முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கருப்புப் பணத்தை மாற்ற உதவி செய்ததாக 27 வங்கி அதிகாரிகள் சஸ்பெண்டு

சனிக்கிழமை, 3 டிசம்பர் 2016      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி - கருப்புப் பணத்தை மாற்றுவதற்கு உதவி புரிந்ததாக எழுந்த புகாரில், 27 மூத்த பொதுத்துறை வங்கி அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், 6 வங்கி அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 

துணைபோன வங்கி அதிகாரிகள் : 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கப்பட்டதையடுத்து, கணக்கில் வராத பணத்தை வங்கிகளில் வரவு வைக்க பலர் முயன்று வரும் நிலையில், அதற்கான கட்டுப்பாடுகளை மத்திய ரிசர்வ் வங்கி விதித்துள்ளது. அதன்படி இரண்டரை லட்சம் ரூபாய்க்கு மேல் வரவு வைப்பவர்களின் வங்கிக் கணக்குகள் வருமான வரித்துறை அதிகாரிகளால் கண்காணிக்கப்படுகிறது.

இந்நிலையில், கணக்கில் வராத கறுப்பு பணத்தை மாற்றுவதற்காக நாடு முழுவதும் பல்வேறு பொதுத்துறை வங்கிகளில் வங்கி அதிகாரிகளே துணைபோன சம்பவங்கள் நடைபெற்றன. இதையொட்டி ஏராளமான, கணக்கில் வராத பணமும் பறிமுதல் செய்யப்பட்டன. இந்நிலையில், நாடு முழுவதும் கணக்கில் வராத பணத்தை வங்கிகளில் வரவு வைப்பது உள்ளிட்ட சட்டவிரோதமான பல்வேறு வங்கி பரிவர்த்தனைகளுக்கு துணைபோன 27 மூத்த பொதுத்துறை வங்கி அதிகாரிகள் பணியினை நீக்கம் செய்யப்பட்டனர். மேலும் 6 வங்கி அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டனர்.

வரிசையில் நிற்கும் மக்கள் தங்கள் பணத்தை எடுக்க முயலும் போது  இதே அதிகாரிகள் பணம் இல்லை என்கிறார்கள். ஆனால் கறுப்பு பண முதலைகளுக்கு கோடி கோடியாக கொடுத்து உதவிசெய்கிறார்கள். வேலியே பயிரை மேய்ந்த  கதையாக உள்ளது என்று பொதுமக்கள் வேதனை படுகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்