முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

ஸ்மார்ட்போன்களில் கிருமிகள்

நாம் பயன்படுத்தி வரும் ஸ்மார்ட்போன்களில் 3 விதமான புதிய நுண்ணுயிர் கிருமிகள் உயிர் வாழ்வதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். மத்திய அரசின் தேசிய செல் அறிவியல் மையத்தின் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் ஸ்மார்ட்போன் திரையில் 3 விதமான புதிய நுண்ணுயிர் கிருமிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அறிவியல் இலக்கியத்தில் இதுவரை இல்லாத 2 வித பாக்டீரியா, பூஞ்சை (ஃபங்கஸ்) இருப்பது பயோடெக்னாலஜி துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் இது போன்ற கிருமிகளில் இருந்து பாதிக்கப்படாமல் இருக்க ஸ்மார்ட்போன் திரைகளை அவ்வப்போது மெல்லிய துணியை கொண்டு சுத்தம் செய்வது நல்லது என தெரிவிக்கப்பட்டுள்ளது. சுத்தம் செய்யும் போது அவற்றை ஆஃப் செய்து வைக்க வேண்டுமாம்.

இந்தியாவின் மர நகரம் எது தெரியுமா?

ஆர்பர் டே அறக்கட்டளை மற்றும் ஐ.நா.வின் உணவு மற்றும் விவசாய அமைப்பு இணைந்து ஆண்டுதோறும் ‘உலகின் மர நகரம்’ என்ற அங்கீகாரத்தை உலகில் உள்ள நகரங்களுக்கு வழங்கி வருகிறது. இந்த ஆண்டு மும்பையை “உலகின் மர நகரம் 2021” ஆக அறிவித்துள்ளது. இந்த பட்டத்தை வெல்லும் இந்தியாவின் இரண்டாவது நகரம் மும்பை ஆகும். ஏனெனில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து ஐதராபாத் ‘உலகின் மர நகரம்’ என்ற பட்டத்தை பெற்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளது. இந்த அங்கீகாரத்தின் மூலம், ஆரோக்கியமான, நெகிழக்கூடிய மற்றும் மகிழ்ச்சியான நகரங்களை உருவாக்குவதில் மரங்களின் முக்கியத்துவத்தை அங்கீகரிக்கும் ஒத்த எண்ணம் கொண்ட நகரங்களின் பட்டியலில் மும்பை இணந்துள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக பிரஹன்மும்பை முனிசிபல் கார்ப்பரேஷனின் (பிஎம்சி) தோட்டத் துறையின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வேகமாக வளர்ந்து வரும் நகர்ப்புற காடுகளுக்கு மத்தியில் பசுமையை நிலைநிறுத்துவதற்காக அங்கீகரிக்கப்பட்ட 21 நாடுகளைச் சேர்ந்த 138 நகரங்களின் குழுவில் வட இந்தியாவின் தூக்க நகரமான மும்பையும் இணைக்கப்பட்டுள்ளது மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மாற்றி சேமிக்க....

ஒளியை ஒலி வடிவாகவும், ஒலியை ஒளி வடிவாகவும் மாற்றி கம்யூட்டர் சிப்பில் சேமித்து வைக்க முடியும் என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இதன் மூலம் எதிர்காலத்தில் மிக அதிவேக கம்யூட்டர்களை வடிவமைக்க முடியும். இத்தொழில் நுட்பத்தைக் கொண்டு உருவாகும் கம்யூட்டர் போட்டோனிக் கம்யூட்டர்  என்றும் அவை தற்போதை கம்யூட்டர்களை விட 20 மடங்கு அதிவேகமாக இயங்குமாம்.

யூதர்களின் அடையாளம்

இஸ்ரேலில் உள்ள யூதர் வழிபாட்டுத் தலத்தின் நுழைவாயிலில் கி.பி. 300-ஆம் ஆண்டு முதல் கி.பி. 500-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் யூத மத அடையாளமான ‘பத்து கட்டளைகள்’ செதுக்கப்பட்ட கல்வெட்டு 8.5 லட்சம் டாலர்களுக்கு அமெரிக்காவில் ஏலம் போனது. இக்கல்வெட்டை ஏலம் எடுத்தவர் அருங்காட்சியகம் வைக்கவுள்ளார்.

தேநீர்தான் உணவு

ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் தலைவிரித்தாடும் பஞ்சத்தால் உண்ண உணவு கிடைக்காமல், வெறும் க‌றுப்புத் தேநீரை (பிளாக் டி)மட்டுமே பருகி உயிர்வாழ வேண்டிய நிலை அங்குள்ள மக்கள் இருக்கிறார்கள்.  பால் வழங்கிக் கொண்டிருந்த ஆடுகளும், மாடுகளும் வறட்சியால் இறந்துபோய் விட்டதால் இந்த நிலைமைக்கு அங்குள்ள மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

ராட்சத சூரிய மீன்

கடல் உயிரினங்கள் குறித்து ஆய்வு செய்யும் சர்வதேச நாடுகளைச் சேர்ந்த ஆய்வாளர்கள் குழு, கடந்த நான்கு ஆண்டுகளாக இந்திய-பசுபிக் பகுதிகளில் ஆய்வுகள் மேற்கொண்டு வந்தது. அந்தக் குழுவினர் 130 ஆண்டுகளுக்கு முந்தைய 2 டன் எடை மற்றும் 3 மீட்டர் நீளம் வரை வளரக்கூடிய ராட்சத சூரிய மீனை கண்டுபிடித்தனர். இதை எலும்பு மீன் என்றும் அழைக்கிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 5 days ago