பூமிப்பந்தின் தென்கோடியில் அமைந்துள்ள அண்டார்டிகா முழுவதும் பனிப்பாறைகளைக் கொண்ட கடல் ஆகும். கிரீன்ஹவுஸ் வாயுக்களாலும், வெப்பமயமாகும் கடலாலும் காலநிலை மாற்றம் ஏற்பட்டு துருவப்பகுதிகளில் உள்ள பனிப்பாறைகள் உருகி வரும் வேளையில், மேற்கு அண்டார்டிகாவில் 91 புதிய எரிமலைகள் இருப்பதை சமீபத்தில் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இவற்றின் மூலம் எப்போது வேண்டுமானாலும் பனிப்பாறைகளுக்கு பாதிப்பு வரலாம். இதனால் பனி உருகி கடல் மட்டம் உயரும் அபாயமும் உள்ளது. இது உலகிற்கு மிக முக்கியமான எச்சரிக்கை மணியாக அமைந்துள்ளது. மேலும், இந்த நூற்றாண்டு பூமியின் தென் துருவத்திற்கு அவ்வளவு சிறப்பானதாக இருக்காது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். வருவதாக ஆய்வாளர்கள் தொடர்ச்சியாகக் கூறி வருகின்றனர்.
சில சுவாரிஸ்யமான தகவல்கள்
அலுவலகத்திலோ, கல்விக் கூடங்களிலோ தூங்குபவர்களை நாம் கேலி செய்வதுண்டு. பகல் கனவு பழிக்காது என்பது நமது பழமொழி. ஆனால் அண்மையில் வல்லுநர்கள் மேற்கொண்ட ஆய்வில் பகலில் குட்டி தூக்கம் போட்டால் உடலுக்கும் மனதுக்கும் நல்லது என்கின்றனர். புத்துணர்ச்சி, படைப்பாற்றல், கற்பனைத் திறன், உற்சாகம், நினைவாற்றல், புதுமையான சிந்தனை, புரிந்து கொள்ளும் திறன், ஆராயும் திறன் கிடைக்கும் என்கின்றனர். கணினியில் இருப்பது போல நமது ஆற்றல் குறையும்போது ஒரு 'ரீஸ்டார்ட் பட்டனை' அழுத்தி மீண்டும் 'சார்ஜ்' செய்து கொண்டால் எப்படியிருக்கும்? இம்மாதிரியான ஒரு ரீஸ்டார்ட் பட்டனாக 'நாப்' எனப்படும் 'குட்டித்தூக்கம்' இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். தூக்கத்திலிருந்து விழித்து கொள்ளும் நேரம் முதல் நமது மூளையில் 'அடினோசின்' எனும் ரசாயனம் அதிகரித்து கொண்டே செல்லும். எனவே நீங்கள் அதிக நேரம் விழித்து கொண்டிருக்கும்போது உங்கள் மூளையில் அடினோசின் அதிகமாகும். அது தூக்க உணர்வை அதிகரிக்கும். குறைந்தது 90 நிமிடங்கள் தூங்க வேண்டும் என்கின்றனர் வல்லுநர்கள். இதெல்லாம் நடக்கிற காரியமா என நினைக்கிறவர்களுக்கு இருக்கவே இருக்கிறது யோகா..தியானம்.. இத்யாதி..
முதல் ஒரு ரூபாய் நோட்டு இங்கிலாந்தில் அச்சிடப்பட்டது. இந்த நோட்டு நவம்பர் 30, 1917 அன்று இந்தியாவில் வெளியிடப்பட்டது. அப்போதைய பிரிட்டிஷ் மன்னரான ஐந்தாம் ஜார்ஜின் படம் அந்த ஒரு ரூபாய் நோட்டின் இடது மூலையில் அச்சிடப்பட்டிருந்தது. அதற்கு முன்னதாக 1861-ம் ஆண்டு முதலே இந்தியாவில் நாணயங்கள் வெளியிடப்பட்டன. இருந்த போதிலும், ஒரு ரூபாய் நோட்டு 1917-ம் ஆண்டில்தான் புழக்கத்தில் வந்தது. காரணம் ஒரு ரூபாய் நாணயத்தை தயாரிக்க பயன்படுத்திய வெள்ளி, 2 ஆம் உலகப் போரில் ஆயுதத் தயாரிப்பிற்காக உருக்கப்பட்டுவிட்டது. 1917-ம் ஆண்டில் வெளியிடப்பட்டபோது, ஒரு ரூபாயின் மதிப்பு 10.7 கிராம் வெள்ளிக்கு சமமாக இருந்தது. 10 கிராம் வெள்ளியின் தற்போதைய சந்தை மதிப்பு சுமார் ரூ.670. இந்த 100 ஆண்டுகளில் ஒரு ரூபாயின் மதிப்பு 600 மடங்கு குறைந்துள்ளது. பணத்தை சீராக அல்லது பரிசாக வழங்கும்போது, ஒரு ரூபாய் நோட்டு ஒன்றினைச் சேர்த்து 101/- ரூபாயாக மொய் எழுதும் பழக்கம் காலம் காலமாக நம்மிடையே இருந்துவருகிறது. எனவே ஒரு ரூபாயின் மதிப்பு இது போன்ற சந்தர்ப்பங்களில் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது.
உடல் உறுப்புகள் தட்டுப்பாடு காரணமாக, பன்றிகளின் உடல் உறுப்புகளை மனிதர்களுக்கு பொருத்தலாமா என்ற ஆய்வில் ஈடுபட்டுவந்த விஞ்ஞானிகள் தற்போது, பன்றியின் சிறுநீரகம், இதயம் போன்ற உறுப்புகளை மனிதர்களுக்கு பொருத்த முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர். ஆனால் நோய் தொற்று ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுவதை தடுக்க, பன்றியின் உடல் உறுப்புகளில் உள்ள மரபணுக்களில் செயல்படாமல் அடங்கி கிடக்கும் ‘பெர்வ்’ எனப்படும் வைரஸ்களை அகற்றும் ஆய்வில் ஈடுபட்டனர். தற்போது அவற்றை அகற்றி வெற்றி பெற்றுள்ளனர். இதன் மூலம், எதிர்காலத்தில் பன்றிகளின் உடல் உறுப்புகளை உடல் உறுப்பு மாற்று ஆபரேசன் மூலம் மனிதர்களுக்கு பயன்படுத்த முடியும் என்ற நம்பிக்கையில் உள்ளனர்.
‘செல்பி’ மோகத்தால் ஏற்படும் உயிர் இழப்புகள் குறித்த ஆய்வில், உலகிலேயே இந்தியாவில் தான் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்ட அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை உலகம் முழுவதும் 127 பேர் ‘செல்பி’ மோகத்தால் உயிரிழந்ததாகவும், இதில், 76 உயிரிழப்புகள் இந்தியாவில் நடந்தவை என்றும் தெரியவந்துள்ளது.
ஃபேஸ்புக், பிளாக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் போன்றவற்றைப் பயன்படுத்துகிறவர்கள் அனைவரும் மிக எளிதாக போட்காஸ்டிங் (Podcasting) எனப்படும் வானொலியைத் தொடங்க முடியும். பிளாக்கை எப்படி இலவசமாகத் தொடங்க முடிகிறதோ, அதே போன்று போட்காஸ்டிங் வானொலியையும் இலவசமாகவே தொடங்க முடியும். தனியாக நாமே ஒரு பக்கத்தை அமைப்பதற்குப் பெரிய சர்வர்கள் தேவைப்படும்; அதனால், முதலில் ஏதேனும் ஒரு போட்காஸ்டிங் எனப்படும் சேவை இணையதளத்தை நாடலாம். இதற்குப் பல்வேறு இணையதளங்கள் உதவுகின்றன. மேலும், செயலியை செல்பேசியிலும் பதிவிறக்கிக்கொள்ள முடியும். நம் செல்பேசியிலேயே நிகழ்ச்சிகளை ஒலிப்பதிவு செய்து, அதிலேயே எடிட்செய்யும் வசதியும் உள்ளன. எனவே ஸ்மார்ட்போன் வைத்துள்ள யார் வேண்டுமானாலும் போட்காஸ்டிங் எனப்படும் வானொலியைத் தொடங்க முடியும். இதற்கு யாரிடமும் அனுமதி வாங்கத் தேவையில்லை. இதற்காக ‘ஆங்கர்’ (anchor.fm), ‘ஸ்பாட்டிஃபை’ (open.spotify.com), ‘கூகுள் பாட்காஸ்ட்’ (google.com/podcasts), ‘ஆப்பிள் பாட்காஸ்ட்’ (podcast.apple.com), ‘பிரேக்கர்’ (breaker.audio), ‘காஸ்ட் பாக்ஸ்’ (castbox.fm), ‘ஓவர் காஸ்ட்’ (overcast.fm), ‘பாக்கெட் காஸ்ட்’ (pca.st), ‘ரேடியோ பப்ளிக்’ (radiopublic.com) போன்ற இணையதளங்கள் இலவசமாகவே இடம் தருகின்றன. ஆனால், அரசின் ஒலிபரப்புக் கொள்கைகளுக்கு உட்பட்டே போட்காஸ்டிங் எனப்படும்ஒலிபரப்பும் இருக்க வேண்டும். ஒலிபரப்புக் கொள்கைகளை ஒன்றிய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் இணையதளத்துக்குச் (mib.gov.in/broadcasting/air-broadcast-code) சென்று பார்த்துக்கொள்ளலாம்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்2 months 6 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்2 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.3 months 1 day ago |
-
இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்: வலுவான நிலையில் தென்னாப்பிரிக்கா
29 Nov 2024டர்பன் : இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி உணவு இடைவேளையின்போது, 382 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது.
-
வங்கக்கடலில் புயல் உருவானது
29 Nov 2024சென்னை, வங்கக்கடலில் புயல் உருவானதாக தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், இன்று 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுத்துள்ளது.
-
சென்னைக்கு தென்கிழக்கே 300 கி.மீ. தொலைவில் புயல்
29 Nov 2024சென்னை : தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஃபென்ஜால் புயல் சென்னைக்கு தென்கிழக்கே 300 கிமீ தொலைவில் நிலைகொண்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
சென்னையில் புயலை எதிர்கொள்ள 28 ஆயிரம் பணியாளர்கள் தயார் : மேயர் பிரியா தகவல்
29 Nov 2024சென்னை : பென்ஜால் புயலை எதிர்கொள்ள சென்னை மாநகராட்சி தயார் நிலையில் உள்ளதாக பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்தார்.
-
வலைப்பயிற்சியில் தீவிரம்: ஆஸி.க்கு எதிரான 2-வது டெஸ்ட்டில் ஷுப்மன் கில் விளையாடுவாரா?
29 Nov 2024மும்பை : காயத்திலிருந்து குணமடைந்து வரும் ஷுப்மன் கில் வலைப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.
-
சவரன் ரூ.57 ஆயிரத்தை தாண்டியது தங்கம் விலை நகை பிரியர்கள் அதிர்ச்சி
29 Nov 2024சென்னை:
-
வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்த வேண்டும் : லல்லு பிரசாத் யாதவ் வலியுறுத்தல்
29 Nov 2024சென்னை : நாட்டில் தேர்தல்கள் வாக்குசீட்டு முறையில் நடத்தப்பட வேண்டும் என்று ராஷ்ட்ரிய ஜனதா தளக் கட்சியின் தலைவர் லல்லு பிரசாத் யாதவ் கூறியுள்ளார்.
-
மழைக்காலங்களில் மக்கள் கடைப்பிடிக்க வேண்டியவை: தமிழக மின்சாரத்துறை அறிவுறுத்தல்
29 Nov 2024சென்னை, மழைக் காலங்களில் மக்கள் கடைப்பிடிக்க வேண்டியவை குறித்து மின்சாரத் துறை அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
-
இந்தோனேசியாவில் நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 27 ஆக உயர்வு
29 Nov 2024ஜகார்த்தா, இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 27 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
அரபிக்கடலில் 500 கிலோ போதை பொருள் சிக்கியது
29 Nov 2024 -
கல்வித்துறை சார்ந்த வழக்குகளில் அரசுக்கு ரூ. 1,100 கோடி இழப்பு: சென்னை ஐகோர்ட் கண்டனம்
29 Nov 2024சென்னை, அரசு வழக்கறிஞர்களின் தவறான செயல்பாடுகளால் கல்வித்துறை சார்ந்த வழக்குகளில் ரூ.1,100 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஐகோர்ட்டு கண்டனம் தெரிவித்துள்ளது.
-
சிறுபான்மையினரை பாதுகாக்க வேண்டும்: வங்காளதேசத்திற்கு இந்தியா வலியுறுத்தல்
29 Nov 2024புதுடெல்லி, சிறுபான்மையினரை பாதுகாக்கும் பொறுப்பை வங்காளதேச அரசு நிறைவேற்ற வேண்டும் என இந்தியா வலியுறுத்தியுள்ளது.