முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

3-ம் கட்ட பாராளுமன்ற தேர்தல்: 60.97 சதவிகிதம் வாக்குப்பதிவு

செவ்வாய்க்கிழமை, 7 மே 2024      இந்தியா
Voting-machin 2024-04-10

Source: provided

புதுடெல்லி : பாராளுமன்ற மக்களவை தேர்தலின் 3-ம் கட்ட வாக்குப் பதிவில் ஏறத்தாழ 60.97 சதவிகிதம் வாக்குப் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக அஸ்ஸாமில் 75.01 சதவிகிதமும் குறைந்தபட்சமாக மகாராஷ்டிரத்தில் 53.95 சதவிகிதமும் வாக்குப்பதிவாகியுள்ளது.

3-ம் கட்ட வாக்குப் பதிவு நேற்று 13 மாநிலங்களில் உள்ள 95 தொகுதிகளுக்கு நடைபெற்றது. காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப் பதிவு மாலை 6 மணிக்கு நிறைவுற்றது. தேர்தல் நடைபெற்ற மாநிலங்களில் பதிவான வாக்குப்பதிவு விவரங்கள் வருமாறு., 

பிகாரில் 56.55 சதவிகித வாக்குப் பதிவு,  சத்தீஸ்கரில் 66.94 சதவிகித வாக்குப் பதிவு, கோவாவில் 74 சதவிகித வாக்குப் பதிவு, குஜராத்தில் 56.21 சதவிகித வாக்குப் பதிவு, - கர்நாடகத்தில் 66.80 சதவிகித வாக்குப் பதிவு, மத்திய பிரதேசத்தில் 62.79 சதவிகித வாக்குப் பதிவு,  உத்தரப் பிரதேசத்தில் 57.04 சதவிகித வாக்குப் பதிவு, மேற்கு வங்கத்தில் 73.93 சதவிகித வாக்குப் பதிவு,  யூனியன் பிரதேசமான தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி, டாமன் மற்றும் டையூவில் 65.23 சதவிகிதம் வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 12 hours 46 sec ago இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 hours 14 min ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 months 10 hours ago
வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 months 10 hours ago ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 2 months 10 hours ago தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து