முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எங்களை சோதிக்க வேண்டாம்: ஈரான் - இஸ்ரேல் மோதல் முற்றுகிறது

திங்கட்கிழமை, 19 பெப்ரவரி 2018      உலகம்
Image Unavailable

டெல்அவிவ், இஸ்ரேலை சோதிக்க வேண்டாம் என அந்நாட்டு பிரதமர் நெதன்யாகு ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இம்மாத தொடக்கத்தில் ஈரானிலிருந்து ஆளில்லா விமானத்தின் பாகம் இஸ்ரேல் எல்லையில் விழுந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இதுகுறித்து இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஞாயிறன்று நடந்த பாதுகாப்பு கருத்தரங்கில் பேசும்போது, "இஸ்ரேல் தனது எல்லையில் பயங்கரவாதத்தை நுழைய அனுமதிக்காது. ஒருவேளை தேவை ஏற்பட்டால் ஈரானில் பிரதிநிதிகளுக்கு எதிராக மட்டும் அல்ல ஈரானுக்கு எதிராகவும் நாங்கள் செயல்படுவோம். இஸ்ரேலை சோதிக்க வேண்டாம்" என்றார்.

ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் முகமத் ஜாவத் இஸ்ரேல் குற்றச்சாட்டு குறித்து கூறும்போது, "கேலி சித்தரம் பதில் அளிப்பதற்கு கூட தகுதி இல்லாதது" என்று கூறினார்.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஈரான் தீவிரவாதச் செயல்களை ஆதாரிக்கிறது என்று அமெரிக்கா, சவுதி ஆகிய அந்நாட்டு மீது கடும் விமர்சனங்களை தொடுத்து வருகின்றன.

இந்த நிலையில் ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் மோதல் போக்கு அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 18 hours 46 sec ago இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 18 hours 14 min ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 months 16 hours ago
வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 months 16 hours ago ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 2 months 16 hours ago தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து