முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

காஸ்ட்ரோ அறியாதது

பிடல் காஸ்ட்ரோ ஹவானா பல்கலைக்கழகத்தில் சட்டம் படித்து கொண்டிருக்கும் போது தான் அரசியல் ஆர்வலராக மாறினார். இவருக்கு, சுருட்டு பிடிப்பது மிகவும் பிடித்தமான விஷயமாக இருந்தது. ஆனால், ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு 1985-ல்இருந்து சுருட்டு பிடிப்பதை நிறுத்தினார் . இவர் கியூபாவை, 49 ஆண்டுகள் ஆட்சி செய்துள்ளார். இது பத்து அமெரிக்க அதிபரின் ஆட்சி கால வருடங்கள் ஆகும். ஈட்டி கொண்டு மீன் பிடிப்பது, சமையல் செய்வது மற்றும் புத்தகம் வாசிப்பது போன்றவை பாலிய வயது பிடல் காஸ்ட்ரோவுக்கு பிடித்த விஷயங்களாக இருந்தன. கியூபாவின் பிரதமராக 1959 - 1976 வரையும்., 1976 முதல் 2008 வரை ஜனாதிபதியாகவும் பொறுப்பு வகித்தார் பிடல் காஸ்ட்ரோ.

கோடி வருமானம்

1890ம் ஆண்டில் பிரிட்டிஷ் காரர்களால் ஏற்படுத்தப்பட்ட, மஹாலக்ஷ்மி டோபிகாட் மும்பையில் மஹாலக்ஷ்மி ரயில் நிலையம் அருகே அமைந்துள்ள சலவை செய்யும் இடமாகும். இங்குள்ள தொழிலாளர்கள் மொத்தம் ஏறத்தாழ 7000 பேர். இவர்கள் ஒரு நாளைக்கு 18 முதல் 20 மணி நேரம் பகுதி நேரம் முறையில் உழைக்கின்றனர். இவர்களின் மொத்த வருமானம் 100 கோடி ஆகும். துவைத்தல், காயவைத்தல், தேய்த்தல் என அனைத்து வேலைகளையும் செய்து அந்தந்த பகுதிகளுக்கு கொண்டு போய் சேர்க்க வேண்டியது அவர்களின் பொறுப்பு. இந்த ஏழாயிரம் பேரும் இப்படியே ஒற்றுமையாக குழுப்பணியாற்றுவதால் இவர்களுக்கு குழப்பங்கள் என்பது எழாமல் உள்ளதாக கூறுகின்றனர் இவர்கள்.

சீனாவில் மம்மி கண்டுபிடிப்பு

மம்மி என்றாலே நம் அனைவருக்கும் உடனடியாக நினைவுக்கு வருவது எகிப்தும், அதன் பிரமிடுகளும்தான். அங்குதான் பண்டைய காலங்களில் உடலை பதப்படுத்தி மம்மிக்களாக பாதுகாத்து வந்துள்ளனர். ஆனால் அதிசயிக்கதக்க வகையில் சீனாவிலும் மம்மிகள் இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. 2011 ஆம் ஆண்டில் சீனாவின் தைஜோவில் சாலை தொழிலாளர்கள் ஒரு சாலையை அகலப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் வேலை பார்த்து கொண்டிருந்தபொழுது வித்தியாசமான ஒன்றை கண்டார்கள். உடனே தொல்பொருள் ஆய்வாளர்களிடம் சொல்ல அவர்கள் வந்து அகழ்வாராய்ச்சி செய்து பாக்க அவர்களுக்கு கிடைத்தது சவப்பெட்டியுடன் கூடிய ஒரு சிறிய கல்லறை. உள்ளே கிட்டத்தட்ட சரியாக பாதுகாக்கப்பட்ட சீன மம்மி ஒன்று இருந்தது. அப்படி அரிதான கலைப்பொக்கிஷமான சீன மம்மியை சாலை தொழிலாளர்கள்தான் கண்டுபிடிச்சிருக்காங்க என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

சிகரெட் கழிவில் ....

சிகரெட் புகைத்த பின் எறியப்படும், பஞ்சுடன் கூடிய கழிவு துண்டுகளை ரோடு போட பயன்படுத்த முடியுமாம். ரோடு போட‘பாராபின் வேக்ஸ்’ எனப்படும் மெழுகு மற்றும் ரசாயன பொருளுடன் சிகரெட் கழிவு துண்டுகளும் சேர்த்து ஒரு கலவை தயாரிக்கப்படுகிறது. இதை கொண்டு போடப்படும் ரோடு பலம் வாய்ந்ததாகவும்,  அந்த ரோட்டில் வெப்பம் அதிகம் வெளியேறுவதும் தடுக்கப்படுமாம்.

சயின்ஸ் பிக்சன் பாணியில் 2 நகரங்களை இணைக்கும் ரியல் டைம் வீடியோ போர்ட்டல்

சயின்ஸ் பிக்சன் எனப்படும் அறிவியல் புனைகதைகள் அல்லது அறிவியல் புனைவு படங்கள் என்பவை அறிவியலின் மாயாஜாலத்தை காட்டுவது போல சித்தரிக்கும். ஓரிடத்தில் நடப்பதை நிகழ்காலத்திலும் எதிர்காலத்திலும் தெரிந்து கொள்வது போன்ற விதவிதமான டிவைஸ்களை காண்பிப்பார்கள்.இது போன்ற கருவிகள் ரியல் வாழ்க்கையில் இருந்தால் எப்படி இருக்கும் என்பது பொது மக்களுக்கு ஒரு கனவாகவே இருந்து வருகிறது. தற்போது அதை நனவாக்கும் வகையில், இதற்கு ஓர் உதாரணமாக போலந்து லிதுவேனியா நாடுகளுக்கு இடையே மக்கள் சம காலத்தில் தொடர்பு கொள்ளும் வகையில் மிகவும் பிரம்மாண்டமான ஒரு ரியல் டைம் வீடியோ போர்ட்டல் நிறுவப்பட்டுள்ளது. லிதுவேனியாவில் உள்ள விலினியஸ் மற்றும் போலந்து நாட்டில் உள்ள லுப்ளின் நகர மக்கள் ரியல் டைம்மில் நேரடியாக சந்தித்துக் கொள்ள வசதி செய்யும் வகையில் இந்த மிகப் பெரிய வீடியோ போர்ட்டல் அமைக்கப்பட்டுள்ளது.இங்கிருந்து ஒருவர் அதன் மூலம் மற்ற நகரத்திலிருக்கும் நபரை ஒரே நேரத்தில் தொடர்பு கொள்ள முடியும். ஏறக்குறைய சயின்ஸ் பிக்சன், மாயாஜால படங்களில் வருவதைப் போல மிகவும் ஆச்சரியப்படத்தக்க வகையில் இந்த அமைப்பு நிறுவப்பட்டு உள்ளது. Benediktas Gylys Foundation என்ற அறக்கட்டளையின் உதவியுடன் இந்த போர்ட்டல் நிறுவப்பட்டுள்ளதாக அதன் தலைவர் Benediktas Gylys தெரிவித்தார்.  மேலும் இந்த போர்ட்டல் மூலம் மக்களிடையே ஒற்றுமை, நல்லுறவு போன்றவை வளர்ந்து கடந்த கால கசப்புகள் மறைய உதவும் என்றார்.அதே போல பெருந்தொற்று காலத்தில் நம்மிடம் அறுந்து போன உறவுகளின் பாலங்களை மீண்டும் இணைக்க இந்த போர்ட்டல் உதவுவதுடன் சர்வதேச அளவிலான நாடுகளுடன் ஒத்துழைப்பு, நல்லுறவு, அண்டை நாடுகளுடன் நட்புறவு போன்றவை மேம்படும் என போலந்து அமைச்சர்Krzysztof Stanowski தெரிவித்தார்.ஹாரி பாட்டர் பாணியிலான இந்த அமைப்பானது  தலா சுமார் 11 டன் எடை கொண்டதாகும். இதன் பராமரிப்பு பகுதியளவில் லிதுவேனியன் மற்றும் போலந்து உள்ளாட்சிகளின் நிதியிலிருந்து மேற்கொள்ளப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் Reykjavik மற்றும் London போன்ற நகரங்களையும் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மறைந்த கண்டம்..

மொரீஷியஸ் தீவுக்கடியில் கண்டம் மறைந்ததற்கான தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மொரீஷியஸ் தீவு கடந்த 9 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னதாக தோன்றியிருக்கலாம் என கூறப்படுகிறது. தற்போது மொரிஷீஸ் தீவில் சிர்கான்ஸ் எனப்படும் கனிம பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது 3 பில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தை சேர்ந்தது. 9 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னதாக தோன்றியதாக கூறப்படும் மொரீஷியஸ் தீவில், 3 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னதாக உள்ள கனிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மொரீஷியஸ் தீவுக்கடியில் கண்டம் மறைந்ததற்கான தடயங்கள் தெரியவந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 6 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 6 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 6 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 6 days ago