முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போடி மலை கிராமத்திற்கு குதிரை மூலம் வாக்கு பதிவு இயந்திரங்கள்

புதன்கிழமை, 17 ஏப்ரல் 2019      தேனி
Image Unavailable

போடி, -     போடி அருகே மலை கிராமத்திற்கு குதிரை மூலம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டன.
     தேனி மக்களவை தொகுதிக்குட்பட்ட போடிநாயக்கனூர் சட்டப்பேரவை தொகுதியில் கொட்டகுடி-263, குரங்கணி 489, கொழுக்குமலை 145, காரிப்பட்டி 141, சென்ட்ரல் ஸ்டேசன் 146, டாப் ஸ்டேசன் 148, போடிமெட்டு 624, அகமலை 677, ஊரடி-ஊத்துக்காடு 452, கண்ணக்கரை 194, முந்தல் 833, முந்தல் காலனி 818  என 4 ஆயிரத்து 970 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இந்த 12  வாக்குச் சாவடிகளுக்கு 8 மண்டல அலுவலர்கள் நியமிக்கப்பட்டு வாக்குப்பதிவு இயந்திரங்கள் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன.
     இதில் போடி அருகே உள்ள சென்ட்ரல் ஸ்டேசன், ஊத்துக்காடு ஆகிய மலை கிராமங்களுக்கு வாகனங்கள் செல்ல முடியாது. சென்ட்ரல் ஸ்டேசன் வாக்குச்சாவடியில் 186 வாக்காளர்களும், ஊத்துக்காடு வாக்குச்சாவடியில் 452வாக்காளர்களும் வாக்களிக்க உள்ளனர். சென்ட்ரல் ஸ்டேசனில் 99 ஆண் வாக்காளர்களும், 87 பெண் வாக்காளர்களும் உள்ளனர்.
     சென்ட்ரல் ஸ்டேசன் மலை கிராம வாக்குச்சாவடிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் குரங்கனி மலை கிராமத்திற்கு லாரி மூலம் கொண்டுவரப்பட்டு பின்னர் குதிரை மூலம் சென்ட்ரல் ஸ்டேசன் வாக்குச்சாவடிக்கு
கொண்டு செல்லப்பட்டது.  வாக்குப் பதிவு  இயந்திரங்கள் குதிரையில் கொண்டு செல்ல ஏற்பாடு செய்தபோது  பலத்த மழை  பெய்தது. இதனால் வாக்கு பதிவு இயந்திரங்கள் பிளாஸ்டிக் பைகளில் சுற்றப்பட்டு பாதுகாப்புடன் குதிரைகளில் ஏற்றப்பட்டது.
     குதிரை மூலம் செல்லும்போதும் நல்ல மழை பெய்தது. கொட்டும் மழையுடனே  வாக்குப் பதிவு இயந்திரங்கள் சென்ட்ரல் ஸ்டேசன் மலை கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.  இப்பகுதி நக்சல் தடுப்பு பிரிவு போலீஸாரின் கண்காணிப்பில் உள்ளதால் பலத்த பாதுகாப்புடன் இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டன. வாக்குப்பதிவு இயந்திரத்துடன் மண்டல அலுவலர் பெருமாள், சிறப்பு சார்பு ஆய்வாளர் கண்ணன், மற்றும் துப்பாக்கி
ஏந்திய போலீஸார் உடன் சென்றனர்.  போடி நகர் காவல் நிலைய ஆய்வாளர் ஷாஜகான்  தலைமையில் போலீஸார் குரங்கணி பகுதியில் வாக்குச்சாவடிகளை பாதுகாப்புடன் அனுப்பி வைத்தனர்.  
     இதனிடையே தமிழக கேரள எல்லை பகுதியில் உள்ள போடிமெட்டு மலை கிராமத்திற்கு ஜீப் மூலம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. மேலும் தமிழக கேரள எல்லையில் உள்ள டாப்-ஸ்டேசன், கொழுக்குமலை ஆகிய மலை கிராமங்களுக்கு கேரளம் வழியாக வாக்குப் பதிவு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் ஜீப் மூலம் கொண்டு செல்லப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 18 hours 46 sec ago இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 18 hours 14 min ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 months 16 hours ago
வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 months 16 hours ago ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 2 months 16 hours ago தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து