கியூ. ஆர் கோட்(QR CODE) அப்படி என்றால் என்ன என்று நீங்கள் அறிந்திருப்பீர்கள். நாம் வாங்கும் பொருட்களில் எல்லாம் தற்போது சர்வசாதாரணமாகக் காணப்படுவது க்யூ ஆர்-கோட். கணணியானது ஒரு பொருளின் விலையை மற்றும் என்ன பொருள் என்று அறிய இந்த க்யூ ஆர்-கோட் பயன்படுகிறது. தற்போது இதனைக் கல்லறையிலும் பயன்படுத்த ஆரம்பித்துள்ளார்கள். வழமையாக கல்லறையில் ஒருவர் புதைக்கப்பட்டால் அவரது கல்லறையில் அவர் எப்போது பிறந்தார் எப்போது இறந்தார் என்று மட்டும் எழுதுவது உண்டு. ஆனால் தற்போது இந்தக் கியூ ஆர் கோட்டை கல்லறையில் பதிக்கிறார்கள். என்ன ஒரு ஐடியா இனி நீங்கள் மயானத்துக்குச் செல்லும் போது, அங்கே காணப்படும் பல கல்லறைகளில் உள்ள கியூ-ஆர் கோட்டை உங்கள் கைகளில் உள்ள மொபைல் போன் மூலம் ஸ்கேன் செய்தால் போதும். அக்கல்லறையின் கீழ் புதையுண்ட நபரின் வாழ்க்கை குறித்த வீடியோவை காணலாம். அல்லது இறந்தவருடைய வாழ்க்கை சரிதையை டவுன்லோடு செய்து படிக்க முடியும். இனி இறந்தவர்கள் டிஜிட்டல் முறையில் நம்முடன் பேசும் காலம் வெகு தொலைவில் இல்லை.
சில சுவாரிஸ்யமான தகவல்கள்
முன்பெல்லாம் காரில் பயணம் சென்றால் ஒவ்வொரு ஊரிலும் தகவலை கேட்டு கேட்டு செல்ல வேண்டும். பின்னர் சாலை அடையாள பலகைகளை கொண்டு ஓரளவுக்கு பயணித்தோம். அதன் பின்னர் தொலைபேசி, செல்போன்கள் உதவின. அதைத் தொடர்ந்து தற்போது ஜிபிஎஸ் கருவிகள் வந்து விட்டன. இருந்த போதிலும் காரை ஓட்டிக் கொண்டிருக்கும் போது இவற்றை எல்லாம் பார்த்துக் கொண்டிருப்பது மிகவும் கடினம். தற்போது ஓட்டுநர்களின் கவலையை போக்க வந்து விட்டது ஹோலோகிராஃபிக் வழிகாட்டி. இதன் மூலம் முன்புற கண்ணாடியில் ஜிபிஎஸ் வரைபடங்கள் ஒளி ஊடுருவம் தன்மையுடன் கூடிய ஹோலோ கிராஃபிக் படங்களாக தெரியும். இதனால் ஓட்டுபவருக்கும் காட்சி பாதிக்காது. செல்லும் வழியையும் சட்டென்று புரிந்து கொள்ள இயலும். வெகு விரைவில் உலகின் வாகன பயணத்தை மாற்றி அமைக்க வந்து விட்டது ஹோலோகிராஃபிக் வழிகாட்டி. இது தொழில் நுட்பத்தின் ஆச்சரியம் தானே..
பொதுவாக நாம் தும்மும்போது கண்களை மூடிக் கொள்வது வழக்கம். கண்களை திறந்து கொண்டு ஒரு போதும் தும்ம இயலாது என்பது உங்களுக்கு தெரியுமா... அப்படி ஏதும் விபரீதத்தில் ஈடுபடாதீர்கள்... கண்களை திறந்து வைத்து தும்மினால் விழி வெளியே பிதுங்கி விடும். அதே நேரத்தில் மணிக்கு 60 மீட்டர் வேகத்தில் செல்லும் காரில் பயணிக்கும் போது நீங்கள் தும்மினால் அப்போதும் கண்களை மூடிக் கொள்வீர்கள். ஆனால் எவ்வளவு தொலைவுக்கு தெரியுமா... 50 அடி தொலைவுக்கு. கடந்த 2014 இல் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் வாகனஓட்டிகள் தும்மும்போது அவர்களுக்கு தற்காலிகமாக பார்வை இழப்பு ஏற்படுகிறது. இதனால் இங்கிலாந்தில் மட்டும் வாரத்துக்கு 2500க்கும் அதிகமாக விபத்துகள் ஏற்படுகின்றன என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
உலகின் வயதான நபராக கருதப்பட்ட இத்தாலியின் எம்மா மார்ட்டின் லூகியாவின் மறைவுக்குப் பிறகு தற்போது ஜமைக்காவின் வைலட் பிரவுன் அந்த பெருமையை பெற்றுள்ளார். 117 வயதான இவர். உணவில் பன்றி, கோழி வகை உணவை அறவே தவிர்கிறாராம். 1900-ம் ஆண்டு மார்ச் 10ம் தேதி பிறந்த இவர் கடந்த மாதம் தனது 117வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.
நில முத்திரைக்கு பூமி முத்திரை என்ற பெயரும் உண்டு. நோய் தடுப்பு சக்தியும் அதிகமாக்கி உடல் நலத்தை பாதுகாக்கும் முத்திரை இது. எலும்புகளின் அடர்த்திக்குறைவை நீக்கும். தைராய்டு சுரப்பிகளின் அதிகப்படியான சுரப்பைக்குறைக்கிறது. எலும்புகளுக்கும் மூட்டுக்களுக்கும் சக்தி கொடுக்கும் முத்திரை. இந்த முத்திரை செய்தால் சில நிமிடங்களிலேயே தூக்கம் கண்களை தழுவும்.
-கார்பன் வெளிப்பாடு, சுற்றுச்சூழல் மாசு தாக்கத்தால் பருவ நிலை மாறுபாடு என ஏகப்பட்ட பிரச்னைகளை இன்றைய பூமி சந்தித்து வருகிறது. இதை மாற்றுவதற்காக உலக நாடுகள் பலவும் எரிபொருள் வாகனத்திலிருந்து மின் வாகனத்தை நோக்கி மாறத் தொடங்கியுள்ளன. குறிப்பாக ஐரோப்பாவில் கடந்தாண்டு டீசல் வாகனங்களின் விற்பனையை மின் வாகனங்களின் விற்பனை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் ஒரு முறை சார்ஜ் செய்தால் 1000 கிமீ பயணம் செய்யக் கூடிய காரை மெர்சிடஸ் பென்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.தற்போதைய கார்களை ஒரு முறை சார்ஜ் செய்தால் சுமார் 400 கிமீ வரை மட்டுமே ஓட்டி செல்லலாம். இந்த சூழலில் தான் ஜெர்மன் நிறுவனமான மெர்சிடஸ் பென்ஸ் நிறுவனம் ஒரு முறை சார்ஜ் செய்தால் 1000 கிமீ செல்லும் வரையிலான கார்களை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. VISION EQXX என்ற மாடலில் இதை அறிமுகம் செய்துள்ளது.அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடைபெற்ற மின்னணு கண்காட்சியில் இந்த கார் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் இந்த கார் மற்ற கார்களை விட எடை குறைந்த காராகும். மேலும் இதன் கூரை சோலார் பேனலால் அமைக்கப்பட்டுள்ளதால் கூடுதலாக 25 கிமீ வரை செல்லலாம் என்றும் சொல்லப்படுகிறது.காருக்குள் கண்ணாடி திரையில் ஹோலோ கிராம் இமேஜிங், ஜிபிஎஸ் டிராக்கிங் என எக்கச்சக்க வசதிகள் உள்ளன. மேலும் வேகத்துக்கும் குறைவிருக்காது என சொல்லப்படுகிறது. இனி புதிய எதிர்காலத்துக்கான நவீன வாகனமாக இது அமையும் என எதிர்பார்க்கலாம். -
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்2 months 5 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்2 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.3 months 7 hours ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 29-11-2024.
29 Nov 2024 -
வங்கக்கடலில் புயல் உருவானது
29 Nov 2024சென்னை, வங்கக்கடலில் புயல் உருவானதாக தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், இன்று 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுத்துள்ளது.
-
அரபிக்கடலில் 500 கிலோ போதை பொருள் சிக்கியது
29 Nov 2024 -
சவரன் ரூ.57 ஆயிரத்தை தாண்டியது தங்கம் விலை நகை பிரியர்கள் அதிர்ச்சி
29 Nov 2024சென்னை:
-
வலைப்பயிற்சியில் தீவிரம்: ஆஸி.க்கு எதிரான 2-வது டெஸ்ட்டில் ஷுப்மன் கில் விளையாடுவாரா?
29 Nov 2024மும்பை : காயத்திலிருந்து குணமடைந்து வரும் ஷுப்மன் கில் வலைப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.
-
கல்வித்துறை சார்ந்த வழக்குகளில் அரசுக்கு ரூ. 1,100 கோடி இழப்பு: சென்னை ஐகோர்ட் கண்டனம்
29 Nov 2024சென்னை, அரசு வழக்கறிஞர்களின் தவறான செயல்பாடுகளால் கல்வித்துறை சார்ந்த வழக்குகளில் ரூ.1,100 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஐகோர்ட்டு கண்டனம் தெரிவித்துள்ளது.
-
இந்தோனேசியாவில் நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 27 ஆக உயர்வு
29 Nov 2024ஜகார்த்தா, இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 27 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
மோசமான வெள்ளம்: மலேசியாவில் 3 பேர் பலி
29 Nov 2024கோலாலம்பூர், மலேசியாவில் ஏற்பட்டுள்ள மோசமான வெள்ளத்தால் 3 பேர் உயிரிழந்துள்ளனர். 80 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ளனர்.