முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட்: ஆஸி.,-ஆப்கன் இன்று மோதல்

வியாழக்கிழமை, 27 பெப்ரவரி 2025      விளையாட்டு
Australia 2024-02-06

லாகூர், சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலியா- ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

சாம்பியன்ஸ் டிராபி... 

9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி பாகிஸ்தான் மற் றும் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் பங்கேற்ற 8 நாடுகளும் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டது. ஏ பிரிவில் இருந்து இந்தியா, நியூசிலாந்து அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறின. பாகிஸ்தான், வங்கதேசம் வெளியேற்றப்பட்டன. பி பிரிவில் இங்கிலாந்து அணி வெளியேறியது. ஆப்கானிஸ்தானிடம் அதிர்ச்சிகரமாக தோற்றதால் அந்த அணிக்கு இந்த நிலைமை ஏற்பட்டது. இந்த பிரிவில் தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா தலா 3 புள்ளிகளுடனும், ஆப்கானிஸ்தான் 2 புள்ளியுடனும் உள்ளன.

அரைஇறுதிக்கு முன்னேறுமா...?

இந்தப் போட்டி தொடரின் 10-வது லீக் ஆட்டம் லாகூரில் இன்று நடக்கிறது. இதில் ஆஸ்திரேலியா- ஆப்கானிஸ்தான் மோதுகின்றன. இங்கிலாந்துக்கு அதிர்ச்சி கொடுத்தது போல் ஹஸ்மத்துல்லா ஷகிதி தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவை தோற்கடித்து அரைஇறுதிக்கு முன்னேறுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. ஆப்கானிஸ்தான் முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவிடம் 107 ரன்னில் தோற்றது. 2-வது போட்டியில் இங்கிலாந்தை 8 ரன்னில் வீழ்த்தியது. அந்த அணியில் இப்ராகிம் ஸத்ரன், கேப்டன் ஹஸ் மத்துல்லா ஷகிதி, அஸ்மத்துல்லா ஒமர்சாய், ரஷீத்கான் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர். 

ஆஸி .,க்கு வாய்ப்பு...

ஸ்டீவ் சுமித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி முதல் ஆட்டத்தில் இங்கிலாந்துக்கு எதிராக 352 ரன் இலக்கை எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தென் ஆப்பிரிக்காவுடன் மோத வேண்டிய 2-வது ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டது.  ஆப்கானிஸ்தானை வீழ்த்தி ஆஸ்திரேலியா அரைஇறுதிக்கு நுழையும் ஆர்வத்தில் உள்ளது. அந்த அணியில் ஜோஸ் இங்கிலீஷ், மேத்யூ ஷார்ட், மேக்ஸ்வெல், டிராவிஸ் ஹெட், பென்துவர் சுயிஸ் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர். இன்றைய ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டாலும் ஆஸ்திரேலியா அரை இறுதிக்கு முன்னேறிவிடும். ஆப்கானிஸ்தான் வெளியேற்றப்படும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து