முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

ஷாம்பூவை உலகுக்கு அறிமுகப்படுத்திய நாடு

இன்று உலகம் முழுவதும் நவீன பேஷன் விரும்பிகளை ஆட்டி படைத்துவரும் பொருள்களில் முதன்மையானது தலை கேசத்துக்கு பயன்படும் ஷாம்பூ. இது முதன்முதலில் எந்த நாட்டில் பயன்படுத்தப்பட்டது தெரியுமா.. இந்தியாவில்தான். பண்டைய இந்தியாவில் மக்கள் நெல்லிக்காய், பூந்திகொட்டை உள்ளிட்ட பல்வேறு மூலிகைகளை பயன்படுத்தி தங்களது கேசத்தை பராமரித்து வந்தனர்.  இந்த வகை பயன்பாடு இன்றும் இந்தியா முழுவதும் பரவலாக மக்கள் மத்தியில் காணப்படுகிறது. இதுதான் பின்னர் வணிக ரீதியாக வெளநாடுகளுக்கு சென்று ஷாம்பூவாக மீண்டும் இந்தியாவுக்குள் வந்துள்ளது. ஷாம்பூ என்ற வார்த்தையே இந்திய வார்த்தையான சாம்போ என்பதில் இருந்து தோன்றியதாகும் என்றால் ஆச்சரியம் தானே..

சென்னை மாநகராட்சி எப்போது தொடங்கப்பட்டது

சென்னைக்கென ஒரு நகர நிர்வாக அமைப்பை உருவாக்க வேண்டுமென வலியுறுத்தி 1687 செப்டம்பர் 28 ஆம் தேதி புனித ஜார்ஜ் கோட்டையிலிருந்த அதிகாரிகளுக்கு விரிவான கடிதம் ஒன்றை எழுதினார் கிழக்கிந்திய கம்பெனியின் ஆளுநர் ஜோசையா சைல்ட். மூன்று மாதங்களுக்குப் பிறகு ஜோசையா சைல்டும் துணை ஆளுநர் ஒருவரும் இங்கிலாந்து சென்று மன்னர் இரண்டாம் ஜேம்சைச் சந்தித்து இது குறித்து விவாதித்தனர். முடிவில், அதே ஆண்டு டிசம்பர் 30ஆம் தேதி சென்னையை மாநகராட்சியாக அறிவித்து, அரச பிரகடனத்தை வெளியிட்டார் இரண்டாம் ஜேம்ஸ். அதை தொடர்ந்து 1688 செப்டம்பர் 29ஆம் தேதி மன்னரின் ஆணை அமலுக்கு வந்தது. ஒரு மேயர், ஆல்டர்மென் எனப்படும் 12 கவுன்சிலர்கள், பர்ஜெஸ் எனப்படும் பிரதிநிதிகள் (60 முதல் 100 பேர்வரை) ஆகியோருடன் சென்னை மாநகராட்சி உருவாக்கப்பட்டது. ஆல்டர்மென் எனப்படும் கவுன்சிலர்கள் பிரிட்டிஷ், பிரெஞ்ச், இந்திய வர்த்தக சமூகத்திலிருந்து தேர்வுசெய்யப்பட்டு மேயரால் நியமிக்கப்பட்டனர். நத்தேனியல் ஹிக்கின்சன் சென்னை மாநகராட்சியின் முதல் மேயராக நியமிக்கப்பட்டார்.

உலகிலேயே அதிகமான பிரமிடுகள் எந்த நாட்டில் அமைந்துள்ளன?

பிரமிடுகள் என்றாலே நமக்கு நினைவக்கு வருவது எகிப்துதான். பிரமிடுகளும் அதில் வைக்கப்பட்டுள்ள மம்மி எனப்படும் பழங்கால சடலங்களும் உலகம் முழுவதும் வியப்பை ஏற்படுத்துபவையாகும். ஆனால் உலகிலேயே அதிகமாக பிரமிடுகள் உள்ள நாடு எகிப்து என்று நீங்கள் நினைப்பீர்களேயானால்.. அது முற்றிலும் தவறு. அதிகமான பிரமிடுகள் உள்ள நாடு சூடான் தான். எகிப்து நாட்டில் 138 பிரமிடுகள் உள்ளன என்றால் சூடானில் 244 பிரமிடுகள் உள்ளன. சூடான் நாடு நைல் நதி நாகரிகத்துக்கு மிகவும் எடுத்துக்காட்டான நாடாகும். கிபி 1070 தொடங்கி கிமு 350 வரையிலும் குஷார்களின் ஆட்சியின் கீழ் இருந்தது. அவர்கள்தான் சூடானில் பிரமிடுகளை உருவாக்கினர். எகிப்து பிரமிடுகளின் உயரம் சுமார் 400 அடி என்றால் சூடானில் அவை சுமார் 100 அடி கொண்டவையாக அமைக்கப்பட்டிருந்தன.

'காயம்' ஆற்றும்

எலெக்ட்ரான் மூலம் மனித உடலில் ஏற்படும் காயங்களை ஆற்றும் புதிய முறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய முறையின் மூலம் உடலின் செல் வளர்ச்சியைத் தூண்டி காயங்களை விரைவில் ஆற்ற முடியும் என்று நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.இந்த கருவிகள் உடல் வெப்பத்தின் மூலம் இயங்கும்வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ’எலெட்க்ட்ரோ ஆக்டிவ் பாண்டேஜ்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த முறை மனித உடலில் ஏற்படும் காயங்களை விரைவில் ஆற்றும் வலிமை பெற்றது என்று விஞ்ஞானிகள் சோதனை மூலம் நிரூபித்துள்ளனர்.

சமோசா விற்க ...

மகாராஷ்டிராவை சேர்ந்த முனாப் கபாடியா, தனது தாயார் நபிசா செய்யும் மட்டன் சமோசா மற்றும் உணவுப் பண்டங்களைக்கொண்டு உணவகம் ஒன்றைத் தொடங்க போஹ்ரி கிட்சென் என்ற பெயரில் உணவகம் ஒன்றை மும்பையில் திறந்தார். தனது உணவகத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்ததும் தான் பணிபுரிந்த கூகுள் நிறுவனத்திலிருந்து வேலையை ராஜினாமா செய்து விட்டார்.

தூக்கமின்மை

பெண்களுக்குத் தூக்கம் குறையும்போது, ஆரம்பத்தில் கண் எரிச்சல், தலைவலி, மைக்ரேன் எனப்படும் தீராத தலைவலி ஏற்படும். இவை தொடர்ந்து நீடிக்கும்பட்சத்தில் குழந்தையின்மை போன்ற பெரிய பிரச்சனைகளுக்கு ஆரம்பமாக அமைந்துவிடும். கண்டுகொள்ளாமல் விட்டாலோ, சில ஆண்டுகளிலேயே ரத்த அழுத்தம், இதயநோய், பக்கவாதம், நீரிழிவு வரை கொண்டு சென்று விடும் ஆபத்து அதிகம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்