது அந்த அளவுக்கு விளையாடுவதில்லை. நல்ல டச்சில் இருந்தாலும் ரன்களை குவிக்க முடியவில்லை. அதனால் வெறுப்பாக இருக்கிறது எனக் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து