உலகையே ஆட்டி படைத்த சர்வாதிகாரியான ஹிட்லரின் கோரிக்கையையே ஏற்க மறுத்த இந்திய ஹாக்கி வீரர் ஒருவர் இருந்தார். அவர் யார் என்று தெரியுமா... அவர் பிரபல ஹாக்கி வீரர் தயான் சந்த். இந்தியா கடந்த 1936 பெர்லின் ஒலிம்பிக்ஸில் ஜெர்மனியை 8-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றதும், பிரபல ஹாக்கி வீர்ர தயான் சந்திற்கு, ஹிட்லர் ஜெர்மனி குடியுரிமை தந்து ராணுவத்தில் மிகப்பெரிய பதவி அளிப்பதாகவும் கூறினார். அவற்றை ஏற்றுக்கொண்டு ஜெர்மனி ஹாக்கி அணியில் அவர் விளையாட வேண்டுமென ஹிட்லர் விரும்பினார். ஆனால் தயான் சந்த் அதனை ஏற்க மறுத்துவிட்டார்.
சில சுவாரிஸ்யமான தகவல்கள்
தெற்கு சீனாவில் ஏஜி 600 ரக விமானம் வடிவமைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டுள்ளது. 37 மீட்டர் நீளமும், 53.3 டன் எடை கொண்ட இந்த விமானம் உலகின் மிகப் பெரிய விமானம் என்ற பெருமையை பெற்றுள்ளது. இதில் 370 டன் தண்ணீரை நிரப்பும் வகையில் கொள்ளளவு கொண்ட டேங்க் வடிவமைக்கப்பட்டுள்ளது இதன் சிறபம்சம்.
கடல் வாழ் உயிரினங்களிலேயே மனிதர்களுடன் மிகவும் நட்பாகவும், உறங்கும் போது ஒரு கண்ணை மூடி, ஒரு கண்ணை திறந்து வைத்து கொண்டிருக்கும் அந்த விலங்கினம்... நிச்சயமாக அது டால்பின்கள்தான் என்பது சொல்லாமலேயே தெரிந்திருக்கும்...எதிரிகளிடமிருந்து தங்களை தற்காத்து கொள்ளவும், மூளையின் ஆற்றலை பாதுகாக்கவும் டால்பின்கள் இவ்வாறு ஒரு கண்ணை திறந்து வைத்துக் கொண்டு உறங்குவதாக ஆய்வாளர்கள் சொல்கின்றனர். இதன் மூலம் அரைத் தூக்கம், அரை விழிப்பு என்ற நிலையில் எப்போது டால்பின்கள் உஷராக இருக்கின்றன... என்ன ஒரு ஆச்சரியம் பாருங்கள்.
பாஸ்போர்ட் என்ற வார்த்தை பைபிளில் இருந்து உருவானதாக வரலாறு ஒன்று கூறுகிறது. ஆனால், கிறிஸ்துவுக்கு முன்பும் இந்த வழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. அதாவது 450 பி.சி. காலத்தில் பெர்சியாவில் ஆட்சி செய்த மன்னர் ஒருவர், அவரது அரசவையில் பணியாற்றிய அதிகாரிகள், நாட்டின் எல்லையில் உள்ள ஆற்றைக் கடந்து செல்வதற்கு ஒரு அனுமதிச்சீட்டு கொடுப்பதை வழக்கமாக வைத்திருந்தாராம். இருப்பினும், 15ஆம் நூற்றாண்டில் தான் பாஸ்போர்ட் என்ற வார்த்தை உருவானதாக தெரிகிறது. அப்போது பாஸர் (வழிபோக்கர்) + போர்ட் (துறைமுகத்தை கடக்க இருப்பவர்) என்ற கூட்டுச் சொற்கள் சேர்ந்த பாஸ்போர்ட் என்றானதாம்.
உயிரிழந்துபோன பயனாளர்களின் நினைவுகளை பகிர்ந்து மரியாதையை செலுத்துங்கள் என அவர்களது சக நண்பர்களுக்கு ஃபேஸ்புக்கிலிருந்து தவறுதலாக தகவல் அனுப்பப்பட்டுள்ளது. இந்த இறப்புப் பட்டியலில் ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க் பெயரும் இருந்ததுதான் மிகப்பெரிய அதிர்ச்சி.
உலகிலேயே மிகவும் அமைதியான இடம் எங்குள்ளது என்ற தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள். அது இயற்கையான இடமோ, நகரோ அல்ல. மாறாக அது ஒர் அலுவலகம். அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் உள்ள ரெட்மாண்ட் என்ற இடத்தில் அமைந்திருக்கும் மைக்ரோஷாப்ட் தலைமையகத்தில் உள்ள பரிசோதனை கூடம்தான் அந்த இடம். இந்த இடத்தில் உள்ள சத்தத்தின் அளவு வெறும் 20 டெசிபலுக்கும் கீழே உள்ள இடம். இதன் மூலம் முந்தைய சாதனைகளை இந்த இடம் முறியடித்துள்ளது
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்2 months 5 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்2 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.3 months 13 hours ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 29-11-2024.
29 Nov 2024 -
வங்கக்கடலில் புயல் உருவானது
29 Nov 2024சென்னை, வங்கக்கடலில் புயல் உருவானதாக தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், இன்று 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுத்துள்ளது.
-
அரபிக்கடலில் 500 கிலோ போதை பொருள் சிக்கியது
29 Nov 2024 -
சவரன் ரூ.57 ஆயிரத்தை தாண்டியது தங்கம் விலை நகை பிரியர்கள் அதிர்ச்சி
29 Nov 2024சென்னை:
-
வலைப்பயிற்சியில் தீவிரம்: ஆஸி.க்கு எதிரான 2-வது டெஸ்ட்டில் ஷுப்மன் கில் விளையாடுவாரா?
29 Nov 2024மும்பை : காயத்திலிருந்து குணமடைந்து வரும் ஷுப்மன் கில் வலைப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.
-
கல்வித்துறை சார்ந்த வழக்குகளில் அரசுக்கு ரூ. 1,100 கோடி இழப்பு: சென்னை ஐகோர்ட் கண்டனம்
29 Nov 2024சென்னை, அரசு வழக்கறிஞர்களின் தவறான செயல்பாடுகளால் கல்வித்துறை சார்ந்த வழக்குகளில் ரூ.1,100 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஐகோர்ட்டு கண்டனம் தெரிவித்துள்ளது.
-
இந்தோனேசியாவில் நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 27 ஆக உயர்வு
29 Nov 2024ஜகார்த்தா, இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 27 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
மோசமான வெள்ளம்: மலேசியாவில் 3 பேர் பலி
29 Nov 2024கோலாலம்பூர், மலேசியாவில் ஏற்பட்டுள்ள மோசமான வெள்ளத்தால் 3 பேர் உயிரிழந்துள்ளனர். 80 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ளனர்.