முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

வாரம் முழுவதும்...

பொதுவாக காதலர் தினம் என்றால் அனைவருக்கும் பிப்ரவரி 14 மட்டும் தான் ஞாபகம் வரும். ஆனால் காதலர் தினமானது பிப்ரவரி 7 ஆம் தேதியில் இருந்து 14 ஆம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. காதலர் தின வாரத்தின் முதல் நாள் ரோஸ் டேவில் ஆரம்பித்து ப்ரப்போஸ் டே, சாக்லெட் டே, டெடி டே, ப்ராமிஸ் டே, ஹக் டே, இறுதியாக கிஸ் டேவில் முடிவடைகிறது.

அறிவோம் சிறுநீரகம்

சிறுநீர் பாதையில் அழற்சி என்பது மருத்துவ துறையில் பொதுவாக காணப்படும் ஒரு குறியீடு. மூத்திரம் வரும் பாதையிலும், சில நேரம் மூத்திர பையிலும் அழற்சி ஏற்படலாம். இதற்கு சிஸ்டைடிஸ் என்று பெயர். இந்த அழற்சி கிருமி தொற்று மேலே சென்று சிறுநீரகத்தை தாக்கும் போது அது செயலிழக்க வாய்ப்பு அதிகம்.

கடலுக்கு ஆபத்து

2050-ம் ஆண்டில் கடலில் மீன்களைவிட பிளாஸ்டிக் கழிவுகளே அதிகம் இருக்கும் என ஆய்வு தெரிவிக்கிறது. 1964-ம் ஆண்டில் தொடங்கிய பிளாஸ்டிக் பயன்பாடு, 2014-ம் ஆண்டில் 311 மில்லியன் டன் (31 கோடி டன்) ஆகிவிட்டது. தற்போது, பிளாஸ்டிக் கழிவுகள் அதிகளவில் கடலில் கலக்கின்றன. இது தொடருமானால், வருகிற 2050-ம் ஆண்டில் கடலில் வாழும் மீன்களின் எடையை விட பிளாஸ்டிக் கழிவுகளின் எடை அதிகமாக இருக்கும் என்று ஆய்வு எச்சரிக்கிறது. எனவே பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி முறையில் அதிக அளவில் மீண்டும் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது 14 சதவீதம் பிளாஸ்டிக் கழிவுகள் மறு சுழற்சி முறையில் பயன்படுத்தப்படுகிறது. அதை 70 சதவீதமாக உயர்த்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

43 நாடுகளில் மன்னராட்சி

ஜனநாயகம், சோஷலிசம், கம்யூனிசம் என்றெல்லாம் பேசிக் கொண்டிருக்கும் இன்றைய நவீன யுகத்தில் உலகில் சில நாடுகள் இன்னும் மன்னராட்சியின் கீழ் தான் உள்ளன. அவ்வாறு உலகில் மொத்தம் 43 நாடுகள் இன்றைக்கும் மன்னராட்சியின் கீழ் உள்ளன. அவற்றில் ஜப்பான், ஸ்பெயின், சுவிஸ், பூடான், தாய்லாந்து, மொனாகோ, சுவீடன், நெதர்லாந்து உள்ளிட்ட 43 நாடுகளை உலகில் உள்ள 28 அரச குடும்பங்கள்தான் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளன என்றால் ஆச்சரியம் தானே..

மருத்துவ சாதனை

சீனாவில் சியான் நகரத்தில் கடந்த 2015-ம் ஆண்டு விபத்து ஒன்றில் காதை இழந்த ஜி என்பவருக்கு செயற்கையாக ஒரு காதை கையில் வளர்த்து, அதை பொருத்தி வெற்றியடைந்துள்ளனர் சீன மருத்துவர்கள். 3டி தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி, விலா குருத்தெலும்பை காது போல் வடிவமைத்து அது கையில் பொறுத்தப்பட்டது. இந்நிலையில், மருத்துவர்களின் உதவியால் கடந்த நவம்பர் மாதம் ஜி காதை வளர்க்க தொடங்கினர். கடந்த 4 மாதங்களாக காது ஜியின் கையில் வளர்க்கப்பட்டது. தற்போது நன்கு வளர்ச்சி அடைந்த அந்த காதை அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றி காது இருக்க வேண்டிய இடத்தில் பொருத்தியுள்ளனர். சுமார் ஏழு மணி நடைபெற்ற அறுவை சிகிச்சை வெற்றியடைந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். புதிதாக பொருத்தப்பட்ட அவரது காது தற்போது நன்றாக கேட்கப்படுகிறது எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தனிநபரின் பெயர்

அமெரிக்கோ வெஸ்புகி என்பவர் 1499-ல் அமெரிக்காவை அடைந்தவர். இவர், அமெரிக்கா ஆசியாவை சேர்ந்த பகுதி அல்ல, அது ஒரு தனி கண்டம் என்பதை கண்டறிந்தார். 1507-ல் ஜெர்மனியை சேர்ந்த மார்டின் என்பவர் உலக வரைப்படத்தில் அமெரிக்காவை சேர்த்த போது வெஸ்புகியின் முன் பெயரான அமெரிக்கோ என்பதையே அமெரிக்கா என பெயர் வைத்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 5 days ago