முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கங்கையின் தத்துப்பிள்ளை நான்: பிரதமர் நரேந்திரமோடி உருக்கம்

செவ்வாய்க்கிழமை, 14 மே 2024      இந்தியா
Modi 2024-05-14

Source: provided

வாரணாசி : கங்கை நதியின் தத்துப்பிள்ளை நான் என பிரதமர் மோடி உருக்கமாக தெரிவித்தார்.

உத்தர பிரதேசத்தின் வாரணாசி தொகுதியில் 3-வது முறையாக பிரதமர் மோடி போட்டியிடுகிறார். வருகிற ஜூன் 1-ந்தேதி, 7-வது மற்றும் கடைசி கட்ட தேர்தலின்போது இந்த தொகுதிக்கான வாக்கு பதிவு நடைபெறுகிறது. இந்த தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை நேற்று  பிரதமர் மோடி தாக்கல் செய்தார்.

முன்னதாக, கங்கை நதியில் சிறப்பு பூஜைகள் நடத்தினார். வேத பட்டர்கள் மந்திரம் ஓத, பிரதமர் மோடி கங்கை நதியில் மலர்கள் தூவி வணங்கினார். தொடர்ந்து ஆங்கில தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் பிரதமர் மோடி கூறியதாவது:

கங்கை நதியின் தத்துப்பிள்ளைநான். எனது தாய் மறைவுக்குப்பின் கங்கை குறித்து மிக நெருக்கமாக உணர்கிறேன். கங்கை என்னை வலுப்படுத்தி தேற்றியது. கங்கை நதி தாயை போல் அனைவரையும் காக்கிறது என்றார். தாயை குறித்து பேசும் போது பிரதமர் மோடி கண்கள் கலங்கின. அவரது குரல் தழு தழுத்தது. மேலும்,140 கோடி மக்களுக்காக நான் உழைக்கிறேன். இது கடவுள் உத்தரவு என்றும் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து