முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

தரையில் தூக்கம்

உடலில் தோன்றும் வலிகளுக்கு காரணம் இடுப்பிலும், தோளிலும் ஏற்படும் சீரற்ற தன்மையால் தான். மேலும், தோள்கள், மேல் முதுகு, கீழ் முதுகு, கைகள், கழுத்து எலும்பு, கழுத்தின் அடி பாகம், தலை போன்ற இடங்களில் வலி ஏற்படலாம். முதுகை தரையில் வைத்து படுப்பதால் இடுப்புகளும், தோள்களும் வலி இல்லாமல் இருக்கும். இதனால் மற்ற பகுதிகளில் ஏற்படும் வலிகளும் முற்றிலும் நீங்கும்.

ஒரே நேர்கோட்டில்...

உத்திரகாண்ட் மாநிலத்தில் உள்ள கேதார்நாத், சரியாக புவியிடைக்கோடு (30.7352° N, 79.0669) இல் அமைந்துள்ளது. கேதார்நாத்திலிருந்து 221 கி.மீ தூரத்தில் ரிஷிகேஷ் ரயில் நிலையம், அடுத்து 14 கி.மீட்டர் தள்ளி உள்ள காலேஷ்வரம் இவை அனைத்தும் ஒரே நேர் கோட்டில் அரிதாக அமைந்துள்ளது.

அதிசய ரயில்

ஹரியானா மாநிலத்தில் இருந்து இமாச்சல பிரதேசத்ரதிற்கு ஒரு ரயில் இயக்கப்படுகிறது. டிசம்பரில், இந்த ரயில் தண்டவாளப்பாதை பனிக்கட்டிகளால் மூடப்பட்டிருந்தாலும் இந்த ரயில் தடையில்லாமல் 365 நாட்களும் ஓடக்கூடியதாகவுள்ளது. பனிக்கட்டிகள் தண்டவாளத்தில் விழுந்தாலும் அதனை அப்புறப்படுத்தும் நவீன கருவிகளுடன் இந்த ரயில்கள் இயக்கப்படுகின்றன.இந்த ரயில் பாதை  ஐ.நா. பாரம்பரிய பாதுகாப்பு பட்டியலிலும் இடம் பெற்றுள்ளது. தற்போது தேசிய தலைநகர் டெல்லி, பஞ்சாப், ஜம்மு-காஷ்மீர், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கடுமையான பனிப்பொழிவு காணப்படுகிறது. இந்த நிலையில், பல ரயில்கள் பல மணி நேரம் தாமதமாகவும், சில ரயில்கள் ரத்தும் செய்யப்படுகின்றன. இந்த நிலையில் ஹரியானா - இமாசலப்பிரதேச ரயில் சிறப்பு மிக்கதாக திகழ்கிறது.

பூமி சூரியனை சுற்றும் நாள்களை பண்டைய காலத்தில் கணக்கிட்டவர் யார் தெரியுமா?

இன்றைய நவீன அறிவியல்தான் பூமி சூரியனை சுற்றி வருகிறது என நம்ப வைக்கப்பட்டுள்ளோம். ஆனால் நவீன அறிவியலுக்கு முன்பே இந்தியாவின் பல்வேறு அறிஞர்களும், ஞானிகளும் இதை முறையாக கூறியதுடன், அதை கணக்கிட்டும் கூறியுள்ளனர். அதில் மிகவும் முக்கியமானவர் பாஸ்கர ஆச்சார்யா. கணிதவியல் அறிஞராகவும், வானியல் அறிஞராகவும் திகழ்ந்த அவர் நவீன அறியவியலுக்கு முன்பாகவே பூமி சூரியனை சுற்றி வரும் காலத்தை துல்லியமாக கணித்து சொன்னவர்.  அன்றைக்கு அவரது கணக்கீட்டின் படி, 365.258756484 நாட்கள் என தெரியவந்தது. நவீன அறிவியலில் அது 365.2564 நாள்கள் என கணக்கிடப்பட்டது. இரண்டுக்கும் இடையிலான வேறுபாடு வெறும் 0.0002 சதவீதம் மட்டுமே என்பது ஆச்சரியம் தானே.

டீசல் என்ஜின் என ஏன் பெயர் வந்தது

ருடால்ஃப் டீசல் பிரான்ஸில் 1858 இல் ஜெர்மனியில் பிறந்தார். பிரெஞ்ச் - பிரஷ்யா போரின்போது பிரான்ஸில் இருந்து வெளியேற்றப்பட்டு இங்கிலாந்தில் இவரது பெற்றோர் குடியேறினர். படிப்பைத் தொடர்வதற்காக டீசல் மட்டும் பிரான்ஸில் இருந்த உறவினர் வீட்டுக்கு அனுப்பப்பட்டார். பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு ஜெர்மனியில் உள்ள முனீச் நகரில் உள்ள ராயல் பவேரியன் தொழில்நுட்பப் பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார். உடல்நலம் குன்றியதால் 1879-ல் படிப்பைத் தொடரமுடியவில்லை. இன்ஜின்கள் குறித்து டீசல் ஆராய்ந்தார். 10 ஆண்டுகளுக்கு மேலாக உழைத்து விதவிதமான இன்ஜின்களை வடிவமைத்தார். நீராவி இன்ஜினில் 90 சதவீத எரிபொருள் வீணாவதைக் கண்டறிந்தார். இறுதியில் நீராவி இன்ஜினுக்கு மாற்றாக ‘கம்ப்ரெஷன் இக்னிஷன்’ இன்ஜினை கண்டுபிடித்தார். அதுவே அவரது பெயரில் டீசல் இன்ஜின் எனப்படுகிறது. டீசல் இன்ஜின் கண்டுபிடிப்பு குறித்த ஆய்வுக் கட்டுரையை 1886-ல் வெளியிட்டார். 1913-ல் ருடால்ஃப் டீசல் திடீரென காணாமல் போனதாகவும், ஒரு வாரம் கழித்து அவரது உடல் நார்வே அருகே வடகடலில் கண்டெடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. டீசல் இன்ஜினை உருவாக்கிய டீசல் 55 ஆவது வயதில் மறைந்தார்.

புதுமையான உணவு

பின்லாந்தில் உள்ள வி.டி.டி. தொழில் நுட்ப ஆராய்ச்சி மையம், லபீர்னந்தா தொழில் நுட்ப பல்கலைக்கழக விஞ்ஞானிகள், காற்றில் இருந்து கார்பன்டை ஆக்சைடை பிரித்து எடுத்து அதிலிருந்து புரோடீன் பவுடர் தயாரித்துள்ளனர். இதை மனிதர்கள்,  விலங்குகள் உணவு பொருளாக பயன்படுத்த முடியுமாம். இந்த புரோடீன் பவுடரை மின்சாரத்துடன் சேர்த்து எங்கு பயன்படுத்தினாலும் அது உணவுப் பொருளாக கார்பன்டை ஆக்சைடு மற்றும் மின்சாரத்துடன் சேர்ந்து தயாரிக்கப்படும் புரோடீன் பவுடர் 10 மடங்கு அதிக ஒளிச்சேர்க்கையை ஏற்படுத்தி காய்கள் மற்றும் பழங்கள் உள்ளிட்ட உணவு பயிர்களின் மகசூலை அதிகரிக்கும் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 4 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 4 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 4 days ago