நாம் உண்ணும் இறைச்சி உணவு வகைகளை தவிர்த்தாலே புவி வெப்பமயமாதலை குறைக்க முடியுமாம். இதுகுறித்த புதிய ஆய்வில் மாட்டிறைச்சிக்கு பதிலாக பீன்ஸ் உள்ளிட்ட காய்கறிகைளை உண்பதால் புவி வெப்பமயமாதலை அதிகரிக்கும் பசுமை இல்ல வாயுக்களின் (GHG)அளவை குறைக்கும் என தெரிவிக்கிறது. ஒரு வேளை அமெரிக்கர்கள் தொடர்ந்து இறைச்சியை விட பீன்ஸ் உண்டால் 2020ம் ஆண்டுக்குள் 50 முதல் 75 சதவிகிதம் வெப்பமயமாதல் குறைவதை உணர முடியுமாம். மேலும், வெப்பமயமாதலை குறைக்க ஆட்டோமொபைல் சாதனங்களை குறைப்பது, அதன் உற்பத்தியை நிறுத்தவது போன்ற நடவடிக்கைகளை எடுக்காமல் இதன் மூலமாகவே எளிதாக குறைக்கலாமாம். அமெரிக்கர்கள் இறைச்சியை வாங்க ஆர்வம் காட்டும் அளவுக்கு காய்கறிகளை வாங்குவதில்லை.
சில சுவாரிஸ்யமான தகவல்கள்
குழந்தை உருவம் கொண்ட இந்த காஸ்பர் ரோபோ, ஆட்டிசம் என்னும் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கும், மன இருக்கத்தில் இருக்கும் சாதாரண குழந்தைகளுக்கும் சிகிச்சை அளிக்கிறது. லண்டனைச் சேர்ந்த பிரபல மருத்துவர் பென் ராபின்ஸ், இந்த ரோபோவை உருவாக்கியுள்ளார்.
ஜோதிடத்திலும், மக்கள் பேச்சு வழக்கிலும் சனிக்கு நல்ல பெயர் கிடையாது. மக்கள் வாயில் அதிகமாக வசைபாடப்படும் ஒரு கிரகம் சனி. ஆனால் அறிவியலில் ஆச்சரியம் மிகுந்தது மட்டுமல்ல, மிகுந்த வளம் மிக்கதும் கூட. அண்மையில் வெளியான ஆய்வில் வெளிவந்த உண்மையை கேட்டால் அப்படியே ஆச்சரியத்தில் வாயைப் பிளப்பீர்கள்... ஆம், நாம் அன்றாடம் வசை பாடும் சனி கிரகத்தில் ஆண்டுதோறும் வைர மழை பொழியுமாம்.. இது குறித்து விஞ்ஞானிகள் கூறுகையில், சனி, யுரேனஸ், நெப்டியூன் கிரகங்களில் காணப்படும் அதிக அழுத்தம் காரணமாக கார்பன் அணுக்கள் அப்படியே படிகங்களாக மாறி விடுமாம். கார்பன் அணு படிகம் என்பது வைரமன்றி வேறில்லை என்பது விபரமறிந்தவர்களுக்கு தெரியும். இதை ஒரு குட்டி ஆய்வகத்தில் வைத்து பரிசோதித்தும் பார்த்துள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் சனி கிரகத்தில் அழுத்ததில் ஏற்படும் மாற்றம் காரணமாக இது போல எக்கச்சக்கமான வைர மழை பொழியுமாம். அதாவது சுமார் 2.2 மில்லியன் பவுண்டுக்கும் அதிகமானவை அவை என்கின்றனர் விஞ்ஞானிகள்.
இயற்கை எப்போதும் விநோதங்களை தன்னுள்ளே கொண்டுள்ளது. அதில் போபாப் எனப்படும் மரமும் ஒன்று. இந்த மரத்தில் அப்படி என்ன அதிசயம் என்கிறீர்களா... தென் ஆப்பிரிக்காவில் உள்ள மடகாஸ்கர் தீவில் இவ்வகை மரங்கள் காணப்படுகின்றன. இவை சுமார் 5 ஆயிரம் ஆண்டுகள் வாழக் கூடியவை. போபாப் (Baobab) என்ற இந்த மரங்களை அங்கே Gentle Giants என்கின்றனர். இந்த மரத்தின் சிறப்பு என்னவென்றால் வறட்சியை தாக்குபிடித்து வளர்பவை. அதே நேரத்தில் மண்ணிலிருந்து எடுக்கும் நீரை இந்த மரங்கள் சேமித்து வைத்துக் கொள்கின்றன. மழை இல்லாத வறண்ட காலங்களில் அப்பகுதி மக்கள் இந்த மரத்தில் துளை போட்டு நீரை எடுத்துக் கொள்கின்றனர் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்... சிலர் இவற்றை தமிழகத்துக்கும் கொண்டு வந்தனர். மதுரை பார்ச்சூன் ஹோட்டல், பெங்களூரு அருகே சாவனூரில் 500 ஆண்டுகள் பழமையான மரம், சென்னை அடையாறு தியோசபிகல் வளாகத்தில் பராமரிக்கப்படும் இவற்றை நாம் பார்க்கலாம்.
தொடர்ந்து மணிக்கணக்கில் தனியாக அமர்ந்து டி.வி. பார்க்கும் குழந்தைகளுக்கு அவர்கள் வளர்ந்து பெரியவர்கள் ஆகும் போது பெரிய அளவில் உடல்நலக் கோளாறு ஆபத்து ஏற்படும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அதாவது அவர்கள் உடல் எடை அதிகரித்து பருமனாவார்கள் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த ஆய்வில் அறையில் தனியாக அமர்ந்து டி.வி.பார்க்கும் சிறுமிகளில் 30 சதவீதம் பேரின் உடல் எடை அதிகரித்துள்ளதாம்.
நாய்கள் மனித உடலில் உள்ள கரிம சேர்மங்களின் (organic compounds) வாசனையை வைத்து மனித உடல் சரியாக வேலை செய்யவில்லை என கண்டுபிடிக்கும் சக்தி உள்ளது என ஜெர்மனியில் உள்ள ஒரு ஆய்வில் கண்டுபிடித்துள்ளது.உண்மையில் நாய்களுக்கு மனிதனின் புற்று நோயை கண்டறிய முடியும். அத்துடன் விஞ்ஞானிகள் நாய்களை வைத்து நீரிழிவு மற்றும் வலிப்பு நோய்களையும் கண்டறிய முடியுமா என முயற்சி மேற்கொண்டுள்ளனர். இரு ஆச்சரியமான விஷயம் என்ன வென்றால் மனிதர்களுக்கு கைரேகை போல் நாய்க்கு மூக்கில் உள்ள ரேகை ஒவ்வொரு நாய்க்கும் வித்தியாசமாக இருக்கும். மனிதர்களை போலவே நாய்களும் கனவு காணும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்2 months 6 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்2 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.3 months 1 day ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 30-11-2024.
30 Nov 2024 -
சென்னையில் தொடரும் கனமழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து துணை முதல்வர் உதயநிதி நேரில் ஆய்வு
30 Nov 2024சென்னை, தொடரும் கனமழையை அடுத்து எடுக்கப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் துணை முதல்வர் உதயநிதி நேரில் ஆய்வு செய்தார்.
-
பழங்குடியின தலைவரின் கொள்ளுப்பேரன் உயிரிழப்பு
30 Nov 2024 -
பஞ்சாப் எல்லை அருகே டிரோன்கள், போதைப்பொருள் பறிமுதல்
30 Nov 2024சண்டிகர், பாகிஸ்தான் எல்லை அருகே 2 டிரோன்கள் மற்றும் 1.132 கிலோ போதைப்பொருள் எல்லை பாதுகாப்பு படை வீரர்களால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
-
காவல் நிலையம், அதிகாரிகள் மீது தாக்குதல்: மணிப்பூரில் 7 பேர் கைது
30 Nov 2024காக்சிங், மணிப்பூரில் எம்.எல்.ஏ.வின் வீடு உள்ளிட்ட சொத்துகள் மீது தாக்குதல் நடத்தியதற்காக கைது செய்யப்பட்ட 4 பேரை விடுவிக்கக்கோரி இந்த தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் இத
-
அசாமில் நிலநடுக்கம்
30 Nov 2024திஸ்பூர், அசாமில் ரிக்டர் 2.9 அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
மகராஷ்டிரா: முக்கிய இலாகாக்களை ஒதுக்கக்கோரி பா.ஜ.க.வுக்கு ஷிண்டே தரப்பு திடீர் நிபந்தனை: வெளியில் இருந்து ஆதரவு அளிப்பதாக தகவல்
30 Nov 2024மும்பை, முக்கிய இலாகாக்களை தராவிட்டால் அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளிப்போம் என்று பாஜகவுக்கு ஏக்நாத் ஷிண்டே திடீர் நிபந்தனை விதித்துள்ளார்.