மெக்சிகோவில் உள்ள Puerto San Carlos என்ற இடத்தைச் சேர்ந்தவர் Don Adán Arana. இவர் ஆசையாய் ஓட்ட வேண்டும் என விரும்பியதால் அவரது மகன்கள் அவருக்கு சரக்கு வேன் அதாவது டிரக் ஒன்றை வாங்கிக் கொடுத்துள்ளனர். ஆனால் Don Adán Arana அதன் பின்னர் நீண்ட நாட்கள் இந்த பூமியில் உயிர் வாழ இயலவில்லை. அவருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. மரண படுக்கையில் போராடிய அவர் தன்னுடன் சேர்த்து தனக்கு பிடித்தமான அந்த டிரக்கையும் மண்ணில் என் அருகில் புதைத்து விடுங்கள், மரணத்துக்கு பிறகு "அங்கே" நான் ஓட்டிச் செல்ல வசதியாக இருக்கும் என தெரிவித்தாராம். அதன் பின்னர் அவர் இறந்து விடவே, அவரது இறுதி ஆசையை நிறைவேற்றும் பொருட்டு அவருடன் சேர்த்து அவருக்கு அருகிலேயே அந்த டிரக்கையும் உறவினர்கள் மண்ணில் புதைத்துள்ளனர். இதற்காக டிரக்கை இறக்கும் அளவுக்கு மிகப் பெரிய குழி தோண்டி கான்கிரீட்டால் தொட்டி போல கல்லறையை கட்டியுள்ளனர். பின்னர் அவருடன் சேர்த்து அந்த டிரக்குக்கும் இறுதி சடங்குகள் செய்யப்பட்டு மண்ணில் புதைக்கப்பட்டது.
சில சுவாரிஸ்யமான தகவல்கள்
நிலவின் தரைப்பகுதியை ஆய்வு செய்வதற்காக, 79 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் சந்திராயன் 1 செயற்கைக்கோளை, 2008-ஆம் ஆண்டு இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. அதன்பின் சந்திராயன் 1 செயற்கைக்கோள் அனுப்பட்ட பின் ஓராண்டு காலமாக நிலவைப் பற்றிய பல தகவல்களை கண்டறிந்து, இஸ்ரோவிற்கு அனுப்பியது. அதன்பின் 2009-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29ம் தேதியுடன் சந்திராயன் 1-இன் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதையடுத்து, சந்திராயன் 1 தொலைந்துவிட்டதாக இஸ்ரோ தெரிவித்தது. இந்நிலையில் சந்திராயன் 1 செயற்கைக்கோள் இன்னமும் நிலவைச் சுற்றி வந்துகொண்டிருப்பதாகவும், அது தொலையவில்லை என்றும் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, தற்போது தெரிவித்துள்ளது.
அன்னாசி பழத்தில் அதிகளவு மருத்துவ பலன்கள் உள்ளது. இதில் விட்டமின் பி உயிர்சத்து அதிக அளவில் உள்ளது. இது உடலில் இரத்தத்தை விருத்தி செய்வதாகவும், உடலுக்கு பலத்தை தருவதாகவும் இருப்பதோடு பல நோய்களை குணப்படுத்தும் அரிய மருந்தாகவும் இருக்கிறது. இந்த பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் அதிகப்படியான தொப்பை குறைய ஆரம்பிக்கும். 100 கிராம் அன்னாசி பழத்தில் 88 சதவீதம் ஈரப்பதம் 0.6 சதவீதம் புரதம், 10.8 சதவீதம் மாவுச்சத்து, 17 சதவீதம் கொழுப்புச்சத்து, 63 மில்லிகிராம் விட்டமின் மற்றும் கால்சியம் பாஸ்பரஸ், இரும்புச்சத்து, கரோட்டின், தயாமின் ஆகிய தாது உப்புகளும் அடங்கியுள்ளது. ஒரு அன்னாசிப்பழம் சாப்பிட்டால், நமக்கு ஒரு நாளைக்குத் தேவைப்படும் புரதச்சத்தை பெற்று விடலாம்.
இன்றைக்கு புத்தக கண்காட்சிக்கு போனால் புத்தக விலைகளை கேட்டால் மயங்கி விழாத குறையாகத்தான் இருக்கும். அந்த அளவுக்கு விலைகள் தாறுமாறாக எகிறிவிட்டன. இதில் பதிப்பாளர்களை குற்றம் சொல்லியும் பயன்இல்லை. புத்தகத்துக்கு தேவையான காகித விலை, மை, அச்சடிக்கும் செலவு எல்லாம் அதிகரிக்கும் போது புத்தக விலையும் கூடத்தானே செய்யும். அது கிடக்கட்டும். உலகிலேயே அதிக விலைக்கு விற்பனையான புத்தகம் எது தெரியுமா... லியோனார்டோ டாவின்சியால் எழுதப்பட்ட கோடெக்ஸ் லெயிஸ்டர் என்ற புத்தகம்தான் உலகிலேயே அதிக விலைக்கு விற்பனையானது. அந்த புத்தகத்தை வாங்கியவர் மைக்ரோ சாப்ட் அதிபர் பில்கேட்ஸ். விலை எவ்வளவு தெரியுமா 30.8 மில்லியன் டாலர். அவர் அந்த பணத்தை வெறும் 1 மணி நேரத்தில் ஈட்டி விடுவார் என்றால் அது அதை விட சுவாரசியம் தானே.
உலகில் முதன்முதலாக நெதர்லாந்தில் 3-டி பிரிண்டிங் தொழில்நுட்பம் மூலம் பாலம் உருவாக்கப்பட்டுள்ளது. அது ஸ்மார்ட் என்ற இடத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் நீளம் மொத்தம் 8 மீட்டர் ஆகும். இது 800 அடுக்குகளால் ஆன பொருட்களால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பாலம் 40 லாரிகளை ஒரே நேரத்தில் தாங்கும் அளவு வலிமை வாய்ந்தது.
உலகின் மிகப்பெரிய பதிப்பக நிறுவனமான ஹார்ப்பர் கோலின்ஸ், தனது இந்திய கிளைகளில் பணியாற்றுபவர்களுக்கு, செல்லப்பிராணிகளை பராமரிப்பதற்காக, சம்பளத்துடன் கூடிய விடுமுறையை (ஐந்து நாட்கள்) அனுமதித்துள்ளது. மேலும், நொய்டாவில் உள்ள அலுவலகத்தில் செல்லப்பிராணிகளை அழைத்து வர அனுமதிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்2 months 5 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்2 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.3 months 7 hours ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 29-11-2024.
29 Nov 2024 -
சவரன் ரூ.57 ஆயிரத்தை தாண்டியது தங்கம் விலை நகை பிரியர்கள் அதிர்ச்சி
29 Nov 2024சென்னை:
-
வங்கக்கடலில் புயல் உருவானது
29 Nov 2024சென்னை, வங்கக்கடலில் புயல் உருவானதாக தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், இன்று 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுத்துள்ளது.
-
மோசமான வெள்ளம்: மலேசியாவில் 3 பேர் பலி
29 Nov 2024கோலாலம்பூர், மலேசியாவில் ஏற்பட்டுள்ள மோசமான வெள்ளத்தால் 3 பேர் உயிரிழந்துள்ளனர். 80 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ளனர்.
-
கல்வித்துறை சார்ந்த வழக்குகளில் அரசுக்கு ரூ. 1,100 கோடி இழப்பு: சென்னை ஐகோர்ட் கண்டனம்
29 Nov 2024சென்னை, அரசு வழக்கறிஞர்களின் தவறான செயல்பாடுகளால் கல்வித்துறை சார்ந்த வழக்குகளில் ரூ.1,100 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஐகோர்ட்டு கண்டனம் தெரிவித்துள்ளது.
-
அரபிக்கடலில் 500 கிலோ போதை பொருள் சிக்கியது
29 Nov 2024 -
இந்தோனேசியாவில் நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 27 ஆக உயர்வு
29 Nov 2024ஜகார்த்தா, இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 27 பேர் உயிரிழந்துள்ளனர்.