உலகின் மிக உயர்ந்த விருதான நோபல் பரிசு பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றுக் கொடுத்தவர் கவிஞர் ரவீந்திராத் தாகூர். இவர் 1861 ஆம் ஆண்டு மே 7 ஆம் தேதி தேவேந்திரநாத் தாகூர், சாரதா தம்பதிகளுக்கு கொல்கத்தாவில் பிறந்தார். இளம் பருவத்திலேயே இலக்கியம், ஓவியம், இசை , கவிதை என்று பன்முகத்திறமைக் கொண்டிருந்தார். பாரிஸ்டர் பட்டம் பெறுவதற்காக 1878 ஆம் ஆண்டு இங்கிலாந்திற்கு சென்றவர் அங்குள்ள கல்விமுறையை அறிந்துகொண்டார். அதன்படி கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்த வங்காளத்தில் 'சாந்தி நிகேதன்' பள்ளியைத் துவங்கினார். இங்கு படித்தவர்தான் புகழ்பெற்ற இந்திய இயக்குநர் சத்யஜித்ரே. ’கீதாஞ்சலி’ கவிதைத் தொகுப்பிற்காக தாகூருக்கு இலக்கியத்திற்காக நோபல் பரிசு கடந்த 1913 ஆம் ஆண்டு கொடுக்கப்பட்டது. அப்பரிசை வென்ற முதல் ஆசியர் என்ற பெருமையும் தாகூருக்கு உள்ளது.
சில சுவாரிஸ்யமான தகவல்கள்
செவ்வாயில் முதன்முறையாக நாசா தனது பெர்சிவரன்ஸ் ரோவர் விண்கலம் மூலம் ஆக்சிஸனை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அந்த விண்கலத்தில் இணைக்கப்பட்டுள்ள மோக்ஸி என்ற இயந்திரம் மூலம் இந்த சாதனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த இயந்திரம் செவ்வாயில் உள்ள சூழலை பயன்படுத்தி, அதில் உள்ள பெரும்பான்மையான கார்பன் டை ஆக்ஸைடை ஆக்ஸிசனாக மாற்றியுள்ளது. இந்த முயற்சியானது மனிதர்கள் எதிர்காலத்தில் செவ்வாயில் குடியேறுவதற்கான ஒரு அச்சாரமாக எதிர்பார்க்கப்படுகிறது.
ஆண்ட்ராய்டு ஸ்மாட்போன்களை தொடர்ந்து ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் இயங்ககூடிய ஸ்மார்ட்வாட்ச்சை கூகுள் நிறுவனம் தயாரித்துள்ளது. ஸ்மார்ட்வாட்ச் ஆண்ட்ராய்டு 2.0 தரத்தில் உருவாக்கப்பட்ட இந்த கைகடிகாரத்தில் நேரம் பார்ப்பதுடன் கூகுள் தேடுப்பொறி தளத்தை இதில் பயன்படுத்த முடியும். மேலும் மற்றவர்களுக்கு மெசேஜ் செய்ய இயலும்.
நல்ல அதிவேக இணைய வசதி அன்லிமிட்டெட்டாக கணக்கின்றி இருக்கும் போது நல்ல இணையத்தளங்களை நகல் எடுத்து வைத்துக் கொண்டால் இணையம் இல்லாத நேரங்களிலோ குறைந்த வேகத்தில் இருக்கும்போதோ மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அப்படிச் செய்வதற்கு உதவும் ஒரு மென்பொருள் தான் 'எச்டிடிராக் வெப்சைட் காப்பியர். இந்த மென்பொருள், கட்டற்ற, இலவச மென்பொருள் என்பது கூடுதல் சிறப்பு. இதை https://www.httrack.com/ தளத்திற்குச் சென்று பதிவிறக்கிக் கொள்ளலாம். விண்டோஸ் 2000, எக்ஸ்பி, விஸ்டா, 7, 8, லினக்ஸ் டெபியன், உபுண்டு, ஜென்டூ, ஃபெடோரா, ஆண்டிராய்டு ஆகிய இயங்குதளங்களில் எச்டிடிராக்கை நிறுவிக்கொள்ளலாம். முக்கியமான இணையத்தளங்களை செல்போனிலேயே நகல் எடுத்து வைத்துக் கொள்ளலாம். மிகவும் பயனுள்ள ஒரு மென்பொருள் எச்டிடிராக்.
கூகுள் இணையதள நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான தமிழரான சுந்தர் பிச்சைக்கு கடந்த ஆண்டு வழங்கப்பட்ட சம்பளம், 6.5 லட்சம் டாலர் (சுமார் ரூ.4 கோடியே 22 லட்சத்து 50 ஆயிரம்). ஆனால் இழப்பீடு என்ற வகையில் இவருக்கு கடந்த ஆண்டு வழங்கப்பட்ட தொகை கிட்டத்தட்ட 200 மில்லியன் டாலர் (சுமார் ரூ.1,300 கோடி). நாள் ஒன்றிற்கு இந்திய மதிப்பில் ரூ.3.52 கோடி ஊதியமாக அவர் பெற்றுள்ளார்.
ஒருவர் அலுப்பான சூழலில் இருக்கும்போது, கொட்டாவி விட்டால், அதே மனநிலையை கொண்டவருக்கும் மூளை அனிச்சையாக செயல்பட்டு, கொட்டாவியை வரவழைக்கிறது. கொட்டாவியின் செயல், ஆக்சிஜனை உள்ளிழுக்கும். கார்பன் டை ஆக்ஸைடை வெளியில் தள்ளும். கொட்டாவி ஒரு நோய் அல்ல. அது ஓர் அறிகுறி. கொட்டாவி வந்தால், நல்ல ஓய்வு தேவை என்று அரத்தம்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்2 months 5 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்2 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.3 months 7 hours ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 29-11-2024.
29 Nov 2024 -
வங்கக்கடலில் புயல் உருவானது
29 Nov 2024சென்னை, வங்கக்கடலில் புயல் உருவானதாக தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், இன்று 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுத்துள்ளது.
-
சவரன் ரூ.57 ஆயிரத்தை தாண்டியது தங்கம் விலை நகை பிரியர்கள் அதிர்ச்சி
29 Nov 2024சென்னை:
-
கல்வித்துறை சார்ந்த வழக்குகளில் அரசுக்கு ரூ. 1,100 கோடி இழப்பு: சென்னை ஐகோர்ட் கண்டனம்
29 Nov 2024சென்னை, அரசு வழக்கறிஞர்களின் தவறான செயல்பாடுகளால் கல்வித்துறை சார்ந்த வழக்குகளில் ரூ.1,100 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஐகோர்ட்டு கண்டனம் தெரிவித்துள்ளது.
-
மோசமான வெள்ளம்: மலேசியாவில் 3 பேர் பலி
29 Nov 2024கோலாலம்பூர், மலேசியாவில் ஏற்பட்டுள்ள மோசமான வெள்ளத்தால் 3 பேர் உயிரிழந்துள்ளனர். 80 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ளனர்.
-
அரபிக்கடலில் 500 கிலோ போதை பொருள் சிக்கியது
29 Nov 2024 -
இந்தோனேசியாவில் நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 27 ஆக உயர்வு
29 Nov 2024ஜகார்த்தா, இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 27 பேர் உயிரிழந்துள்ளனர்.