உலகிலேயே மிகப் பெரிய சிலந்தி வலையை கடந்த 2008 இல் விஞ்ஞானிகள் மடகாஸ்கர் தீவில் கண்டுபிடித்துள்ளனர். மடகாஸ்கரில் உள்ள ஒரு ஆற்றின் மேல் பரந்து விரிந்து காணப்படுகிறது இந்த சிலந்தி வலை. தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த சிலந்தி வலை 82 அடி அகலத்துடன் காணப்படுகிறது. இதுவரை விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்டதிலேயே இதுதான் மிகப் பெரிய சிலந்தி வலை எனக் கூறப்படுகிறது.
சில சுவாரிஸ்யமான தகவல்கள்
விஞ்ஞானத்தில் எப்போதும் புதுமைகள் சாத்தியம் தான். அண்மையில் இஸ்ரேல் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ள உயிரினம் ஆக்சிஸன் அதாவது பிராண வாயு இல்லாமலேயே உயிர் வாழக்கூடியது. இது அறிவியலில் அதிசயம். சால்மன் மீன்களின் தசையில் வாழக்கூடிய உயிரினம் இது. 10 உயிரணுக்களுக்கும் குறைவாகக் கொண்ட இந்த ஒட்டுண்ணிக்கு ஹென்னிகுயா சால்மினிகோலா என்று பெயரிடப்பட்டுள்ளது.ஜெல்லிமீன் மற்றும் பவளப்பாறை இனத்தை சேர்ந்த உயிரினமாக இந்த ஒட்டுண்ணி கருதப்படுகிறது. இவை பிராணவாயுவை உள்வாங்குவதும் இல்லை, மூச்சுவிடுவதும் இல்லை. பரிணாம வளர்ச்சியில் புதிய திசையை காட்டியுள்ளதாக விஞ்ஞானிகள் வியக்கின்றனர். அவர்களோடு சேர்ந்து நாமும் வியப்போம்.. என்ன ஓகேவா..
180 ஆண்டுகள் பழமையான மரங்கள் ஸ்பெயினில் இருந்து ஆந்திராவுக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கொண்டுவரப்பட்டு ஆந்திராவில் உள்ள கவுதம் நர்சரியில் வைத்து வளர்க்கப்பட்டது. முகேஷ் அம்பானியின் ஜாம்நகர் பங்களாவில் இந்த 2 அரிய வகை ஆலிவ் மரங்கள் விரைவில் அமைக்கப்பட உள்ளன. 180 ஆண்டுகள் பழமையான ஆலிவ் மரங்களின் தாவரவியல் பெயர் Olea Europaea.3 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்பெயினில் இருந்து கௌதமி நர்சரிக்கு கொண்டு வரப்பட்டு வளர்க்கப்பட்டது. இந்த இரண்டு மரங்களும் நவம்பர் 24 அன்று ஆந்திராவில் இருந்து ஒரே டிரக்கில் ஏற்றப்பட்டு கொண்டுவரப்பட்டது. இந்த மரங்கள் குஜராத்தில் இலக்கை அடைய 5 நாட்கள் பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மரங்களின் விலை விவரங்களை தெரிவிக்க கவுதம் நர்சரி மறுத்து விட்ட போதிலும் அவற்றின் மதிப்பு சுமார் ரூ.84 லட்சம் என பல்வேறு தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்பெல்லாம் காரில் பயணம் சென்றால் ஒவ்வொரு ஊரிலும் தகவலை கேட்டு கேட்டு செல்ல வேண்டும். பின்னர் சாலை அடையாள பலகைகளை கொண்டு ஓரளவுக்கு பயணித்தோம். அதன் பின்னர் தொலைபேசி, செல்போன்கள் உதவின. அதைத் தொடர்ந்து தற்போது ஜிபிஎஸ் கருவிகள் வந்து விட்டன. இருந்த போதிலும் காரை ஓட்டிக் கொண்டிருக்கும் போது இவற்றை எல்லாம் பார்த்துக் கொண்டிருப்பது மிகவும் கடினம். தற்போது ஓட்டுநர்களின் கவலையை போக்க வந்து விட்டது ஹோலோகிராஃபிக் வழிகாட்டி. இதன் மூலம் முன்புற கண்ணாடியில் ஜிபிஎஸ் வரைபடங்கள் ஒளி ஊடுருவம் தன்மையுடன் கூடிய ஹோலோ கிராஃபிக் படங்களாக தெரியும். இதனால் ஓட்டுபவருக்கும் காட்சி பாதிக்காது. செல்லும் வழியையும் சட்டென்று புரிந்து கொள்ள இயலும். வெகு விரைவில் உலகின் வாகன பயணத்தை மாற்றி அமைக்க வந்து விட்டது ஹோலோகிராஃபிக் வழிகாட்டி. இது தொழில் நுட்பத்தின் ஆச்சரியம் தானே..
ஆர்பர் டே அறக்கட்டளை மற்றும் ஐ.நா.வின் உணவு மற்றும் விவசாய அமைப்பு இணைந்து ஆண்டுதோறும் ‘உலகின் மர நகரம்’ என்ற அங்கீகாரத்தை உலகில் உள்ள நகரங்களுக்கு வழங்கி வருகிறது. இந்த ஆண்டு மும்பையை “உலகின் மர நகரம் 2021” ஆக அறிவித்துள்ளது. இந்த பட்டத்தை வெல்லும் இந்தியாவின் இரண்டாவது நகரம் மும்பை ஆகும். ஏனெனில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து ஐதராபாத் ‘உலகின் மர நகரம்’ என்ற பட்டத்தை பெற்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளது. இந்த அங்கீகாரத்தின் மூலம், ஆரோக்கியமான, நெகிழக்கூடிய மற்றும் மகிழ்ச்சியான நகரங்களை உருவாக்குவதில் மரங்களின் முக்கியத்துவத்தை அங்கீகரிக்கும் ஒத்த எண்ணம் கொண்ட நகரங்களின் பட்டியலில் மும்பை இணந்துள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக பிரஹன்மும்பை முனிசிபல் கார்ப்பரேஷனின் (பிஎம்சி) தோட்டத் துறையின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வேகமாக வளர்ந்து வரும் நகர்ப்புற காடுகளுக்கு மத்தியில் பசுமையை நிலைநிறுத்துவதற்காக அங்கீகரிக்கப்பட்ட 21 நாடுகளைச் சேர்ந்த 138 நகரங்களின் குழுவில் வட இந்தியாவின் தூக்க நகரமான மும்பையும் இணைக்கப்பட்டுள்ளது மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தொடை பகுதியை வலிமையாக்கும் பயிற்சிகள் ஐஸோடானிக், ஐஸோமெட்ரிக் என்று இரு வகைப்படும். பயிற்சியின்போது குறிப்பிட்ட நிலையில் நிறுத்தி, தசைகளுக்கு இறுக்கம் தந்து வலு சேர்ப்பது ஐஸோமெட்ரிக். இது முன் தொடையை வலிமையாக்கும். தசைக்கும் மூட்டுக்கும் தொடச்சியாக அசைவு கொடுத்து வந்தால் அது ஐஸோடானிக். இது பின் தொடையை வலுப்படுத்தும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்2 months 5 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்2 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.3 months 13 hours ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 29-11-2024.
29 Nov 2024 -
வங்கக்கடலில் புயல் உருவானது
29 Nov 2024சென்னை, வங்கக்கடலில் புயல் உருவானதாக தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், இன்று 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுத்துள்ளது.
-
அரபிக்கடலில் 500 கிலோ போதை பொருள் சிக்கியது
29 Nov 2024 -
சவரன் ரூ.57 ஆயிரத்தை தாண்டியது தங்கம் விலை நகை பிரியர்கள் அதிர்ச்சி
29 Nov 2024சென்னை:
-
வலைப்பயிற்சியில் தீவிரம்: ஆஸி.க்கு எதிரான 2-வது டெஸ்ட்டில் ஷுப்மன் கில் விளையாடுவாரா?
29 Nov 2024மும்பை : காயத்திலிருந்து குணமடைந்து வரும் ஷுப்மன் கில் வலைப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.
-
கல்வித்துறை சார்ந்த வழக்குகளில் அரசுக்கு ரூ. 1,100 கோடி இழப்பு: சென்னை ஐகோர்ட் கண்டனம்
29 Nov 2024சென்னை, அரசு வழக்கறிஞர்களின் தவறான செயல்பாடுகளால் கல்வித்துறை சார்ந்த வழக்குகளில் ரூ.1,100 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஐகோர்ட்டு கண்டனம் தெரிவித்துள்ளது.
-
இந்தோனேசியாவில் நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 27 ஆக உயர்வு
29 Nov 2024ஜகார்த்தா, இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 27 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
மோசமான வெள்ளம்: மலேசியாவில் 3 பேர் பலி
29 Nov 2024கோலாலம்பூர், மலேசியாவில் ஏற்பட்டுள்ள மோசமான வெள்ளத்தால் 3 பேர் உயிரிழந்துள்ளனர். 80 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ளனர்.