நம் என்றும் இளமையாய் இருக்க பீட்டா கரோட்டின் அதிகமாக உள்ள மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிற காய்களான பூசணி, மாம்பழம், சர்க்கரை வள்ளிக் கிழங்கை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். மேலும், கொழுப்பு குறைந்த சோயா பீன்ஸ், சோயா மாவு, சோயா பால் போன்றவை எடுத்துக்கொண்டால் நல்லது.
சில சுவாரிஸ்யமான தகவல்கள்
அதென்னங்க உலகத்திலேயே மிகவும் உயரமான குடும்பத்தினர். யார் அவர்கள்.. எங்கே வசிக்கின்றனர். பொறுங்க... பொறுங்க.. அவர்களை பற்றி சற்று பார்க்கலாம்.அமெரிக்காவில் உள்ள மின்னசோட்டா மாகாணத்தில் எஸ்கோ என்ற இடத்தில் வசித்து வரும் டிராப் என்பவரின் குடும்பம்தான் இந்த பெருமைக்குரியது. இந்த குடும்ப உறுப்பினர்களின் சராசரி உயரமே 203.29 செமீ அதாவது 6 அடி 8.03 அங்குலம் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.இவர்களுடைய குடும்பத்தில் உள்ள அனைவருமே சராசரியாக 6 அடிக்கு மேலே உயரம் கொண்டவர்கள்தான். வீட்டுக்கு வரும் விருந்தினர்கள் யாராக இருந்தாலும் இவர்களை நிமிர்ந்து பார்த்து பேசியே கழுத்து வலி வந்து விடும் போலிருக்கே... குடும்ப தலைவி கிரிஸ்ஸி டிராப் லவ்ஸ் உயரம் 6 அடி 3 அங்குலம். இவர் உயரம் தான் ஆனால் குடும்பத்தினரின் மற்ற உறுப்பினர்களை விட சற்று குறைவு. இவரது கணவர் ஸ்காட் 6 அடி 8 அங்குலம். இவர்களுக்கு சாவன்னா மற்றும் மொய்லி என இரண்டு மகள்கள். இருவரில் ஒருத்தி 6 அடி 8 அங்குலம், மற்றவர் 6 அடி 6 அங்குலம். இவர்கள் வீட்டின் கடைசி வாண்டு ஆடம் டிராப். அவனது உயரம் 7 அடி 3 அங்குலம்.. அம்மாடியோவ்.. பிறகென்ன இந்த தகவல் கின்னஸூக்கு போய்.. உலகிலேயே மிகவும் உயரமான குடும்பம் என்ற பெருமையையும் அள்ளியுள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் ஐ போனை வைத்திருந்தாலே ஒரு தனி கெத்து என நவீன யுகத்து யூத்கள் கருதி வருகின்றனர். ஆப்பிள் நிறுவனம் தயாரிக்க விரும்பிய முதல் போன் எது தெரியுமா... ஐபோனை தயாரிப்பதற்கு முன்பாக மடக்கி விரிக்கும் போனைத்தான் அது தயாரிக்க விரும்பியது. அதை மடக்கி மூடினால் ஆப்பிளை போல காட்சியளிக்கும். அது போன்ற ஒரு வடிவமைப்புக்கே அது பேடன்ட் உரிமையும் வாங்கி வைத்திருந்தது. இவ்வாறே அது ஆப்பிள் போன் என பெயர் பெற்றது. பின்னாளில்தான் அது ஐபோனை தயாரிக்க தொடங்கியது.
உலகிலேயே மிகப் பெரிய புத்தகம் 2012 ஆம் ஆண்டு பிப்ரவரி 27 ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாயில் வெளியிடப்பட்டது. இந்த புத்தகம் இஸ்லாமிய இறைத் தூதரான நபிகள் நாயகம் வாழ்க்கையில் நடைபெற்ற முக்கிய சம்பவங்களை தொகுத்து வழங்குவதாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த புத்தகத்தை அரபு நாட்டிலுள்ள Mshahed International Group என்ற நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த புத்தகத்தை உருவாக்கும் பணியில் 50க்கும் மேற்பட்டோர் ஈடுபடுத்தப்பட்டனர். 16.40 அடி அகலமும், 26.44 அடி உயரமும் கொண்டதாக 1360 கிலோ எடை கொண்டதாக உருவாக்கப்பட்டது. உலகிலேயே மிகவும் பெரிய புத்தகம் என்ற கின்னஸிலும் இடம் பிடித்துள்ளது.
இன்றைக்கு வெகு வேகமாக வளர்ந்து வரும் துறைகளில் 3D பிரிண்டர் துறையும் ஒன்று. ஒரு பொருளை தொழில் நுட்பத்தின் உதவியுடன் அப்படியே ஒட்டு மொத்தமாக உருவாக்க உதவும் கருவியை 3டி பிரிண்டர் என்று சுருக்கமாக சொல்லலாம். இந்த 3டி பிரிண்டர் மூலம் பல்வேறு வளர்ச்சிகள் ஏற்பட்டு வரும் வேளையில் முக்கியமாக ஜப்பானைச் சோ்ந்த ஒசாகா பல்கலைக் கழக விஞ்ஞானிகள் செயற்கையாக எருது இறைச்சியை உருவாக்கி அசத்தியுள்ளனர். செயற்கை ரத்தம், தசை, திசு, போன்ற சிக்கலான அமைப்புடன் கூடிய இந்த இறைச்சி உருவாக்கம் ஒரு முன்னோடி கண்டுபிடிப்பாக நிகழ்ந்துள்ளது. Wagyu cows என்று அழைக்கப்படும் பசுமாடுகளின் ஸ்டெம் செல்லிலிருந்து இது போன்ற செயற்கை இறைச்சியை அவர்கள் உருவாக்கியுள்ளனர். இந்த செயற்கை இறைச்சி 5 மீமி அகலம் 10 மிமீ நீளம் கொண்டதாக உள்ளது. இதில் 72 பைபர்களை இணைத்து 42 திசுக்களாக உருமாற்றி, மேலும் 28 கொழுப்பு கொண்ட திசுக்களையும், 2 ரத்த தமனிகளையும் உருவாக்கியுள்ளனர். இவை அப்படியே இயற்கை இறைச்சியை போலவே காட்சியளிக்கின்றன. இது குறித்து இக்குழுவின் தலைவர் டாங் ஹீ கங் கூறுகையில், வாக்யூ மாட்டிறைச்சியின் திசுக்களின் கூட்டமைப்பை வரைபடமாகக் கொண்டு தசைநார்கள், கொழுப்பு மற்றும் ரத்த நாளங்கள் கொண்ட சிக்கலான வடிவமைப்பை 3டி பிரிண்டரை கொண்டு உருவாக்கியுள்ளோம் என்றார். இவ்வகை மாட்டிறைச்சிக்கு உலக சந்தையில் உணவு பிரியர்களிடம் ஏக கிராக்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்சமயம் பயன்பாட்டில் இருக்கும் அதிவேக கேமராக்களை விட பல லட்சம் மடங்கு வேகமான கேமராவான 15 ஃபான்டம் ஃபிளெக்ஸ் போன்று ஸ்லோ-மோ கேமரா ஆகும். இதை கொண்டு ஒளியின் பயணத்தையும் துல்லியமாக படமாக்க முடியும். ஸ்வீடன் நாட்டின் லண்ட் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் குழு நொடிக்கு 5 லட்சம் கோடி புகைப்படங்களை படமாக்கும் கேமராவினை அறிமுகம் செய்துள்ளது. இது சரியாக வெவ்வேறு ஃபிரேம்களை படமாக்காமல் ஒவ்வொரு ஃபிரேம்களில் இருந்தும் வெவ்வேறு புகைப்படங்களை பிரித்து எடுக்கும். அதாவது கேமராவின் ஷட்டர் திறந்திருக்கும் போது வெவ்வேறு லேசர் மின்விளக்குகள் பொருளின் மீது பாயும். இவ்வாறு பாயும் போது ஒவ்வொரு லேசர் பிளாஷூம் விசுவல் முறையில் கோடிங் செய்யப்பட்டு, பின் மற்ற தகவல்களை டீக்ரிப்ஷன் மூலம் பிரித்து எடுக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்2 months 5 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்2 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.3 months 13 hours ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 29-11-2024.
29 Nov 2024 -
வங்கக்கடலில் புயல் உருவானது
29 Nov 2024சென்னை, வங்கக்கடலில் புயல் உருவானதாக தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், இன்று 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுத்துள்ளது.
-
அரபிக்கடலில் 500 கிலோ போதை பொருள் சிக்கியது
29 Nov 2024 -
சவரன் ரூ.57 ஆயிரத்தை தாண்டியது தங்கம் விலை நகை பிரியர்கள் அதிர்ச்சி
29 Nov 2024சென்னை:
-
வலைப்பயிற்சியில் தீவிரம்: ஆஸி.க்கு எதிரான 2-வது டெஸ்ட்டில் ஷுப்மன் கில் விளையாடுவாரா?
29 Nov 2024மும்பை : காயத்திலிருந்து குணமடைந்து வரும் ஷுப்மன் கில் வலைப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.
-
கல்வித்துறை சார்ந்த வழக்குகளில் அரசுக்கு ரூ. 1,100 கோடி இழப்பு: சென்னை ஐகோர்ட் கண்டனம்
29 Nov 2024சென்னை, அரசு வழக்கறிஞர்களின் தவறான செயல்பாடுகளால் கல்வித்துறை சார்ந்த வழக்குகளில் ரூ.1,100 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஐகோர்ட்டு கண்டனம் தெரிவித்துள்ளது.
-
இந்தோனேசியாவில் நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 27 ஆக உயர்வு
29 Nov 2024ஜகார்த்தா, இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 27 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
சென்னைக்கு தென்கிழக்கே 300 கி.மீ. தொலைவில் புயல்
29 Nov 2024சென்னை : தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஃபென்ஜால் புயல் சென்னைக்கு தென்கிழக்கே 300 கிமீ தொலைவில் நிலைகொண்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
மோசமான வெள்ளம்: மலேசியாவில் 3 பேர் பலி
29 Nov 2024கோலாலம்பூர், மலேசியாவில் ஏற்பட்டுள்ள மோசமான வெள்ளத்தால் 3 பேர் உயிரிழந்துள்ளனர். 80 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ளனர்.